SBI வங்கியின் ATM பயனர்களுக்கு புதிய கட்டணம்.. GST-ம் கூடவே இருக்கு., எப்போது முதல் தெரியுமா?

|

நீங்கள் ஒரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர் என்றால், கட்டாயம் இந்த செய்தியை முழுமையாகப் படித்து புதிய கட்டான முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அதன் ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டங்களில் சில புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

SBI வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா?

SBI வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா?

இந்த புதிய கட்டண விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தத்தி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உறுதிப்படத் தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD) வைத்திருப்போருக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் SBI வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்கள் என்றால், கட்டாயமாக புதிய கட்டணங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சமூகத்திற்காக செயல்படும் ஒரு முக்கியமான திட்டம் இது தான்

சமூகத்திற்காக செயல்படும் ஒரு முக்கியமான திட்டம் இது தான்

எந்தவொரு கட்டணமும் இன்றி, வங்கியில் சேமிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்த திட்டம் செயல்படுகிறது. அதிலும் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றால் சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்காகவே இத்திட்டம் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூஜ்யம் பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை, மக்கள் நாட்டில் உள்ள அனைத்து SBI வங்கியிலும் திறந்து பயன்பெறலாம்.

வெறும் ரூ.7000க்கு புதிய 5ஜி போன்.. ரியல்மி வெளியிட்ட அட்டகாச தகவல்.. வெயிட் பண்ண முடியலையேப்பா..வெறும் ரூ.7000க்கு புதிய 5ஜி போன்.. ரியல்மி வெளியிட்ட அட்டகாச தகவல்.. வெயிட் பண்ண முடியலையேப்பா..

மாதத்திற்கு 4 முறை இலவச பரிவர்த்தனை

மாதத்திற்கு 4 முறை இலவச பரிவர்த்தனை

எப்படி இந்த கணக்கிற்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை என்பது தேவையில்லையோ, அதேபோல் இதற்கு அதிகபட்ச இருப்புக்கு வரம்பு என்று எந்த வரம்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது பற்றிப் பார்க்கலாம், SBI வங்கியின் பயனர்கள் வங்கி கிளையிலோ அல்லது ATM வழியாகவோ மாதத்திற்கு 4 முறை இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

வரம்பிற்கு மேல் பணம் எடுத்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும்

வரம்பிற்கு மேல் பணம் எடுத்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும்

இது வழக்கம் போல் நடைமுறையில் உள்ள ஒரு விதிமுறையாகும். இது அனைவருக்கும் பொருந்தும்.இந்த வரம்பிற்கு மேல் பணம் எடுக்கப்படும் போது கட்டணம் வசூலிக்கப்படும். நான்கு முறைக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு புது வசதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க நிச்சயம் யூஸ் ஆகும்..SBI டெபிட் கார்டு பயனர்களுக்கு புது வசதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க நிச்சயம் யூஸ் ஆகும்..

எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? செக் புக் பயனர்களுக்கும் கட்டணமா?

எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்? செக் புக் பயனர்களுக்கும் கட்டணமா?

SBI ஏடிஎம் இல்லாமல் அவசரத்திற்குப் பிற வங்கி ஏடிஎம்களை வாடிக்கையாளர் பயன்படுத்தும் போதும் இதே ரூ. 15 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்று SBI தற்பொழுது தெரிவித்துள்ளது.இதேபோல், செக்புக் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு 10 பக்க செக் புத்தகத்தை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவர்களுக்கு மட்டும் வங்கி எந்தவித கட்டணத்தையும் விதிக்காது

இவர்களுக்கு மட்டும் வங்கி எந்தவித கட்டணத்தையும் விதிக்காது

அதற்குப் பின் 10 செக் புக் பக்கத்தைப் பயன்படுத்தும் போது நீங்கள் ரூ. 40 மற்றும் ஜிஎஸ்டி உடன் வழங்க வேண்டும். இதேபோல், 25 பக்க செக் பயன்படுத்த ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி வழங்கப்பட வேண்டும். எமர்ஜென்சி செக் புத்தகத்துக்கு ரூ. 50 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

முக்கிய குறிப்பு என்னவென்றால், மூத்த குடிமக்களுக்கு SBI வங்கி எந்த கட்டணத்தையும் விதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களை எதிரிகளின் கண்களில் சிக்காமல் மறைக்கும் புதிய தொழில்நுட்பம்.. இஸ்ரேல் சோதனை..அடுத்து யார் தெரியுமா?வீரர்களை எதிரிகளின் கண்களில் சிக்காமல் மறைக்கும் புதிய தொழில்நுட்பம்.. இஸ்ரேல் சோதனை..அடுத்து யார் தெரியுமா?

வங்கியில் நேராக சென்று பணம் எடுக்க வரம்பு உள்ளதா?

வங்கியில் நேராக சென்று பணம் எடுக்க வரம்பு உள்ளதா?

அதேபோல், SBI வாடிக்கையாளர்கள் SBI வங்கி கிளை அல்லது மற்ற வங்கி கிளைகளில் பணம் அல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் அவர்களுக்கு வங்கி எந்தவிதக் கட்டணத்தையும் விதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து மற்ற வங்கிக் கிளைகளிருந்து வித்ட்ராயல் ஸ்லிப் மூலம் ரூ.25000 வரை பணம் எடுக்கலாம். செக் மூலம் ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
State Bank Of India Announces New ATM Cash Withdrawal Charges and Rules Proceeds From July 1st : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X