SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு புது வசதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க நிச்சயம் யூஸ் ஆகும்..

|

நீங்கள் எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்டை பயன்படுத்து வரும் ஒரு வாடிக்கையாளர் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது டெபிட் கார்டு பயனர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI தற்பொழுது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு தொலைந்துவிட்டால் இனி நேரடியாக வங்கி சென்று புகார் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக அவசர உதவி தொலைப்பேசி எண்ணை வங்கி வெளியிட்டுள்ளது.

டெபிட் கார்டு தொலைந்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

டெபிட் கார்டு தொலைந்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

கொரோனா தொற்று காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி SBI வங்கி தற்பொழுது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த புதிய வசதியை அறிமுகம் செய்வதாக SBI அறிவித்துள்ளது. உங்களின் டெபிட் கார்டு தொலைந்துவிட்டால் உடனடியாக அந்த கார்டை பிளாக் செய்ய புதிய டெலிபோன் சேவையை வங்கி அறிமுகம் செய்துள்ளது. நிச்சயமாக இந்த சேவை இப்போது மிகவும் அவசியம் தான்.

முதலில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமே இது தான்

முதலில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமே இது தான்

இதன்படி உங்களின் டெபிட் கார்டு தொலைந்துவிட்டால், நீங்கள் உடனே முதலில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் உடனடியாக அதை வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும். பின்னர், தொலைந்து போன உங்களின் டெபிட் கார்டை உடனடியாக பிளாக் செய்ய வேண்டும். இதை செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் அந்த வாங்கி கிளைக்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது.

கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!

இது நிச்சயமாக பாதுகாப்பானது இல்லை.. அதனால் தான் இந்த முடிவு

இது நிச்சயமாக பாதுகாப்பானது இல்லை.. அதனால் தான் இந்த முடிவு

ஆனால், இந்த கொரோனா தொற்று காலத்தில் அப்படி செய்வது பாதுகாப்பானது இல்லை என்பதனால், வங்கி இந்த டெலிபோன் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஏடிஎம் கார்ட்டை பிளாக் செய்வது, புதிய ஏடிஎம் கார்டு தொடர்பான பிரச்சனைகளைத் தெரியப்படுத்த, புதிய டெபிட் கார்ட்களுக்கு எப்படிப் பதிவு செய்வது என்பது போன்ற டெபிட் கார்டு தொடர்பான அனைத்து வகையான சிக்கலுக்கும் நீங்கள் இந்த டெலிபோன் புகார் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த எண்ணை மட்டும் யூஸ் பண்ணுங்க.. போலி எண்களை கூகிளில் தேடாதீர்கள்

இந்த எண்ணை மட்டும் யூஸ் பண்ணுங்க.. போலி எண்களை கூகிளில் தேடாதீர்கள்

இனி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்குச் செல்லாமல் பழைய ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்து, புதிய கார்டு பெற 1800112211 & 18004253800 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை எண்ணை அழைக்கலாம். இந்த எண் மட்டுமே இந்த சேவைக்கான அதிகாரப்பூர்வ எண் என்பதை மறக்க வேண்டாம். கூகிளில் இருந்து வேறு ஏதுனும் போலி எண்களை தேடி எடுத்து சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் 1,00,000 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா?இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் 1,00,000 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா?

வேறு ஏதேனும் வழிகளில் தொலைந்த டெபிட் கார்டை பிளாக் செய்யலாமா?

வேறு ஏதேனும் வழிகளில் தொலைந்த டெபிட் கார்டை பிளாக் செய்யலாமா?

இதனை எஸ்பிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்தபடி அவர்களுக்குத் தேவையான தேவைகளைப் பாதுகாப்பாக நிறைவேற்றிக்கொள்ள வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதேபோல், நீங்கள் உங்கள் தொலைந்த டெபிட் கார்டை நெட் பேங்கிங் மூலமாகவும் பிளாக் செய்ய வழிகள் உள்ளது. அதை எப்படிச் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

நெட் பேங்கிங் மூலம் எப்படி டெபிட் கார்டை பிளாக் செய்வது?

நெட் பேங்கிங் மூலம் எப்படி டெபிட் கார்டை பிளாக் செய்வது?

  • onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வ SBI வங்கியின் இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
  • பின்பு, username மற்றும் password என்டர் செய்து உங்கள் நெட் பேங்கிங் அக்கௌன்ட்டை லாகின் செய்யுங்கள்.
  • பின்னர், e-services என்ற ஆப்ஷனின் கீழ் உள்ள ATM card services என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
  • அதில் காணப்படும் Block ATM என்ற விருப்பத்தை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
  • Google எச்சரிக்கை! ஜோக்கர் வைரஸ்: உடனே இந்த 8 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்.!Google எச்சரிக்கை! ஜோக்கர் வைரஸ்: உடனே இந்த 8 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்.!

    எந்த அக்கவுண்டுடைய டெபிட் கார்டு என்பது முக்கியம்

    எந்த அக்கவுண்டுடைய டெபிட் கார்டு என்பது முக்கியம்

    • பின்னர், காண்பிக்கப்படும் அக்கௌன்ட் விபரங்களில் எந்த அக்கவுண்டுடைய டெபிட் கார்டு என்பதை கிளிக் செய்யவும்.
    • அதன் பின்னர் பிளாக் என்பதை கிளிக் செய்யுங்கள்.
    • அதனைத் தொடர்ந்து, எதற்காக பிளாக் செய்கிறீர்கள் என்பதையும் பதிவு செய்யுங்கள்.
    • இறுதியாகத் தகவல்களை சரிபார்த்துவிட்டு Submit கிளிக் செய்யுங்கள்.
    • OTP அல்லது பாஸ்வோர்டு அவசியம்

      OTP அல்லது பாஸ்வோர்டு அவசியம்

      • உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
      • அதை என்டர் செய்து அல்லது Profile password கொடுத்து confirm என்பதை கிளிக் செய்யவும்.
      • அவ்வளவு தான், உங்களுடைய தொலைந்த டெபிட் கார்டு பிளாக் செய்யப்பட்டுவிடும்.

Best Mobiles in India

English summary
State Bank of India Introduces New Toll-Free Customer Care Numbers For Urgent Banking and Debit Card Services : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X