ஸ்டீபன் ஹாக்கிங் பெயர் சூட்டப்படும் மையம் இதுதான்!

இந்த மையத்தை போராசிரியர் ஹாக்கிங்-ன் முதல் மனைவியான டாக்டர் ஜேன் ஹாக்கிங் புரவலராக உள்ள ஹெட்வே சஃப்லோக் அறக்கட்டளை உருவாக்கிவருகிறது.

|

பல மில்லியன் பவுண்ட் மதிப்புடைய புதிய மூளை காய மையத்திற்கு (brain injury centre) உலகின் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்-ன் பெயர் சூட்டப்படவுள்ளது. இந்த மையத்தை போராசிரியர் ஹாக்கிங்-ன் முதல் மனைவியான டாக்டர் ஜேன் ஹாக்கிங் புரவலராக உள்ள ஹெட்வே சஃப்லோக் அறக்கட்டளை உருவாக்கிவருகிறது.

இப்ஸ்விச் என்ற இடத்தில் கட்டப்படவுள்ள இந்த மையம், மூளை காயம் மற்றும் இதர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்து உதவவுள்ளது. ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் பெயரை இம்மையத்திற்கு சூட்டுவதில் மிகுந்ந மகிழ்ச்சியடைவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மோட்டார் நியூரான் என்ற நோயுடன் வாழ்ந்துவந்தார்

மோட்டார் நியூரான் என்ற நோயுடன் வாழ்ந்துவந்தார்

கடந்த மார்ச் 14 அன்று தனது 76வது வயதில் கேம்பிரிட்ஜில் காலமான ஹாக்கிங், 50 ஆண்டுகளுக்கு மேலாக மோட்டார் நியூரான் என்ற நோயுடன் வாழ்ந்துவந்தார்.

ஹெட்வே சஃப்லோக் அறக்கட்டளை ஸ்டீபன் அவர்களின் பெயரை பயன்படுத்த டாக்டர் ஜேன் ஹாக்கிங்-ஐ அணுகிய போது, அவரும், அவரின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் அனுமதித்தனர்.

ஹெட்வே சஃப்லோக்

ஹெட்வே சஃப்லோக்

ஜேன் ஹாக்கிங் கூறுகையில், "ஹெட்வே சஃப்லோக் அறக்கட்டளையின் புதிய மையத்திற்கு ஸ்டீபன் ஹாக்கிங் பில்டிங் என பெயர் சூட்டுவதில் ,என்னை போலவே ஸ்டீபனும் மகிழ்ச்சியடைவார். நன்கு திட்டமிட்டுள்ள இந்த மையம் நிச்சயம் மூளை காயம் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு சிறந்த சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 3மில்லியன்

3மில்லியன்

இந்த புதிய மையம் சுமார் 3மில்லியன் பவுண்டு செலவில் கட்டப்படவுள்ளதாக ஹெட்வே சஃப்லோக் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் இந்த மையத்தில் உள்ள 24 இல்லத்தில், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாக வாழலாம்.

ஹெலன் ஃபேர்வெதர்

ஹெலன் ஃபேர்வெதர்

இந்த புதிய மையத்தை கட்டுவதற்கான செலவுகளை சமாளிக்க, தற்போதுள்ள ரேன்சம்ஸ் யூரோபார்க் அலுவலகத்தை விற்கப்போவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும் நிதிதிரட்டுதல் மற்றும் பொதுமக்கள் செங்கற்கள் வாங்கித்தரும் முன்னெடுப்புகளையும் செய்து வருகிறது.

இந்த புதிய மையம் 'இன்றியமையாதது' என்கிறார் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி ஹெலன் ஃபேர்வெதர்.

 சஃப்லோக்கில்

சஃப்லோக்கில்

மேலும் அவர் கூறுகையில்," மூளை காயத்திற்கு பின்பான வாழக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் மிகவும் கடினமானது என்பதால் சிலர் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படலாம். எனவே இந்த மையத்தின் மூலம் சஃப்லோக்கில் உள்ள மூளை காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக அறக்கட்டளையால் உதவமுடியும் என நம்புகிறேன்' என தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Stephen Hawking Ipswich brain injury centre to be named after physicist: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X