Home
News

அந்த பயம் இருக்கணும்.. கீழே இறக்கப்படும் Starlink செயற்கைகோள்கள்.. 550கிமீ உயரத்தில் Elon செய்யும் காரியம்!

எலான் மஸ்க் (Elon Musk) தலைமையிலான ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனமானது 2026 ஆம் ஆண்டுக்குள் சுமார் 550 கிமீ உயரத்தில் (அதாவது விண்வெளியில் சுமார் 342 மைல் உயரத்தில்) சுற்றும் அதன் அனைத்து செயற்கைக்கோள்களையும் 480 கிமீ என்கிற உயரத்திற்கு கீழே இறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

விண்வெளியில் அதன் செயற்கைக்கோள்களின் உயரத்தை குறைப்பதன் மூலம், ஸ்டார்லிங்க் நிறுவனம் அதன் செயற்கைக்கோள் கான்ஸ்டெல்லேஷனை (Satellite constellation) மறுகட்டமைக்கும் என்று ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் பொறியியல் துணைத் தலைவர் (SpaceX's vice president of Starlink engineering) ஆன மைக்கேல் நிக்கோல்ஸ் தெரிவித்து உள்ளார்.

அந்த பயம் இருக்கணும்.. கீழே இறக்கப்படும் Starlink செயற்கைகோள்கள்!

இப்படியாக செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையை குறைப்பதன் மூலம் ( கொஞ்சம் கீழே கொண்டுவருவதன் மூலம்) ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களுக்கான விண்வெளி பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை திடீரென வரவில்லை. கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஒரு அரிய வகை விபத்தால் ஏற்பட்ட "பயத்தால்" வந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களில் ஒன்று விண்வெளியில் ஒரு ஒழுங்கின்மையை அனுபவித்ததாகவும், அது "சிறிய" அளவிலான விண்வெளி குப்பைகளை (Space Junks) உருவாக்கியதாகவும், சுமார் 418 கிமீ உயரத்தில் விண்கலத்துடனான தகவல்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த "விபத்து" விண்வெளி சுற்றுப்பாதையில் நடக்கும் ஒரு அரிய இயக்க விபத்தாக (Rare kinetic accident) பார்க்கப்படுகிறது. இருந்தாலும் வருங்காலத்தில் இது தொடராமல் இருக்க, ஸ்டார்லிங்க் நிறுவனம் அதன் செயற்கைகோள்களுக்கான விண்வெளி பாதுகாப்பை இன்னும் உறுதி செய்ய, அவைகளை 550 கிமீ உயரத்தில் இருந்து 480 கிமீ உயரத்திற்கு கீழே இறக்குகிறது

டிசம்பர் மாதம் விபத்துக்கு உள்ளன சாட்டிலைட் ஆனது ஸ்டார்லிங்க் நிறுவனம் அதன் பிராட்பேண்ட் இண்டர்நெட் நெட்வொர்க்கிற்காக விண்வெளியில் கொண்டுள்ள கிட்டத்தட்ட 10,000 சாட்டிலைட்களில் ஒன்றாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து சரியாக டிசம்பர் 17, 2025 அன்று நடந்துள்ளது போல் தெரிகிறது.

அந்நாளில் சீரியல் #35956 என்கிற ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் செயற்கைக்கோள் ஆனது சுமார் 418 கிமீ உயரத்தில் ஒரு முக்கியமான செயலிழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு, விண்கலத்தின் உந்துவிசை ஃப்யூயல் டேங்கில் (propulsion fuel tank) சிறு துவாரத்தை (Vent) ஏற்படுத்தியுள்ளது.

இதனால் குறிப்பிட்ட ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் செயற்கைக்கோள் ஆனது அதன் சுற்றுப்பாதையில் இருந்து சுமார் 4 கிமீ சிதைந்து உள்ளது, கூடவே அதில் இருந்து சில சிறிய விண்வெளி குப்பை துண்டுகளும் வெளியேறின. ஆனாலும் இந்த ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் செயற்கைக்கோள் ஆனது "மீண்டும்" வளிமண்டலத்தில் நுழைந்து எரிந்துவிடும் என்றும், இது உருவாக்கிய சிறிய விண்வெளி குப்பைகள் மற்ற விண்கலங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஸ்டார்லிங்க் விளக்கம் அளித்து இருந்தது.

செயற்கைக்கோள்களை கீழே இறக்குவது ஸ்டார்லிங்க் சுற்றுப்பாதைகளை ஒடுக்குவதற்கு வழிவகுக்கிறது, மேலும் இது பல வழிகளில் விண்வெளி பாதுகாப்பை அதிகரிக்கும்" என்று நிக்கோல்ஸ் சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். மேலும் விண்வெளி குப்பை பொருள்கள் மற்றும் திட்டமிடப்பட்ட செயற்கைக்கோள் கான்ஸ்டெல்லேஷன்களின் எண்ணிக்கை 500 கிமீக்கு கீழே கணிசமாக குறைந்துள்ளது, இது மோதலுக்கான மொத்த வாய்ப்பை குறைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடுகள் மற்றும் பல நாட்டின் நிறுவனங்கள் ஆனது இண்டர்நெட் கான்ஸ்டெல்லேஷன்கள் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பூமி கண்காணிப்பு (பூமியின் படங்கள்) போன்ற பிற விண்வெளி சார்ந்த சேவைகளுக்காக பல்லாயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போட்டியிடுவதால், பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள விண்கலங்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Starlink Lowering all of its satellites From 550 Km to 480 Km to increase space safety in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X