Home
News

ஜாக்கிரதை.! ஆண்ட்ராய்டு பயனர்களை தாக்கும் புது வைரஸ்.. வங்கி விபரங்கள் அபேஸ்..

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து உருவாகியுள்ளது. மிகவும் மோசமான புது வகை டார்ஜென் மால்வேர் தாக்குதல் இப்போது இந்தியா மற்றும் உலக நாடுகளில் வேகமாக பரவ துவங்கியுள்ளது. இது பயனர்களின் முக்கியமான தரவுகள் மற்றும் வங்கி தரவுகளை திருடுகிறது.

சைபர்செக்யூரிட்டி பாதுகாப்பு உலகளவில் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகிறது. ஸ்பைநோட் (SpyNote) எனப்படும் மிகவும் மோசமான ஆண்ட்ராய்டு பேங்கிங் ட்ரோஜன் மால்வேர் வைரஸை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த மால்வேர் ஆப்ஸ், உங்கள் போனின் இயங்குதளத்திற்கான வழக்கமான அப்டேட் லிங்க் போன்ற வடிவில் உள்நுழைகிறது.

ஜாக்கிரதை.! ஆண்ட்ராய்டு பயனர்களை தாக்கும் புது வைரஸ்.. எல்லாம் அபேஸ்.!

பொதுவான ஆண்ட்ராய்டு அப்டேட் லிங்க் போல இது தோன்றினாலும், அப்டேட் செய்வது போன்ற செயல்பாட்டை செய்து, பயனர்களிடம் இருந்து சில சிறப்பு அணுகலை வழங்க கோரி இந்த மால்வேர் கேட்கிறது. பயனர்கள் அனுமதியை வழங்கிய பிறகு, இது பின்னணியில் இருந்து மறைமுகமாகவும், நேரடியாகவும் ஏமாற்றுகிறது.

இந்த பயனர்களிடம் இருந்து அணுகலைப் பெற்றவுடன், போனில் உள்ள எஸ்எம்எஸ் (SMS) மற்றும் முக்கியமான வங்கித் தகவல்களைத் திருடுவதற்கான ரகசியப் பணியை தொடங்குகிறது. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எஃப்-செக்யூர் (F-Secure) இந்த ஆபத்தான ஸ்பைநோட் (SpyNote) மால்வேர் பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களை கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளனர்.

இந்த மோசமான மால்வேர், போலியான எஸ்எம்எஸ் மெசேஜ் மூலம் பரவுகிறது. அதில் வரும் ஒரு சிறப்பு லிங்கை கிளிக் செய்வதன் மூலம், பயனர்களின் போனில் இது நேரடியாக பரவுகிறது. இது வாய்ஸ் கால் ரெக்கார்டிங்ஸ், கேமரா அணுகல், மெசேஜ் மற்றும் உங்கள் போனின் ஸ்டோரேஜ் போன்ற பல முக்கிய தகவல்களை எடுப்பதோடு, உங்கள் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வங்கி விபரங்களையும் சேகரித்துக்கொள்கிறது.

ஜாக்கிரதை.! ஆண்ட்ராய்டு பயனர்களை தாக்கும் புது வைரஸ்.. எல்லாம் அபேஸ்.!

இந்த மால்வேர், உங்கள் போனின் ஹோம் பேஜ் திரையிலும், உங்கள் ரீசென்ட் ஆப்ஸ் தளங்களிலும் இருந்து நேக்காக மறைந்துவிடுகிறது. உங்கள் போனின் பாதுகாப்பு அமைப்பு கூட, இவற்றை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இது தன்னை மறைத்துக்கொள்கிறது. இந்த ஸ்பைநோட் (SpyNote) மால்வேர் பற்றிய பயங்கரமான விஷயம் என்னவென்றால், இது உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் உட்பட உங்களை சுற்றியுள்ள ஒலியையும் இது பதிவு செய்கிறது.

இது உங்கள் உரையாடல் மூலமும் சில முக்கியமான தகவல்களைத் திருடுகிறது. இது பயனர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த SpyNote மால்வேர் சிறப்பு அனுமதிகளையும் தந்திரமான முறையில் பயன்படுத்துகிறது. இதுமட்டுமின்றி, உங்கள் போன் டிஸ்பிளேவில் நிகழும் நிகழ்வுகளை இது படம்பிடிக்கிறது மற்றும் பதிவு செய்கிறது.

இது மக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. உங்கள் டிஸ்பிளே நிகழ்வை பதிவு செய்வது ஆபத்தானது. ஒருவேளை சில சாமர்த்தியமான பயனர்கள் இந்த மால்வேரை அவர்களின் போனில் கண்டறிந்தவுடன், அவற்றை அகற்ற முயற்சித்து செட்டிங்ஸ் மெனுவை திறந்தால், இந்த மால்வேர் செட்டிங்ஸ் மெனுவை ஓபன் செய்யவிடாமல் தடுக்கிறது. இது மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறது. அதை அகற்றவிடாமல் தொடர்ந்து தடுத்துக்கொண்டே இருக்கிறது.

அப்படியானால், இதை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் எப்படி தான் அகற்றுவது? என்றால், பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள், அவர்களின் போனை ஒட்டுமொத்தமாக பேக்டரி ரீசெட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். பெரும்பாலும், பேக்டரி ரீசெட் செய்யும் பொழுது பயனர்கள் அவர்களின் தரவை இழக்க நேரிடுகிறது.

இதுவும் ஒரு சிக்கலாக அமைகிறது. சைபர் கிரைமினல்கள் தொடர்ந்து பல்வேறு வழிகளில், புதிய தந்திரங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆகையால், இந்த நவீனமயமான காலத்தில் மக்கள் கூடுதல் கவனமாக இருப்பது அவசியமாகிறது. இந்த ஆபத்தான மால்வேரில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள, தேவை இல்லாத லிங்குகளை கிளிக் செய்யாமல் இருப்பது நல்லது. அதேபோல், உங்கள் சாதனத்தை அப்டேட் இல் வைத்திருப்பது சிறப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
SpyNote sneaky Android banking trojan app can steal user data read SMS and record calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X