வோடாபோன் : ரூ.7/- முதல் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் திட்டங்கள்.!
அதவாது ரூ.7/-க்கு ஒரு மணி நேரத்திற்கு வரம்பற்ற வோடபோன்-டூ-வோடபோன் உள்ளூர் அழைப்புகளை அனுபவிக்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான தரவு விலை காரணமாக, இந்திய தொலைத் தொடர்பு துறையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், வோடபோன் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.7/- முதல்ல கட்டண திட்டங்களை வகுத்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் "சூப்பர் ஹவர்" திட்டங்களின் கீழ், பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோனின் இந்தியப் பிரிவானது தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச வோடபோன்-டூ-வோடபோன் உள்ளூர் அழைப்புக்கள் மற்றும் வரம்பற்ற 4ஜி/3ஜி தரவு போன்ற "வரம்பற்ற" சலுகைகளை வழங்குகிறது.

யூஎஸ்எஸ்டி
வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் சூப்பர் ஹவர் சலுகைகளை ரீசார்ஜ் செய்வதின் மூலமாகவும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அந்தந்த யூஎஸ்எஸ்டி (USSD)-ஐ டயல் செய்வதின் மூலமாகவோ அணுகலாம். சரி, இந்த வோடபோன் சூப்பர் ஹவர் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது.?

வோடபோன்-டூ-வோடபோன் உள்ளூர் அழைப்பு
வோடபோன் சூப்பர் ஹவர் பேக் ஆனது வரம்பற்ற இணையத்தை 1 மணிநேரம் அனுபவிக்க உதவும். இந்த வோடபோன் சூப்பர் ஹவர் பேக் ஆனது 1 மணிநேரத்திற்கு வரம்பற்ற வாய்ஸ் கால்களை அனுபவிக்கவும கிடைக்கின்றன. அதவாது ரூ.7/-க்கு ஒரு மணி நேரத்திற்கு வரம்பற்ற வோடபோன்-டூ-வோடபோன் உள்ளூர் அழைப்புகளை அனுபவிக்கலாம்.

4ஜி / 3ஜி
ரூ.21/- வோடபோன் சூப்பர் ஹவர் பேக் ஆனது 1 மணி நேரம் செல்லுபடியாகும் 4ஜி / 3ஜி தரவை வழங்குகிறது. சூப்பர் ஹவர் பேக் ஆனது ஆக்டிவேட் செய்யப்பட்ட நேரத்தில் இருந்து அடுத்த 60 நிமிடங்களுக்கு செல்லுபடியாகுமென்று வோடாபோன் இந்தியா அதன் மை வோடாபோன் ஆப்பில் குறிப்பிட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1 வரை
2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள வோடபோன் இந்தியாவின் சூப்பர் ஹவர் வாய்ப்பானது 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். மேலும் இந்த வோடபோன் சூப்பர் ஹவர் திட்டம் பல மறுபதிப்புகளில் கிடைக்கிறது. அதாவது தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இவ்வகை பேக்குகளை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

அருகிலுள்ள மணி நேரத்திலிருந்து இயக்கப்படும்
மும்பை, மஹாராஷ்ட்ரா மற்றும் கோவாவின் சேவை பகுதிகளில், வாய்ஸ் சூப்பர் ஹவர் அடுத்த அருகிலுள்ள மணி நேரத்திலிருந்து இயக்கப்படும். உதாரணமாக, வோடபோன் டூ வோடபோன் உள்ளூர் குரல் பேக்கை 2.45 மணிக்கு ஆக்டிவேட் செய்யப்படுகிறது என்றால், வாடிக்கையாளர் வோடபோன் டூ வோடபோன் உள்ளூர் குரல் நன்மையை 3 மணியிலிருந்து பெறுவர்.

தொகுப்புகள் கிடைக்காது
ஆந்திரா, பீகார், ஜம்மு, காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூப்பர் ஹவர் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஒரு மணி நேர 3ஜி / 4ஜி வேக தரவு தொகுப்புகள் கிடைக்காது என்று வோடபோன் பயன்பாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரல் பிளஸ் டேட்டா
வரம்பற்ற டேட்டா பேக்கை அனுபவிக்கும் பயனர்களுக்கான இந்த சலுகை பொருந்தாது. வோடபோன் அதன் சூப்பர் டே மற்றும் சூப்பர் வீக் என்ற "குரல் பிளஸ் டேட்டா" ஒருங்கிணைந்த திட்டங்களை வழங்குகிறது. அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் முறையே ஒரு நாள் மற்றும் ஏழு நாட்கள் செல்லுபடியாகும் இலவச தரவுடன் (250எம்பி வரை) வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளையும் அனுபவிக்கலாம்.


Click it and Unblock the Notifications