இன்றுமுதல் கட்டணம்: எஸ்பிஐ பயனர்கள் கவனத்திற்கு- எத்தனை முறை இலவசமாக ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்?

|

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாகும். இதன் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக உணரும் வகையில் இருக்கிறது.

எஸ்பிஐ: இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் விதிமுறைகள்

எஸ்பிஐ: இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் விதிமுறைகள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது ஏடிஎம் மற்றும் கிளைகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் மற்றும் விதிகளை திருத்தியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்த அறிவிப்பு ஜூலை 1 (இன்று)முதல் நடைமுறைக்கு வரும் என உறுதிப்பட தெரிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD) வைத்திருப்போருக்குப் பொருந்தும்.

பூஜ்யம் பேலன்ஸ் சேமிப்பு கணக்கு

பூஜ்யம் பேலன்ஸ் சேமிப்பு கணக்கு

வங்கியில் சேமிக்க விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் இந்த திட்டம் இருக்கிறது. பூஜ்யம் பேலன்ஸ் சேமிப்பு கணக்கை வாடிக்கையாளர்கள் எந்தவொரு எஸ்பிஐ கிளைகளில் திறந்து பயன்பெறலாம். பூஜ்யம் சேமிப்பு கணக்கு என்று குறிப்பிடுவது போல் இதற்கு குறைந்தபட்ச வரம்பு இல்லை அதேசமயத்தில் உச்ச வரம்பு என்பதும் இல்லை.

நான்கு முறை இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம்

நான்கு முறை இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம்

அதேபோல் கட்டண வசூலிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது., எஸ்பிஐ வங்கி பயனர்கள் வங்கி கிளைகளிலோ அல்லது ஏடிஎம் மூலமாக மாதத்திற்கு நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முறையில் வழக்கம்போல் கட்டணம் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரூ.15 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி

ரூ.15 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி

அதேபோல் எஸ்பிஐ ஏடிஎம் இல்லாத பிற ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது இதேபோல் ரூ.15 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செக்புக் பயன்பாட்டுக்கும் விதிகள் நியமிக்கப்பட்டுள்ளது. அது அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் 10 பக்க செக் புக்கை இலவசமாக பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தும் போது ரூ.40 மற்றும் ஜிஎஸ்டி, 25 பக்க செக் பயன்படுத்த ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்த விதிகளில் இருந்து எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம்

ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கி கிளைகளில் பணம் அல்லாத பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் எவ்வித கட்டணமும் விதிக்காது. தங்களது சேமிப்பு கணக்குகளில் இருந்து பிற கிளைகளில் ஸ்லிப் மூலம் ரூ.25000 வரை பணம் எடுக்கலாம் செக் மூலம் ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
State Bank of India's New ATM Cash Withdrawl charges Coming to Effect From Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X