இந்தியாவுக்கு வந்தாச்சு ஸ்டார்லிங்க்.. இனி இந்த மாநிலத்தில் இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்..
எலான் மஸ்க்கின் (Elon Musk) தகவல் தொடர்புத் துறையில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்துடன் முறையாக ஒப்பந்தம் செய்துகொண்ட இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமைய மகாராஷ்டிரா பெற்றுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது மாகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் துணைத் தலைவர் லாரன் டிரையர் மற்றும் மகாராஷ்டிரா தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் வீரேந்திர சிங் (IAS) ஆகியோர் ஒப்பந்தத்தில் (Letter of Intent - LOI) கையெழுத்திட்டனர்.

குறிப்பாக இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், மகாராஷ்டிரா அரசு நிறுவனங்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை (satellite internet) ஸ்டார்லிங்க் வழங்க உள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
அதுவும் கட்சிரோலி, நந்துர்பார், வாசிம், தாராஷிவ் போன்ற மிகத் தொலைதூர மற்றும் குறைந்த வசதிகொண்ட ("aspirational districts") பகுதிகளுக்கு இணையத்தைக் கொண்டு சேர்க்க மாகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. பின்பு இந்த கூட்டு முயற்சி இனி இந்தியாவில் தொழில்நுட்பம் சென்று சேராத அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணையம் கிடைக்க ஒரு புதிய பாதையை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நாம் இப்போது பயன்படுத்தும் வழக்கமான இணையம் ஆனது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் அல்லது டவர்களில் இருந்து வரும் சிக்னல் மூலம் தான் கிடைக்கிறது. குறிப்பாக அனைத்து தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும் இந்த கேபிள்களை கொண்டு செல்வது மிகவும் கடினம்.
எனவே தான் இந்த சிக்கலை தீர்க்க, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் பூமியைச் சுற்றி ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை நிறுவி, அங்கிருந்து நேரடியாகச் சக்திவாய்ந்த இணைய சேவையை வழங்குகிறது. இதன் மூலம் அனைத்து தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும் எளிமையாக இணைய சேவையை வழங்க முடியும்.
செயற்கைக்கோள் மூலம் இன்டர்நெட் சேவையை தொடங்குவதற்கான 'சேட்டிலைட் கம்யூனிகேஷன்' என்ற உரிமத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே இந்த உரிமத்தை இதுவரை இரண்டு நிறுவனங்களுக்கு இந்தியா வழங்கி உள்ளது. அதாவது Eutelsat's one Web மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இந்த உரிமத்தைப் பெற்றுள்ளது. தற்போது ஸ்டார்லிங் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

குறிப்பாக பூமியில் இருந்து 550 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் மூலமாக இன்டர்நெட் சேவை கிடைக்க உள்ளது. மேலும் இந்த ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பொறுத்தவரை வழக்கமான Geostationary satellites விட முற்றிலும் வித்தியாசமானது. அதாவது ஸ்டார்லிங் நிறுவனம் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக ஸ்பேஸ்எக்ஸ் 7,000 LEO செயற்கோள்களை பயன்படுத்துகிறது.
இந்த ஸ்டார்லிங் நிறுவனம் ஆனது 130 நாடுகளில் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ்,நெதர்லாந்து, டென்மார்க், போர்சுகல், ஆஸ்திரேலியா,நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது. சமீபத்தில் வங்கதேசத்தில் கூட இந்த சேவையை எலான் மஸ்க் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








