அடி தூள்: ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்: சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்.!

|

இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஒரு முக்கியமான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி நேற்று சட்டசபையில் அறிவித்தார். இப்போது அது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

1000 ரூபாய் பணம்

1000 ரூபாய் பணம்

அதாவது தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கரும்புடன் சேர்த்து 1000 ரூபாய் பணம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த பொங்கல் பரிசுக்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.

வாங்க வாங்க உங்களுக்காகத் தான் வெயிட்டிங்: பட்ஜெட் விலை போனின் படத்தை லீக் செய்த OnePlus.!வாங்க வாங்க உங்களுக்காகத் தான் வெயிட்டிங்: பட்ஜெட் விலை போனின் படத்தை லீக் செய்த OnePlus.!

கருவிழிகளைப் பயன்படுத்தும் முறை

கருவிழிகளைப் பயன்படுத்தும் முறை

இந்நிலையில் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் ஒரு முக்கியமான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக நேற்று அமைச்சர் சக்கரபாணி சட்டசபையில் அறிவித்தார். அதாவது தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளைப் பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது.

ஷார்ட்ஸ் வீடியோ கிரியேட்டர்களுக்கு நற்செய்தி: பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது YouTube.! எப்போது முதல்?ஷார்ட்ஸ் வீடியோ கிரியேட்டர்களுக்கு நற்செய்தி: பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது YouTube.! எப்போது முதல்?

 அமைச்சர் சக்கரபாணி

தற்போது தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் தான் அமலில் உள்ளது. தற்போது இதை மேம்படுத்தி வருகிறார்கள். கருவிழிகளைப் பயன்படுத்தும் முறையைத் தமிழ்நாடு முழுக்க அமல்படுத்தப் போவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் இருந்து எல்லா நகரத்திலும், மாநகரத்திலும் குறைந்தது ஒரு ரேஷன் கடையிலாவது இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பலனாலும் இதான் நிஜம்! 200MP கேமரா கொண்ட Redmi Note 12 Pro+ போனை பட்ஜெட் விலையில் வாங்கலாம்.!நம்பலனாலும் இதான் நிஜம்! 200MP கேமரா கொண்ட Redmi Note 12 Pro+ போனை பட்ஜெட் விலையில் வாங்கலாம்.!

பயோமெட்ரிக் வேலை செய்யாத சமயங்களில்?

பயோமெட்ரிக் வேலை செய்யாத சமயங்களில்?

இப்போது கைரேகை எடுத்து பொருட்கள் கொடுக்கும் முறை அமலில் உள்ளது. ஆனால் இனிமேல் பயோமெட்ரிக் வேலை செய்யாத சமயங்களில் கண் மூலம் பொருட்களை எளிமையாக வாங்க முடியும். புதிய திட்டத்தின்படி, மக்கள் தங்களது கண்களைக் காட்ட வேண்டும். இதை லேசர் கருவிகள் பதிவு செய்யும். பின்பு கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும்.

இரவோடு இரவாக.. மதுரை, ஓசூர் உட்பட 6 முக்கிய மாவட்டங்களில் Jio 5G அறிமுகம்! இந்த பட்டியலில் உங்கள் ஊர் உள்ளதா?இரவோடு இரவாக.. மதுரை, ஓசூர் உட்பட 6 முக்கிய மாவட்டங்களில் Jio 5G அறிமுகம்! இந்த பட்டியலில் உங்கள் ஊர் உள்ளதா?

பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும்

பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும்

குறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். பின்பு கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. அதேபோல் இந்த திட்டம் சில கிராமங்களில் கூட தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன., 15 வரை எந்த போனும், டிவியும் வாங்காதீங்க: Amazon, Flipkart இடையே நடக்க இருக்கும் போட்டி!ஜன., 15 வரை எந்த போனும், டிவியும் வாங்காதீங்க: Amazon, Flipkart இடையே நடக்க இருக்கும் போட்டி!

வாங்கப்படாத ரேஷன் பொருட்கள்?

வாங்கப்படாத ரேஷன் பொருட்கள்?

அதேபோல் இந்த திட்டம் மூலம் ரேஷன் பொருட்கள் திருடப்படுவது குறையும். பின்பு ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாகக் கூறி ஏமாற்றி வெளியே விற்கும் பழக்கம் குறையும். மேலும் வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் மீண்டும் கிடங்கிற்கே செல்லும் முறையைக் கொண்டு வர முடியும்.

சீன நிறுவனத்தின் வியாபார தந்திரம்.. சரியான நேரத்தில் பிரபல Redmi போன் மீது தரமான விலைக்குறைப்பு!சீன நிறுவனத்தின் வியாபார தந்திரம்.. சரியான நேரத்தில் பிரபல Redmi போன் மீது தரமான விலைக்குறைப்பு!

முற்றிலும் தடுக்கப்படும்

முற்றிலும் தடுக்கப்படும்

குறிப்பாக ரேஷன் பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருவதாகப் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், இந்த கருவிழிகளைப் பயன்படுத்தும் முறை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Steps are being taken to implement IRIS scan in ration shops: Minister Sakkarapani: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X