இத்தாலி கம்பெனியின் பெயர் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' ! பாவம் ஆப்பிள்.!
ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடி, ஆப்பிள் நிறுவனம் இந்த சகோதரர்களுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில்(Intellectual Property Office) புகாரை தாக்கல்செய்தது.
பலவருட சட்ட போராட்டங்களுக்கு பிறகு, வின்சென்சோ மற்றும் கியாகோமா என்ற இரு சகோதரர்கள் , ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான சட்டரீதியான போரை வெற்றிகரமாக எதிர்கொண்டு, ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரின் பெயரான 'ஸ்டீவ் ஜாப்ஸ்'-ஐ தங்கள் நிறுவனத்தின் பெயராக வைத்துக்கொள்ளும் உரிமையை பெற்றுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் எப்போதும் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் பெயரை ட்ரேட்மார்க்காக பயன்படுத்தவில்லை என இச்சகோதரர்கள் நோட்டீஸ் அனுப்பியதில் இருந்து இந்த மோதல் துவங்கியது. இந்த சகோதரர்கள் ஏற்கனவே பல ஆண்டுகள் செலவழித்து தங்களின் சொந்த பிராண்டு ஆடை அணிகலன் நிறுவனத்தை துவங்கும் ஏற்பாடுகளை செய்து வந்தனர் மற்றும் "ஸ்டீவ் ஜாப்ஸ்" என்ற பெயர் தான் தங்களது புதிய பிராண்டுக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவெடுத்தனர்.

ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடி, ஆப்பிள் நிறுவனம் இந்த சகோதரர்களுக்கு எதிராக ஐரோப்பிய யூனியனின் அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில்(Intellectual Property Office) புகாரை தாக்கல்செய்தது. 'J' என்ற எழுத்தில் ஒரு பக்கத்தில் பாதி கடித்து எடுத்து, மேலே ஆப்பிள் மரத்தின் இலை இருக்கும் "ஸ்டீவ் ஜாப்ஸ்" நிறுவனத்தின் லோகோவை எதிர்த்து மட்டும் புகார் செய்ததால் ஆப்பிள் நிறுவனம் தோல்வியடைந்திருக்கலாம்.எனினும் 'J' என்ற எழுத்து உண்ணத்தக்கது அல்ல, எனவே அதில் உள்ள கடித்தது போன்ற பகுதி ஆப்பிள் நிறுவனத்தின் பிரபல லோகோவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தீர்ப்பளித்த ஐரோப்பிய யூனியன் அறிவுசார் சொத்துரிமை அலுவலகம், அந்த சகோதரர்களின் ட்ரேட்மார்க் லோகோவை உறுதிசெய்தது.

ஃபேக், டி சர்ட், ஜீன்ஸ் மற்றும் இதர பேஷன் அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை, " ஸ்டீவ் ஜாப்ஸ்" என்ற பிராண்ட் பெயரிலேயே தொடரவுள்ளனர் இந்த இத்தாலிய சகோதரர்கள். எந்தவொரு குறிப்பிட்ட திட்டத்தையும் இவர்கள் வெளியிடாத நிலையில், ஸ்டீவ்ஜாப்ஸ் என்ற பிராண்டில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் வெளியிடவுள்ளதாக இச்சகோதரர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். ஆக, வரும் நாட்களில் கூடிய விரைவில் கடைகளில் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் ஐபோனுடன், ஸ்டீவ்ஜாப்ஸ் பிராண்ட் போன்கள் விற்பனையில் போட்டியிடப்போகின்றன!


Click it and Unblock the Notifications