Home
News

இந்தியாவின் பாஸ் அம்பானியா? எலான் மஸ்க் பரபரப்பு கேள்வி.. என்ன நடந்தது? இதோ முழு விவரம்..

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் நிறுவனம், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவையை வழங்கி வருகிறது. அதுவும் மொபைல் சிக்னல் கிடைக்காத தொலைதூர பகுதிகளிலும் செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை வழங்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதேபோல் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்துக்குப் பூர்வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சேவையைத் தொடங்குவதற்கு மேலும் சில ஒப்புதல்களைப் பெற வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவின் பாஸ் அம்பானியா? எலான் மஸ்க் பரபரப்பு கேள்வி..

இந்நிலையில் நேற்று எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பயனர் ஒருவர், இந்தியாவுக்கு ஸ்டார்லிங்க் இணையச் சேவை தேவை எனக் கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் உள்ள 11,256 கிராமங்களில் 4ஜி சேவை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், இந்திய மக்களுக்கான இணையச் சேவையில் சில பணக்காரர்கள் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே ஸ்டார்லிங்க் சேவைக்குத் தடைகள் ஏற்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்குவதைத் தடுப்பது இந்திய மக்களுக்கு எதிரான செயல் என்றும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் கூறியிருந்தார்.

ஆனால் எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கான விதிமுறைகள் அனைவருக்கும் சமமாகவும், நியாயமான முறையிலும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், எலான் மஸ்க் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து, எலான் மஸ்க்கிற்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.

மேலும் இப்போது அந்தப் பதிவுக்கு பதிலளித்த எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இதுவரை 165 நாடுகள் உரிமம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்திய அரசின் அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பின்பற்றி வருவதாகக் கூறிய அவர், இன்னும் இந்தியாவில் உரிமம் வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினார். அதோடு, இந்தியாவின் உண்மையான பாஸ் அம்பானியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருவேளை ஸ்டார்லிங்க் இணையச் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால், மலைப்பகுதிகள், காடுகள் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளிலும் இணைய இணைப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மொபைல் சிக்னல் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் பகுதிகளுக்கும் தடையின்றி இணையச் சேவை கிடைக்கும்.

பொதுவாக மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் செல்போன் டவர்கள் அமைத்து, தரைவழி கேபிள்கள் மூலம் இணைய வசதியை ஏற்படுத்துவதற்கு அதிகளவு செலவும் கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படும். ஆனால், செயற்கைக்கோள் அடிப்படையில் இயங்கும் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையில் இதுபோன்ற சிக்கல்கள் குறைவாக இருப்பதால், எளிதாக இணைய இணைப்பை வழங்க முடியும்.

இந்தியாவின் பாஸ் அம்பானியா? எலான் மஸ்க் பரபரப்பு கேள்வி..

மேலும் வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில் செல்போன் கோபுரங்கள் மற்றும் தரைவழி இணைய கட்டமைப்புகள் சேதமடைந்து தகவல் தொடர்பு பாதிக்கப்படலாம். ஆனால், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்டார்லிங்க் சேவை மூலம் இதுபோன்ற அவசரக் காலங்களிலும் இணைய இணைப்பை வழங்க முடியும்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை மட்டும் தொடங்கப்பட்டால், இணைய வசதி குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கும் இணைய இணைப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், மலை மற்றும் காடு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் தடையின்றி இணையச் சேவையைப் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தேவையான அனைத்து ஒப்புதல்களும் கிடைத்த பிறகே இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.

Best Mobiles in India

English summary
Starlink Licence Delay: Elon Musk Questions India, Mentions Ambani
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X