இலங்கை தாக்குதல் தமிழில் உரையாடல்:எப்படி ஒட்டு கேட்டது ரா அமைப்பு.!

இந்நிலையில் இலங்கையில் தாக்குதல் நடக்கும் முன்பே இந்திய உளவுத்துறையான ரா முன் கூட்டியே இந்த தாக்குதல் சம்பவம் நடக்கும் இடங்கள் குறித்து இலங்கை அரசுக்கு தெரிவித்து இருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தம

|

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இதில் தற்கொலை படை தாக்குதலும் நடந்தது. 9 இடங்களில் வெடி குண்டுகள் வெடித்ததில் சுமார் 300 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இலங்கையில் தாக்குதல் நடக்கும் முன்பே இந்திய உளவுத்துறையான ரா முன் கூட்டியே இந்த தாக்குதல் சம்பவம் நடக்கும் இடங்கள் குறித்து இலங்கை அரசுக்கு தெரிவித்து இருந்தது.

இலங்கை தாக்குதல் தமிழில் உரையாடல்: எப்படி ஒட்டு கேட்டது ரா அமைப்பு.!

இந்த தாக்குதல் சம்பவம் தமிழிலும் அரபியிலும் இருந்துள்ளது. இலங்கை இந்தியா தூரகத்தின் மீதும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

தொலைப்பேசியில் நடந்த உரையாடல்களை இந்தியா உளவு அமைப்பான ரா ஒட்டுக்கேட்டுள்ளது.

இலங்கை சம்பவம்:

இலங்கை சம்பவம்:

இலங்கையில் 9 இடங்களில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் சம்பவம் நடந்தது. பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் சுமார் 300 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு தேசிய தவ்ஹூத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராகிம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தொடர்பு இருப்பதால் இலங்கை அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும், இதுவரை 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு முன் கூட்டியே தெரிந்தது? :

இந்தியாவுக்கு முன் கூட்டியே தெரிந்தது? :

இலங்கையில் நடக்கும் தாக்குதல் சம்பவம் குறித்து இந்திய உளவுத்துறைக்கு எவ்வாறு முன் கூட்டிய தெரியவந்தது. தென்னிந்தியாவில் உள்ள ஒரு நகரமொன்றில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்யப்பட்டனர். முதலில் ஒருவன் கைது செய்யப்பட்டான். பிறகு இருவர் கைது செய்யட்டனர்.

இந்தியாவில் இருந்து ஒருவரும், இலங்கையில் இருந்து இருவரும் தீவிரவாத பயிற்சிக்காக மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்ற
சென்ற போது, பழக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்குள் தொடர்பும் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் விசாரணையில் முழுமையாக தெரியவந்துள்ளது.

 இலங்கை தொலைபேசி முழு விபரம்:

இலங்கை தொலைபேசி முழு விபரம்:

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இலங்கையில் தொடர்புடையவர்களின் செல்போன், தொலைபேசி உள்ளிட்ட முழு விவரங்களையும் அதிகாரிகள் கிடுக்கிடுப்படி விசாரணையில் தெரிவித்துள்ளனர்.


மேலும், பிடிப்பட்ட நபர்கள் கூறிய தகவலின்படி ஒரு அமைப்பின் பெயரையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு பெயரை இதுவரை எந்த அதிகாரிகளும் அறிந்திருக்கவில்லை. இந்த தீவிவாத அமைப்பு இலங்கையில் இருந்து இயங்குவது என்றும் தெரிவந்தது.

தொலைபேசியை ஒட்டு கேட்டது ரா:

தொலைபேசியை ஒட்டு கேட்டது ரா:

அவர்கள் அழித்த தொலைபேசி மற்றும் செல்போன் எண்களை வைத்து முழுமையாக ஒட்டும் கேட்கும் வேலையில் இறங்கியது ரா உளவு அமைப்பு. இதில் இலங்கையில் உள்ள இந்திய தூரகம் தாக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தது. இதன் பிறகு அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

மேலும், பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் திட்டம் அரங்கேறியிருந்தது. இந்த உரையாடல்கள் பெரும்பாலும் தமிமிழம், அடுத்தபடியாக அரபியிலும் இருந்துள்ளது.

ஓட்டு கேட்கும் வேலையை உளவு அமைப்பு இந்தியாவில் இருந்து செய்தா இல்லை இலங்கையில் இருந்து செய்ததாக என்று தெரிவாக தெரியவில்லை.

இலக்கு வைக்கப்பட்ட நாள்:

இலக்கு வைக்கப்பட்ட நாள்:

ஈஸ்டர் தினத்தில் எங்கெங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்படும் என்று இந்திய உளவுத்துறை முழுமையாக தகவல்களை தெரிந்து கொண்டது. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடும் 4 பேரின் விவரங்களையும் அறிந்து கொண்டது இந்தியா ரா அமைப்பு.
இதுகுறித்து இலங்கை அரசுக்கு தெரிவித்தது.

இந்திய தூரத்திற்கு இலக்கு:

இந்திய தூரத்திற்கு இலக்கு:

தென்னிந்தியாவில் இருந்து பெறப்பட்ட தகவல் அனைத்தும் டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டது. பிறகு இதை இலங்கை அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்திய தூரத்திற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டால், இந்திய தூரகத்தை தாக்காமல் தீவிரவாதிகள் பின் வாங்கினர்.

மெத்தனம் காட்டிய இலங்கை:

மெத்தனம் காட்டிய இலங்கை:

இந்தியா கூறிய அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொண்ட இலங்கை பாதுகாப்பு துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். பெயருக்கு சில போலீசாரையும் மட்டும் நியமித்து விட்டு, கோட்டை விட்டால், அடுத்தடுத்து தாக்குதல் நடந்துள்ளது.

50 சிக்கார்டுடன் தமிழாசிரியர் கைது:

50 சிக்கார்டுடன் தமிழாசிரியர் கைது:

இந்த தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் இதுவரை 106 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவ்வகையில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க தமிழ் ஆசிரியர் ஒருவரும் கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 50 சிம் கார்டுகளை கைப்பற்றிய கல்பிட்டியா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், தடைசெய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் நடத்தப்பட்டு வரும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு டாக்டரும் கைதானதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
srilanka bomb blasts tamil telephone conversation suspected : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X