Home
News

சர்ச்சையை கிளப்பும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து..!

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்த ஸ்டீபன் ஹோக்கிங் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் என்பதும், அண்டவியல் (cosmology) மற்றும், குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறைகளில் உலகளவில் முக்கிய பங்கு வகிப்பவர் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே ஆகும்.

ஏலியன்கள் மற்றும் பிளாக் ஹோல் எனப்படும் கருங்குழிகள் ஆகியவைகளில் இவருக்கு இருக்கும் ஞானமும், கணிப்புத் துல்லியமும் இவரை ஒரு தீர்கதரசி என்ற நிலைக்கே கொண்டு சென்று விட்டது என்பது தான் நிதர்சனம்..!

கடவுள் என்ற வார்த்தை :

கடவுள் என்ற வார்த்தை :

73 வயது நிரம்பிய அறிவுஜீவியான ஸ்டீபன் ஹோக்கிங் கடவுள் சார்ந்த, கடவுள் என்ற வார்த்தை தொடர்பான எந்தவொரு வாதத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி :

பேட்டி :

சமீபத்தில் ஸ்டீபன் ஹோக்கிங் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் "விஞ்ஞானிகள் கடவுளை நம்ப வேண்டுமா..? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஸ்டீபன் ஹோக்கிங் தன் பாணியில் பதில் அளித்துள்ளார்.

விளக்கம் :

விளக்கம் :

ஸ்டீபன் ஹோக்கிங், "கடவுள் என்ற வார்த்தையை தான் பயன்படுத்தும் போது ஒரு சார்பற்ற உணர்வு தான் எனக்கு ஏற்படுகிறது" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இயற்கையின் விதி :

இயற்கையின் விதி :

மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் உருவாக்கிய இயற்கையின் விதிகள் (the laws of nature) அப்படியான ஒரு உணர்வின் கீழ் தான் உருவானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி :

கேள்வி :

பின் - "மனிதர்கள் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கையை ஒரு நாள் கைவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

அவசியம் தேவை இல்லை :

அவசியம் தேவை இல்லை :

"பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதற்கான தெளிவான விளக்கம் அறிவியல் விதிகளிடம் இருக்கின்ற போது கடவுள் பற்றிய செயலாக்க அவசியம் தேவை இல்லை" என்று பதிலளித்துள்ளார்.

ஏலியன் படையெடுப்பு :

ஏலியன் படையெடுப்பு :

"மனித இனமானது முடிவை அடையுமா.?" என்ற கேள்விக்கு "ஏலியன்களின் படையெடுப்பு அதை நிகழ்த்தும்" என்று வெளிப்படையாக பதில் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 செயற்கை நுண்ணறிவு :

செயற்கை நுண்ணறிவு :

ஆர்ட்டிஃபிஸியல் இன்டெல்லிஜன்ஸ் (Artificial Intelligence - AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தனது கருத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

கம்ப்யூட்டர்கள் :

கம்ப்யூட்டர்கள் :

அப்போது "இனி எல்லாமே கம்ப்யூட்டர் தான். இன்னும் 100 ஆண்டுகளில் மனித இனத்தை கம்ப்யூட்டர்கள் தான் ஆளும்" என்று அவர் கருத்து கூறியுள்ளார்.

கூட்டணி :

கூட்டணி :

அப்படி நடக்கும் போது கம்ப்யூட்டர்கள் இலக்குகளை அடைவதில் நம்முடன் கூட்டணி வைத்து இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மனித இனம் :

மனித இனம் :

உலக அழிவில் மிஞ்சிய மனித இனமானது பிரபஞ்சத்தில் புதிய இடத்தை கண்டுப்பிடிக்கும் என்பதை தான் நம்புவதாகவும் ஸ்டீபன் ஹோக்கிங் கருத்து தெரிவித்துளார்.

 விழிப்புணர்வு :

விழிப்புணர்வு :

மேலும் ஸ்பேஸ் ஃப்ளைட் (Space Flight) என்ற விடயம் சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்த தான் மிகவும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து :

கருத்து :

கடவுள் இல்லை என்று ஸ்டீபன் ஹோக்கிங் கருத்து கூறியுள்ளது இதொன்றும் முதல் முறை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் கலந்து கொண்ட பேட்டி ஒன்றிலும் இதே போன்ற கருத்தை அவர் முன் வைத்தார்.

திருப்திகரமான விளக்கங்கள் :

திருப்திகரமான விளக்கங்கள் :

அந்த பேட்டியில் "அறிவியல் என்ற ஒன்றை புரிந்து கொள்ளாதவரை மட்டும் தான் கடவுள் என்ற ஒன்று நம்பப்பட்டது. பின் அறிவியலிடம் அனைத்திற்கும் திருப்திகரமான விளக்கங்கள் இருப்பத்தின் மூலம் கடவுள் என்ற விடயம் இல்லாமல் போனது" என்று விளக்கமளித்திருந்தார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Stephen Hawking thinks that there is no God and computers will overtake humans in the next 100 years. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X