ஸ்டீபன் ஹாக்கிங்-ன் கடைசி ஆய்வுக்கட்டுரை : பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்கு முடிவு?

பெல்ஜியத்தின் லூவென் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் (KU) தத்துவார்த்த இயற்பியலாளர் தாமஸ் ஹெர்டாக் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் இணைந்து எழுதியுள்ள இந்த புதிய ஆய்வு கட்டுரையில்

|

புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியல் வல்லுநரான ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி இறந்தபோது இன்னும் சில ஆய்வுக்கட்டுரைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். தற்போது அவரது கடைசி படைப்பான பிரபஞ்சம் எப்படி உருவானது மற்றும் பரிணாம வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய காஸ்மாலஜி ஆய்வுக்கட்டுரையை ஜேர்னல் ஆப் ஹை எனர்ஜி பிசிக்ஸ் வெளியிட்டுள்ளது (ஆனால் கருந்துளைகள் மற்ற படைப்புகள் இன்னும் தயாராகி வருகின்றன).

ஸ்டீபன் ஹாக்கிங்-ன் கடைசி ஆய்வுக்கட்டுரை : பிரபஞ்சத்தின்  முடிவு?

பெல்ஜியத்தின் லூவென் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் (KU) தத்துவார்த்த இயற்பியலாளர் தாமஸ் ஹெர்டாக் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் இணைந்து எழுதியுள்ள இந்த புதிய ஆய்வு கட்டுரையில், எடனர்ல் இன்ப்ளேசன் (eternal inflation) என்ற ஒரு வினோதமான கருத்தாக்கத்தை ஆராய முயற்சித்துள்ளனர். இது தவிர்க்க முடியாதது என அந்த கருத்தாக்கம், சில இயற்பியலாளர்களின் கூற்றுப்படி நம் பிரபஞ்சமானது முடிவில்லா பல அண்டங்களில் ஒன்று என கூறுகிறது.

ஹாக்கிங் மற்றும் ஹர்டாக்

ஹாக்கிங் மற்றும் ஹர்டாக்

ஸ்ட்ரிங் கோட்பாட்டின் அடிப்படையில், ஹாக்கிங் மற்றும் ஹர்டாக் இருவரும் எடனர்ல் இன்ப்ளேசன் என்ற ஒன்று இல்லை மற்றும் ஒரே ஒரு பிரபஞ்சம் மட்டுமே உள்ளது என்று வாதிடுகின்றனர். ஆனால் அவர்கள் இன்னும் அடிப்படையான ஒரு விசயத்தை வைத்து நமது பிரபஞ்சம் ஒற்றை தருணத்தில் உருவானது இல்லை என்று கூறுகின்றனர்.

காஸ்மிக் இன்ப்ளேசன் என்றால் என்ன?

காஸ்மிக் இன்ப்ளேசன் என்றால் என்ன?

காஸ்மிக் இன்ப்ளேசன் என்பது பிரபஞ்சம் உருவான அந்த நொடியில் இருந்து அதை விரிவாக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் நீடித்த வளர்ச்சியாகும். 1979 ஆம் ஆண்டு அமெரிக்க தத்துவவியலாளரான ஆலன் குத், பெருவெடிப்பிற்கு பின்னர் விண்வெளி நீட்டிக்கப்பட்டு, பின்னர் குறைவதற்கு முன்னர் பிரபஞ்சத்தின் அளவை மீண்டும் மீண்டும் குறைந்தது 60 தடவை இருமடங்கு அதிகமாக்கியது தான் இன்ப்ளேசன் என்கிறார்.

  இதில் விசித்திரமான என்ன?

இதில் விசித்திரமான என்ன?

ஏன் பிரபஞ்சம் முழுவதும் ஒரு சீராக உள்ளது என்ற முக்கியமான புதிருக்கு இன்ப்ளேசன் விடையளித்துள்ளது. உதாரணமாக, பெருவெடிப்பிற்கு பின்னர் விண்வெளி முழுதும் கதிரியகத்தால், அதாவது காஸ்மிக் மைக்ரோவேவ் பின்புலத்தால் நிரம்பியுள்ளது. இது விண்வெளியின் எல்லா இடங்களிலும் ஒரே வெப்பநிலையை கொண்டுள்ளது. பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் இருந்து மற்றொன்றிற்கு செல்ல 13.8 மில்லியன் ஆண்டுகள் ஆகும் நிலைமில் இது விசித்திரமான ஒன்றாகும்.

எடர்னல் இன்ப்ளேசன் என்றால் என்ன?

எடர்னல் இன்ப்ளேசன் என்றால் என்ன?

இங்கு தான் இன்ப்ளேசன் என்ற கோட்பாடு பிரச்சினைகள் சந்திக்கிறது. எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் திடீரென இன்ப்ளேசன் நிற்கும் என்ற யோசனையை இயற்பியலாளர்கள் விரும்பவில்லை. இன்ப்ளேசன் எதன் மூலம் நடைபெறுகிறது மற்றும் எதனால் அது நின்றது என்பதற்கு வழிமுறையை வகுக்க அவர்கள் விரும்புகின்றனர். பின்னரே ஒரு குவாண்டம் புலம் இதனை இயக்குகிறது என முடிவுக்கு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Stephen Hawkings almost last paper putting an end to the beginning of the universe : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X