1 மாசத்துக்கு ரூ.8600 லாம் இல்லீங்க.. Starlink சேவை இந்திய விலையில் திடீர் திருப்பம்.. Lauren Dreyer விளக்கம்!
எலான் மஸ்க் (Elon Musk) தலைமையிலான, செயற்கைகோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க்கின் இந்திய விலை (Starlink India Price) நிர்ணயம் நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. தற்போது அது உண்மையான விலை நிர்ணயம் இல்லை என்று ஸ்டார்லிங்க் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது!
ஸ்டார்லிங்க் இந்தியா வலைத்தளத்தில் ஏற்பட்ட "உள்ளமைவு கோளாறு" (configuration glitch) காரணமாக இந்தியாவுக்கான விலை நிர்ணயம் சிறிது நேரம் தவறாக தோன்றியதாகவும், அந்த புள்ளிவிவரங்கள் (விலைகள்) வெறும் பிளேஸ்ஹோல்டர் சோதனைக்கான தரவு மட்டுமே என்றும், இந்தியாவிற்கான அதன் செயற்கைக்கோள் இணைய சேவையின் உண்மையான விலை அல்ல என்றும் ஸ்டார்லிங்க் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

நேற்று ஸ்டார்லிங்கின் இந்தியா வலைப்பக்கம் (Starlink India Website) நேரலைக்கு வந்தது. அதன் கீழ் மாதாந்திர சந்தா விலை ரூ.8,600 மற்றும் புதிய பயனர்களுக்கு ரூ34,000 மதிப்பிலான ஹார்ட்வேர் கிட் தேவைப்படும் என்று சுட்டிக்காட்டி இருந்தது. ஐயா விலைகள் உடனே வைரலானது, ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் அமைதியாக ஆர்டர்களை திறந்துவிட்டது என்கிற ஊகத்தை தூண்டியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக - ஸ்பேஸ்எக்ஸில் ஸ்டார்லிங்க் வணிக நடவடிக்கைகளின் துணைத் தலைவரும், மூத்த இயக்குநரும் (Vice President and Senior Director of Starlink Business Operations) ஆன லாரன் டிரேயர் (Lauren Dreyer), எக்ஸ் தளம் வழியாக விளக்கம் அளித்துள்ளார். "ஸ்டார்லிங்க் இந்தியா வலைத்தளம் நேரலையில் இல்லை, இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கான சேவை விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை, நாங்கள் ஆர்டர்களை எடுக்கவில்லை." என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ஒரு உள்ளமைவு கோளாறு ஆனது டம்மி ஆன டேட்டாவை காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். "இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையின் விலை என்னவாக இருக்கும் என்பதை அந்த எண்கள் பிரதிபலிக்கவில்லை. கோளாறு விரைவாக சரி செய்யப்பட்டது." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்தியாவில் தனது அதிவேக செயற்கைக்கோள் இணையத்தை (high-speed satellite internet) அறிமுகப்படுத்த ஸ்டார்லிங்க் உறுதிபூண்டுள்ளதாகவும், சேவை மற்றும் வலைத்தளம் இரண்டையும் செயல்படுத்த தேவையான இறுதி அரசாங்க ஒப்புதல்களை (final government approvals) பெறுவதற்கு தற்போது செயல்பட்டு வருவதாகவும் லாரன் டிரேயர் கூறி உள்ளார்.
பிளக்-அண்ட்-ப்ளே நிறுவல், 99.9% இயக்க நேரம், வானிலை மீள்தன்மை மற்றும் தரவு வரம்புகள் இல்லாததற்கு பெயர் பெற்ற ஸ்டார்லிங்க், பாரம்பரிய பிராட்பேண்ட் நம்பகத்தன்மையற்றதாக இருக்கும் தொலைதூர மற்றும் சேவை குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு ஒரு தீர்வாக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளது.
சமீபத்திய தகவல்கள் ஸ்பேஸ்எக்ஸ் துணை நிறுவனம் ஆன ஸ்டார்லிங்க் ஆனது சண்டிகர், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் நொய்டா உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல இடங்களில் அதன் கேட்வே எர்த் ஸ்டேஷன்களை (gateway earth stations) அமைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றன.
இந்த கேட்வே எர்த் ஸ்டேஷன்கள் ஆனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களுக்கும் (SpaceX Satellites), பூமியில் உள்ள பெறுநர்களுக்கும் இடையே இணைப்புகளை நிறுவுவதற்கும், பராமரிப்பதற்கும் (establishing and maintaining connections) ஆன ரிலே பாயிண்ட்களாக (relay points) செயல்படும் வகையில் கட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் (கடந்த 2025 ஜூலை மாதம்) இந்தியாவில் வணிக நடவடிக்கைகளுக்கு (commercial operations) அதன் செயற்கைக்கோள்களை பயன்படுத்துவதற்கான 5 ஆண்டுகளுக்கான முக்கிய உரிமத்தை (licence) தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (Department of Telecommunications- DoT) இந்நிறுவனம் பெற்றதாவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








