Home
News

இன்னும் 2, 3 நாள்ல.. ZOHO Arattai ஆப் குறித்து ஸ்ரீதர் வேம்பு முக்கிய அறிவிப்பு.. என்ன நடக்க போகிறது?

திடீரென டாப் 100 ஆப்களின் பட்டியலின் முதல் இடத்திற்கு சென்று, ஒரே மாதத்தில் அதே டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய ஜோஹோ அரட்டை (ZOHO Arattai) ஆப் குறித்து, ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ஏன்ஐ (ANI) உடனான ஒரு உரையாடலில், விரைவில் அரட்டை ஆப்பில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End to end Encryption) சேர்க்கப்படும் என்பதை ஸ்ரீதர் வேம்பு உறுதிப்படுத்தி உள்ளார். இந்த அம்சம் ஜோஹோ அரட்டை ஆப்பிற்கான ஒரு புதிய அப்டேட் வழியாக இன்னும் ஓரிரு வாரங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்ரீதர் வேம்பு உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்னும் 2, 3 நாள்ல.. ZOHO Arattai ஆப் ஸ்ரீதர் வேம்பு அறிவிப்பு!

இன்னும் 2, 3 நாளில்: "இது எங்களுக்கு சிறிது நேரம் எடுக்கும். எனவே நாளை அல்லது அதற்கு அடுத்த நாள், ஓரிரு நாட்களில், ஒரு அப்டேட் கிடைக்கும். பின்னர் இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு அப்டேட் கிடைக்கும், ஏனெனில் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் பேக்கப் எடுக்க வேண்டும்" என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

"இல்லையெனில், நீங்கள் ஆப்பை ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்தால் உங்கள் எல்லா சாட்களையும் இழப்பீர்கள். நாங்கள் உண்மையில் பேக்கப்பில் தான் வேலை செய்கிறோம். கிளவுட் வெர்ஷனில், பேக்கப் தானாகவே சர்வரில் சேமிக்கப்பட்டது. டிவைஸ் என்க்ரிப்டட் வெர்ஷனில், நீங்கள் பேக்கப்பை தேர்வு செய்ய வேண்டும். பேக்கப் ஆனது 2, 3 அல்லது 4 வாரங்களில் வரும்" என்றும் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

வாய்ஸ், வீடியோ, மெசேஜ்: குறிப்பிடத்தக்க வகையில், அரட்டை ஆப்பில் ஏற்கனவே வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் உள்ளது. ஆனால் மெசேஜ்களுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இல்லை. இருப்பினும இந்நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி - அனைத்து தரவுகளும் இந்தியாவில் சேமிக்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்து உரையாடல்களும், தலைப்புகளும் ஸ்டோரேஜில் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், டெலிகிராம் VS அரட்டை: முன்னரே குறிப்பிட்டபடி அரட்டை ஆப் ஆனது "திடீர் உந்துதலின்" விளைவாக ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் ஆகிய இரண்டிலும் முதலிடத்தை பிடித்து இருந்தது. சொல்லப்போனால் "ஓவர் நைட்டில்" இது ​​இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தது

இருப்பினும், வாட்ஸ்அப் (WhatsApp), சிக்னல் (Signal) மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற உலகளாவிய போட்டியாளர்கள் பல ஆண்டுகளாக கொண்டிருந்த முக்கிய பாதுகாப்பு அம்சம் (Security Feature) ஆன எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இல்லாததுதான் அரட்டை ஆப்பின் மீது விழுந்த முதல் மற்றும் முக்கிய விமர்சனமாக இருந்து வருகிறது. விரைவில் அதற்கு ஒரு முடிவு காலம் வரும் என்பதை ஸ்ரீதர் வேம்புவின் அறிவிப்பு உறுதிப்படுகிறது.

மீட்டுக்கொடுக்குமா? முன்னதாக, ஆப் ஸ்டோர் தரவரிசைகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் மணிகண்ட்ரோல் வெளியிட்ட அறிக்கையின்படி, அரட்டை ஆப்பின் பதிவிறக்கங்களும், ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்துள்ளது. தொழில்துறை மதிப்பீடுகளின்படி, அரட்டை ஆப்பின் பதிவிறக்கங்கள் கடந்த செப்டம்பரில் சுமார் 2.6 மில்லியனிலிருந்து அக்டோபரில் கிட்டத்தட்ட 13.8 மில்லியனாக உயர்ந்தன.

பின்னர் நவம்பர் தொடக்கத்தில் 200,000 க்கும் குறைவாக குறைந்தன. இதேபோல மாதாந்திர அடிப்படையில ஆக்டிவ் ஆக உள்ள பயனர்களும் (Monthly Active Users) கிட்டத்தட்ட 4 மில்லியனாக குறைந்துள்ளனர். இது அதிக அளவிலான "ஆரம்ப கால ஆர்வம்" இருந்தபோதிலும் பலவீனமான "தக்கவைப்பை" குறிக்கிறது. அரட்டை ஆப்பிற்கு வரும் மெசேஜ்களுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சமானது, இழந்த வாடிக்கையாளர்களை மீட்டுக்கொடுக்குமா? காத்திருந்து பார்ப்போம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Sridhar Vembu confirmed Zoho Arattai App To get End to end Encryption For Messages in Few Weeks
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X