மக்களை முட்டாளாக்கும் பள்ளி,கல்லூரிகள் : ஸ்டீவ்ஜாப்ஸ்.!

சிறு வயதில் இருந்த போது கிடைத்த வகுப்பறை கல்வி பற்றிய அவரது எண்ணம், வயதான பிறகும், ஒரு தந்தையாகவும் கூட மாறாமல் அப்படியே இருந்தது.

|

பிரபல நிறுவனமான ஆப்பிளின் இணை நிறுவனரான ஸ்டீவ்ஜாப்ஸ் பட்டம் பெறாதவர் மற்றும் கல்லாரிக்கு கூட செல்லாதவர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் பயனற்ற இடங்கள் என நம்பிய அவர், அதனால் பாதியிலேயே படிப்பை கைவிட்டார். சிறு வயதில் இருந்த போது கிடைத்த வகுப்பறை கல்வி பற்றிய அவரது எண்ணம், வயதான பிறகும், ஒரு தந்தையாகவும் கூட மாறாமல் அப்படியே இருந்தது. அவரது மகள் லிசா- பிரனென் ஜாப்ஸ் எழுதிய புத்தகத்தில் தனது தந்தை எனது கல்வியை பற்றி எப்போது அக்கறை எடுத்துக்கொண்டதே இல்லை என கூறியுள்ளார்.

மக்களை முட்டாளாக்கும் பள்ளி,கல்லூரிகள் : ஸ்டீவ்ஜாப்ஸ்.!

கல்லாரி கல்வி மக்களை 'போஷோ'க்கள் ஆக்கிவிடும் என ஜாப்ஸ் நம்பியதாக லிசா தனது புத்தகமான 'ஸ்மால் ஃப்ரை'-ல் எழுதியுள்ளார்.ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மிகவும் விருப்பமான போஷோ என்ற வார்த்தைக்கு முட்டாள் அல்லது புத்தியில்லாத எனப்பொருள். ஜாப்ஸ் அடிக்கடி இதை சொல்ல விரும்புகிறார் என்பதை லிசா மட்டும் சொல்லவில்லை. ஜாப்ஸ்-ன் அதிகாரப்பூர்வ பயோகிராபரான வால்டர் ஐசக்சனும் தனது புத்தகமான ஸ்டீவ்ஜாப்ஸ்-ல் அவரது விருப்பத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டீவ்ஜாப்ஸ்

ஸ்டீவ்ஜாப்ஸ்

பல்வேறு சூழ்நிலைகளில், ஸ்டீவ்ஜாப்ஸ் தனது மகள் லிசாவிடம் தனக்கு முறையான கல்வியில் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார். ஒரு முறை லிசா அவரது தாயுடன் வசித்து வந்த நிலையில், ஜாப்ஸ் லிசாவுடன் ஸ்டேன்போர்டு பல்கலைகழகத்திற்கு ஸ்கேட்டிங் சென்றார்.அங்கிருந்து திரும்பும்போது கல்லூரி கல்வி கற்பனைத்திறனை கொல்வதாக மகளிடம் கூறியுள்ளார் ஸ்டீவ்."உன்னுடைய மிக முக்கியமான வளர்ச்சி ஆண்டுகளில்,எப்படி மற்றவர்கள் யோசிப்பார்கள் என அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். அது உனது கற்பனைத்திறனை கொன்று, உன்னை போஷோ ஆக்கிவிடும்" எனக்கூறுகிறார்.

ஆசிரியர் லீ சல்ட்

ஆசிரியர் லீ சல்ட்

மற்றொரு சம்பவத்தில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் லிசாவின் 7ம் வகுப்பு ஆசிரியர் லீ சல்ட் உடன் பேசும் போது நடுநிலைப்பள்ளி ஒரு மோசமான இடம் என நகைச்சுவையாக கூறினார்." பொதுவாகவே நடுநிலைப்பள்ளி மிகவும் மோசமானவை என நான் நினைக்கிறேன். இவை குழந்தைகளுக்கு உலக அறிவை வழங்கினால் சிறந்த இடமாக இருந்திருக்கலாம். ஆனால் இவை விதிவிலக்கானவை" என்கிறார்.

 கல்லூரி

கல்லூரி

எப்போதெல்லாம் ஸ்டீவ்ஜாப்ஸ் கல்லூரி பற்றி பேசுகிறாரோ, அப்போது ஏதோ தனக்கு தேவையில்லாத ஒன்று போல அலட்சியமாக பேசுவார் என லிசா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நமது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறுவதற்கு எதிர்மாறாக, பள்ளியில் நடைபெறும் கூடுதல் திறன் வளர்ப்பு வகுப்புகளில் நம்பிக்கையில்லாதவர். இதேதான் லிசா பேச்சுப்போட்டியில் பங்கேற்க இரவு வரை வெளியே இருந்தபோதும் எதிரொளித்தது. இந்த உண்மையை லிசா தனது தந்தையிடம் வெளிப்படுத்திய உடன், " உன்னுடைய வாழ்க்கையில் பட்டிமன்றம் நடத்தி,அதை உனக்கு தேவையான போது பயன்படுத்த சேமித்து வை" என்றார்.

நேரம்

நேரம்

ஆச்சர்யமளிக்கும் வகையில், லிசா பள்ளி மற்றும் அது சம்மந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிக நேரம் செலவளித்தபோது, குடும்பத்திற்கு நேரம் செலவளிப்பதில்லை என திட்டியிருக்கிறார் ஜாப்ஸ். மகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியவில்லை என்பதால் அவர் அப்படி செய்திருக்கலாம் என தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் லிசா.

செமஸ்டர்

செமஸ்டர்

மற்ற நிறுவனங்களில் சி.ஈ.ஓ-க்களை போல இல்லாமல், ஸ்டீவ்ஜாப்ஸ் தொழில்நுட்ப பின்னணியில் இருந்து வரவில்லை. கல்லூரியில் ஆங்கில படிப்பில் சேர்ந்த இவர் ,தனது தத்தெடுத்த பெற்றேரின் பணத்தை வீணாக்க விரும்பாமல் ஒரு செமஸ்டர்-க்கு பிறகு படிப்பை கைவிட்டார். அதற்குபின்னர், கார்களை மறுகட்டமைப்பு செய்யவும், பல்வேறு வீடடு உபயோகப்பொருட்களை சரிசெய்யவும் தனது தந்தைக்கு உதவினார். இவற்றின் மூலம் பின்னாளில் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

Best Mobiles in India

English summary
Steve Jobs believed schools and colleges made people bozos, didn't care for daughter's education: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X