Just In
- 8 min ago
உலகளவில் இந்தியா பெஸ்ட்- மலிவு விலை, அதிக பயன்பாடு: பிரதமர் மோடி புகழாரம்
- 1 hr ago
இந்த பட்ஜெட்ல இப்படி ஒரு 50-inch 4K TV-ஆ! வாய் பிளக்க வைக்கும் OnePlus!
- 2 hrs ago
FASTAG-இல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணம் திருடுவதாக வெளியான வீடியோ- உண்மை என்ன?
- 3 hrs ago
என்னா மனுஷன்யா? சின்ன டுவிஸ்ட் உடன் மிக மலிவு விலை பிளான்: இன்பதிர்ச்சி கொடுத்த Netflix CEO
Don't Miss
- Finance
எலக்ட்ரிக் காரா? வேணாம்ப்பா வேணாம்.. ஒதுங்கும் மாருதி சுசூகி.. ஏன் தெரியுமா..?!
- Sports
வரலாற்றிலேயே முதல் முறை.. ஹர்திக் பாண்ட்யா பிரமாண்ட சாதனை.. அதுவும் முதல் போட்டியிலேயே!!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மாதிரி மென்மையான இதயம் கொண்டவங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
Dubai DutyFree LuckyDraw: தரமான பரிசுகளை வென்ற இந்தியர்கள்! 62முதியவருக்கு ஒரு மில்லியன் டாலர் விழுந்திருக்கு!
- News
எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்த சோதனை.. கூடவே இருந்த கடம்பூர் ராஜுவிற்கு கொரோனா! தனபாலும் பாதிப்பு
- Movies
கமலுக்கு 400 கோடி வசூல் கொடுத்த விக்ரம்...விக்ரமிற்காக கமல் என்ன செய்தார் ?
- Travel
நீங்கள் இந்தியராக இருந்தாலும் கூட இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி பெற்றிருக்க வேண்டும்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஸ்பைஸ்ஜெட்: ரேன்சம்வேர் சைபர் தாக்குதல்- விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.!
கடந்த சில மாதங்களாகவே ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. குறிப்பாக கடைகள், மருத்துவமனை, இ-மெயில் நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த சைபர் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் பொறுத்தமட்டில் கணினியில் மறைத்துவைக்கப்பட்ட அனைத்துக் கோப்புகளுக்கும் பாதிப்பு உண்டாகும், மேலும் பல இயந்திரங்களுக்குதீங்கிழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் சிஸ்டம்களில் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடந்துள்ளது.

வெளிவந்த தகவலின்படி, நேற்று இரவு SpiceJet சிஸ்டம் ரேன்சம்வேர் தாக்குதலை எதிர்கொண்டன எனவும், இந்த தாக்குதல் காரணமாக இன்று காலை பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
மேலும் இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சில ஸ்பைஸ்ஜெட் சிஸ்டம்களில் ரேன்சம்வேர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குறிப்பாக இந்த தாக்குதல் மூலம் இன்று காலை விமானங்கள் புறப்பட தாமதமானது. அதேபோல் எங்கள் தொழில்நுட்ப குழு தற்போது நிலமையைக் கட்டுப்படுத்தி சரிசெய்துள்ளது. இனி விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவித்தார். அதேபோல் ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கடந்த வாரம் 7 ஆபத்தான ஆப்ஸ்களை கண்டறிந்தது.

குறிப்பாக இந்த 7 ஆப்ஸ்கள் Facebook கடவுச்சொல் மற்றும் கிரிப்டோ தரவையும் திருடுவதாக ட்ரெண்ட் மைக்ரோ சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிக்கை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த 7 ஆப் வசதிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யும்படி ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய அந்த 7 ஆப்ஸ்கள் இதோ.
ரூ.20,000க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்: இதோ பட்டியல்.!

பனோரமா கேமரா (Panorama Camera)
உங்கள் ஃபோனின் கேமரா மூலம் பனோரமா படங்களை எடுப்பதற்கான ஆப்ஸ் தான் இது. இந்த ஆப் வசதியும் பயனர்களின் தரவுகளை திருடுவதாகதெரியவந்துள்ளது. எனவே பயனர்கள் இந்த ஆப் வசதியை பயன்படுத்தி வந்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருந்து நீக்கும்படி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிசினஸ் மெட்டா மேனேஜர் (Business Meta Manager)
அதாவது பேஸ்புக் தளத்தில் சேவை வழங்கும் தோற்றத்தில் உள்ளது பிசினஸ் மெட்டா மேனேஜர் ஆப். குறிப்பாக இந்த ஆப் வசதியும் மால்வேர்களைக் கொண்டுள்ளது.இதை பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

ஸ்வார்ம் போட்டோ (Swarm Photo)
போட்டோ ஷேரிங் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்குப் பயன்படும் இந்த ஸ்வார்ம் போட்டோ ஆப் ஆனது உங்களின் தனியுரிமைத் தகவல்களை திருடும். எனவே இந்த ஆப் வசதியை நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

என்ஜாய் போட்டோ எடிட்டர் (Enjoy Photo Editor)
பெயர் குறிப்பிடுவது போல, இது புகைப்படம் எடிட் செய்ய பயன்படும் ஒரு ஆப் வசதியாகும். மேலும் ட்ரெண்ட் மைக்ரோ அறிக்கை ஆனது இந்த ஆப் வசதியில் சில பிழைகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

கிரிப்டோமைனிங் ஃபார்ம் யுவர் ஓன் காயின் (Cryptomining Farm Your own Coin)
உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி மைனிங் வாயிலாகவும் நிறைய ஹேக்கர்கள் பயனர்களின் தரவுகளை திருடுகின்றனர். மேலும் இந்த கிரிப்டோமைனிங்ஃபார்ம்யுவர் ஓன் காயின் ஆப் வசதி மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. எனவே இதை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உடனே டெலிட் செய்யவும்.

போட்டோ கேமிங் பசில் (Photo Gaming Puzzle)
கேமிங் தளமாக இருக்கும் இந்த போட்டோ கேமிங் பசில் ஆப்-இல் பிழை இருப்பது தெரியவந்துள்ளது. ஒருவேளை நீங்கள் இந்த ஆப் வசதியை இன்ஸ்டால் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் (Daily Fitness OL)
பெயர் குறிப்பிடுவது போல, இது யுடிலிட்டிஸ் & டூல்ஸ் பிரிவில் வரும் ஃபிட்னஸ் ஆப்ஸ். அதாவது பிட்னெஸ் ஆப்ஸ்கள் தற்போது மிகவும் பிரபலம். ஆனால் இந்த டெய்லி ஃபிட்னெஸ் OL ஆப் வசதியானது பயனர்களின் டேட்டாவை திருடுவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999