Starlink செயற்கைகோளில் விழுந்த ஓட்டை.. விண்வெளியில் 418 கிமீ தூரத்தில் இருந்து பூமியை நோக்கி விழுகிறது?
எலான் மஸ்க் (Elon Musk) தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஸ்டார்லிங்க் (Starlink) சேவை ஆனது மீண்டும் தலைப்பு செய்திகளில் சிக்கி உள்ளது. இம்முறை தவறான இந்திய விலை நிர்ணயம் அல்லது இலவச ரூட்டர் பற்றியது அல்ல.. மாறாக ஒரு பூமியை நோக்கி விழும் ஸ்டார்லிங்க் செயற்கைகோளை (Starlink Satellite) பற்றியது!
கடந்த டிசம்பர் 17, 2025 அன்று, ஒரு ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் செயற்கைக்கோள் (சீரியல் #35956) ஆனது சுமார் 418 கிமீ உயரத்தில் ஒரு முக்கியமான செயலிழப்பை சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு, விண்கலத்தின் உந்துவிசை ஃப்யூயல் டேங்கில் (propulsion fuel tank) சிறு துவாரத்தை (Vent) ஏற்படுத்தியுள்ளது.

இதனால் குறிப்பிட்ட ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் செயற்கைக்கோள் ஆனது அதன் சுற்றுப்பாதையில் இருந்து சுமார் 4 கிமீ சிதைந்து உள்ளது, கூடவே அதில் இருந்து சில சிறிய விண்வெளி குப்பை துண்டுகளும் வெளியேறின. ரெஸ்பான்ஸ் செய்யாத இந்த செயற்கைக்கோள் இப்போது பூமியை நோக்கி விழுகிறதாம்.
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆனது இந்த ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் செயற்கைக்கோள் ஆனது "மீண்டும்" வளிமண்டலத்தில் நுழைந்து சில வாரங்களுக்குள் எரிந்துவிடும் என்றும், இது உருவாக்கிய சிறிய விண்வெளி குப்பைகள் மற்ற விண்கலங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறுகிறது.
இந்த சம்பவத்தின் போது சிதறிய அனைத்து விண்வெளி குப்பைகளையும் கண்காணிக்க, அதாவது டிராக் செய்ய - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆனது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) மற்றும் அமெரிக்க விண்வெளி படை (U.S. Space Force) உடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஸ்டார்லிங்கின் இந்தியா வலைப்பக்கம் (Starlink India Website) நேரலைக்கு வந்து இருந்தது. அதன் கீழ் மாதாந்திர சந்தா விலை ரூ.8,600 மற்றும் புதிய பயனர்களுக்கு ரூ34,000 மதிப்பிலான ஹார்ட்வேர் கிட் தேவைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விலைகள் உடனே வைரலானது, ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் அமைதியாக ஆர்டர்களை திறந்துவிட்டது என்கிற ஊகத்தை தூண்டியது.
ஆனால் ஸ்டார்லிங்க் இந்தியா வலைத்தளத்தில் ஏற்பட்ட "உள்ளமைவு கோளாறு" (configuration glitch) காரணமாக இந்தியாவுக்கான விலை நிர்ணயம் சிறிது நேரம் தவறாக தோன்றியதாகவும், அந்த புள்ளிவிவரங்கள் (விலைகள்) வெறும் பிளேஸ்ஹோல்டர் சோதனைக்கான தரவு மட்டுமே என்றும், இந்தியாவிற்கான அதன் செயற்கைக்கோள் இணைய சேவையின் உண்மையான விலை அல்ல என்றும் ஸ்டார்லிங்க் நிறுவனம் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் தனது அதிவேக செயற்கைக்கோள் இணையத்தை (high-speed satellite internet) அறிமுகப்படுத்த ஸ்டார்லிங்க் உறுதி பூண்டு உள்ளதாகவும், சேவை மற்றும் வலைத்தளம் இரண்டையும் செயல்படுத்த தேவையான இறுதி அரசாங்க ஒப்புதல்களை (final government approvals) பெறுவதற்கு தற்போது செயல்பட்டு வருவதாகவும் ஸ்டார்லிங்க் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
ஸ்டார்லிங்க் வழங்கும் இலவச ரூட்டர்: இது முற்றிலும் இலவசமாக கிடைக்கும் ரூட்டர் அல்ல, அடிப்படையில் இது ஒரு இலவச மேம்படுத்தல் (Free Upgrade) ஆகும். அதாவது இது புதிய வாடிக்கையாளர்களுக்கான இலவசம் அல்ல. மாறாக இது ஸ்டார்லின்க் நிறுவனத்தின் சேவைகளை ஆரம்பகால பயனர்களாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
ஸ்டார்லிங்க் நிறுவனமானது கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே அதன் சேவைகளை வெளியிட்டு இருந்தது. அந்த நேரத்தில், அதாவது 2020 இல் சேவையை பெற்று, இன்னுமும் ஸ்டார்லின்க் பயனர்களாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்போது இலவச ரூட்டர் அப்கிரேட் கிடைக்கிறது. ஜென் 1 ரூட்டருக்கான மென்பொருள் புதுப்பிப்புகளை அனுப்புவதை நிறுவனம் விரைவில் நிறுத்தவுள்ளதால், இந்த ரூட்டர் மேம்படுத்தல் வாடிக்கையாளர்களுக்கு மிகவு அவசியம் ஆகும்.
ஜென் 2 ரூட்டர்கள் 2021 இல் ஸ்பேஸ்எக்ஸால் ஒரு பிளாட் ஆன டிஷ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நெட்வொர்க் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மை ஆகியவற்றை மனதில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய ஜெனரேஷன் ரூட்டர் அவசியமாக இருக்கும். பழைய ஜெனரேஷன் ரூட்டர்கள் திடீரென வேலை செய்வதை நிறுத்தாது என்பதையும் நினைவில் கொள்ளவும். இருப்பினும் அவைகளுக்கு புதிய மென்பொருள் புதுப்பிப்புகள் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








