ஸ்தம்பிக்கும் ஸ்டார்லிங்க்., ராஜினாமா செய்த சஞ்சய் பார்கவா- உலகளவில் எலான்மஸ்க் கிங்.,இந்தியாவில் கேள்விக்குறி
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்திய நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஸ்டார்லிங்க் இந்திய செயற்கைக்கோள் இணைய நிறுவனம்., குறைந்த விலையில் அதிவேக செயற்கைக்கோள் இணையம், கிராமப்புறங்களில் பெரிய இணைப்பு மற்றும் மானிய விலை சேவை உள்ளிட்ட பெரிய அறிவிப்புகளை நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்காக ஸ்டார் லிங்க் மிகப்பெரிய முன்பதிவுகளை பெற்றது. இந்த நிலையில் ஸ்டார்லிங்க் இந்திய இயக்குனர் சஞ்சய் பார்கவா, ஸ்டார் லிங்க் நிறுவனத்தில் இருந்து விலகி ஐந்து நாட்கள் ஆகிறது என அறிவித்துள்ளார். இவர் இந்த அறிவிப்பை நேற்று (செவ்வாய்க் கிழமை) அறிவித்தார். அதில் ஸ்டார் லிங்கில் தனது கடைசி வேலை நாள் டிசம்பர் 31 2021 என பார்கவா குறிப்பிட்டுள்ளார். அவர் ஸ்டார்லிங்க் நிறுவனத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவை
முன்னதாக இந்தியாவில் சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவைக்கு முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திரும்பப் பெறுவதாக ஸ்டார்லிங்க் அறிவித்த நிலையில் தற்போது பார்கவாவின் ராஜினாமா தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் பார்கவா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு தனது கடைசி வேலை நாள் டிசம்பர் 31 2021 எனவும் தனிநபர்கள் அல்லது ஊடகங்களின் கேள்விகளுக்கு தன்னிடம் பதில் இல்லை எனவும் எனது தனியுரிமையை மதிக்கவும் எனவும் பார்கவா கூறியுள்ளார். இந்த தகவலை பார்கவா லிங்கிட் இன் தளத்தில் பதிவிட்டார். பார்கவா இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் அடையாளமாக இருந்தவர், பார்கவா பதவி விலகியுள்ள நிலையில் ஸ்டார்லிங்க்-ன் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றன.

நாட்டில் ஸ்டார்லிங்க் உரிமம் பெறவில்லை
ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை ஆகும். இந்த நிறுவனம் முன்பதிவு தொடங்கியதாக அறிவித்த சில நாட்களில் 5000 முன்கூட்டிய ஆர்டர்களை பெற்றது. இந்த நிலையில் இந்த சேவையை செயல்படுத்த நாட்டில் ஸ்டார்லிங்க் உரிமம் பெறவில்லை என தொலைத்தொடர்பு துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. முன்பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் பயனர்கள் ஆர்டர் செய்ய வேண்டாம் எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

நாட்டில் செயற்கைக்கோள் சார்ந்த சேவை
எந்தவொரு தனியார் நிறுவனமும் நாட்டில் செயற்கைக்கோள் சார்ந்த சேவைகளை வழங்க மத்திய அரசிடம் உரிமம் பெற வேண்டும் என்பது விதி ஆனால் செயற்கைகோள் அடிப்படையிலான சேவையை வழங்க ஸ்டார்லிங்க் எந்த அனுமதியும் பெறவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பின் ஸ்டார்லிங்க் ஜனவரி 31 2022-க்குள் வணிக உரிமத்திற்கு விண்ணப்பிப்பதாக அறிவித்தது. தனிநபர்கள் தனியார் துறை மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பிரத்யேமாக சேவை வழங்கப்படும் என சஞ்சஸ் பார்கவா முன்னதாக குறிப்பிட்டிருந்தார். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை டிசம்பர் 2022-க்குள் நாட்டில் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

சொந்தமான செயற்கைக்கோள் மூலம் தகவல் தொடர்பு
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான ஸ்டார்லிங்க் இந்தியாவில் முழுநேர ஊழியர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. இந்தியாவில் இப்போது இந்த நிறுவனம் இரண்டு வேலை தலைப்புகளின் கீழ் வேலை வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் முதல் பிரிவு கிராமப்புற மாற்றத்தின் இயக்குனர் பணிக்கான காலியிடம் ஆகும். இதன் இரண்டாவது பிரிவு நிர்வாக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

Starlink இன் இந்தியத் தலைவர் சஞ்சய் பார்கவா
Starlink இன் இந்தியத் தலைவர் சஞ்சய் பார்கவா, LinkedIn இடுகையில் கிடைக்கக்கூடிய வேலைகளைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். வேலையில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். LinkedIn இல் சஞ்சய் பார்கவா பகிர்ந்த இடுகையில் இணைப்பு கிடைக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் சுயவிபரங்களை அனுப்பாமல் மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்குமாறு பார்கவா கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்
"எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டெண்ட் பதவி என்பது பணியாளர்களின் தலைமைப் பதவி அல்ல என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மேலும், இயக்குநர் கிராமப்புற மாற்றம் பணியிடம் தொழில்நுட்பம் தொடர்புடையதாக இருக்க வேண்டும். கிராமப்புற இந்தியாவில் தொடங்கி மாற்றத்தை துரிதப்படுத்துவதற்கும் மற்றொரு சிறிய படி," என்று பார்கவா மேலும் கூறினார். மேலும், பார்கவா, எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவருடைய பதிவில் குறிப்பிட்டார்.

ஸ்டார்லிங்க் மூலம் வேலை வாய்ப்புகள்
ஆனால் நிறுவனம் வணிகரீதியாக உரிமம் பெறும் வரை இதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் மூலம் வேலை வாய்ப்புகள் நிச்சயமாக அதிகரிக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். வேலைத் தேவைகள் குறித்த முழுமையான விவரங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதி அளவுகோல்கள் மற்றும் கூடுதல் தேவைகளும் அங்கு விளக்கப்பட்டுள்ளது. நீங்கள் 'கிராமப்புற மாற்றம் இயக்குனருக்கு' விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது 'நிர்வாக உதவியாளர்' பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், சஞ்சய் பார்கவா தனது LinkedIn இடுகையில் பகிர்ந்துள்ள இந்த இணைப்பிற்குச் செல்லவும். அந்த இணைப்புகளில் வேலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன, மேலும் மக்கள் நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்க இந்த லிங்க் மட்டுமே அனுமதிக்கும் என்பதை கவனத்தில் கொள்க.


Click it and Unblock the Notifications








