Home
News

ஸ்ரீதர் வேம்புவின் Arattai ஆப்பிற்கு பயந்து மார்க் செஞ்ச வேலைய பாருங்க.. WhatsApp யூசர்கள் கவனத்திற்கு!

மார்க் ஜுக்கர்பெர்க்கின் (Mark Zuckerberg) இடத்தில் நின்று யோசித்து பாருங்கள். நீங்கள் தான் மெட்டாவின் (Meta) ஓனராக இருந்து, உங்களுடைய நிறுவனத்தின்கீழ் இருக்கும் மிகவும் பிரபலமான மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆன வாட்ஸ்அப்பிற்கு (WhatsApp) புதிய போட்டியாக அரட்டை (Arattai) என்கிற ஆப் உருவாகும் போது.. நீங்கள் என்ன செய்வீர்கள்?

உடனே கூடுதலாக சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்வீர்கள் தானே? அதைத்தான் வாட்ஸ்அப் நிறுவனமும் செய்துள்ளது. இதை பயம் என்றும் கூறலாம்; போட்டித்தன்மை என்றும் கூறலாம். எப்படி கூறினாலும், இதற்கு - ஸ்ரீதர் வேம்புவும் (Sridhar Vembu), அவருடைய நிறுவனமான ஜோஹோவின் (ZOHO) அரட்டை ஆப்பும் தான் முழு காரணம்!

Arattai க்கு WhatsApp இல் பயந்து மார்க் செஞ்ச வேலைய பாருங்க!

ஜோஹோவின் அரட்டை ஆப் தனது வாட்ஸ்அப்பை போல பல தரப்பட்ட அம்சங்களால் நிரப்பப்படவில்லை என்றாலும் கூட.. மெட்டா நிறுவனமானது - "பொதுவாக என் மனசு தங்கம்.. போட்டியினு வந்துவிட்டா சிங்கம்" என்கிற பாடலை பேக்கிரவுண்டில் போட்டுகொண்டு. அரட்டை ஆப்பிற்கு எதிராக வேலை செய்ய தொடங்கி விட்டது.

ஜென் ஸீ (Gen Z), ஜென் ஆல்பா (Gen Alpha) யூசர்களை கவர்ந்திழுக்கும் படியாக வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் அப்டேட் வழியாக 6 முக்கியமான புதிய அம்சங்கள் (மற்றும் அப்கிரேட்ஸ்) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் வாட்ஸ்அப்பில் - யூசர் கிரியேட்டிவிட்டி (User creativity) மற்றும் பெர்சனலைசேஷன் (Personalisation) ஆனது அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

1. லைவ் மற்றும் மோஷன் போட்டோகளுக்கான ஆதரவு (Live and Motion Photos support): இந்த அப்டேட் லைவ் போட்டோக்களை (ஐஓஎஸ் இல்) மற்றும் மோஷன் போடோக்களை (ஆண்ட்ராய்டில்) நேரடியாக ஷேர் செய்யும் திறனை சேர்க்கிறது. இந்த போடோக்களில் உள்ள ஃபைல்கள் ஆனது சவுண்ட் மற்றும் மூவ்மெண்ட் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும், இதனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புகைப்படங்களை பரிமாறிக்கொள்ளும்போது இன்னும் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும்.

2. ஏஐ ஆல் இயக்கப்படும் சாட் தீம்கள் (AI-powered chat themes): பயனர்கள் இப்போது மெட்டா ஏஐ-ஐ பயன்படுத்தி டெக்ஸ்ட் ப்ராம்ட் (Text Prompt) அடிப்படையில் முழுமையாக தனிப்பயனாக்கப்பட்ட சாட் தீம்களை உருவாக்கலாம். மெசேஜ் அனுப்பும் சூழலை மேலும் சுவாரசியமான வகையில் மாற்றுவதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும்.

3. கஸ்டம் ஏஐ பேக்கிரவுண்ட்கள் (Custom AI backgrounds): இந்த அப்டேட் ஆனது - வீடியோ கால்களுக்கும், சாட்டில் நேரடியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் தனித்துவமான மற்றும் தனிப்பயன் மிக்க பின்னணிகளை (create unique and custom backgrounds) உருவாக்க மெட்டா ஏஐ பயன்படுத்த அனுமதிக்கும்.

4. எளிதான க்ரூப் சேர்ச்: க்ரூப்பில் மெம்பர் ஆக உள்ள எந்தவொரு காண்டாக்ட்டின் பெயரையும் தேடுவதன் மூலம் பயனர்கள் இப்போது க்ரூப் சாட் விரைவாகக் கண்டறிய முடியும்.
5. புதிய ஸ்டிக்கர் பேக்ஸ் (New sticker packs): கடைசியாக வாட்ஸ்அப்பில் மூன்று புதிய தீம்டு ஸ்டிக்கர் செட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது - பியர்லெஸ் பேர்ட் (Fearless Bird), ஸ்கூல் டேஸ் (School Days) மற்றும் வெக்கேஷன் (Vacation).

6. ஆண்ட்ராய்டில் டாக்குமெண்ட் ஸ்கேன் (Document scanning on Android): டாக்குமெண்ட்களை பகிர வாட்ஸ்அப்பை நம்பியிருக்கும் மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு இதுவொரு பெரிய அப்டேட் ஆகும். இது ஆப்பில் இருந்து நேரடியாக ஆவணங்களை ஸ்கேன் செய்ய, கிராப் செய்ய, ஸ்டோர் செய்ய மற்றும் ஷேர் செய்ய அனுமதிக்கிறது.

ஆக ஆவணங்களை ஸ்கேன் செய்து அனுப்ப பயனர்களுக்கு இனி மூன்றாம் தரப்பு ஆப் தேவையில்லை. இந்த அம்சம் ஏற்கனவே ஐபோன்களுக்கான வாட்ஸ்அப்பில் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வரும் வாரங்களில் இந்த அம்சங்கள் மெல்ல மெல்ல அனைவர்க்கும் வந்து சேரும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Sridhar Vembu Zoho Arattai App Effect 6 New Features Added in WhatsApp to Hold Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X