Home
News

1Gpps வேகத்தில் Unlimited Data; பெங்களூர்வாசிகளுக்கு அடித்தது அதிர்ஷடம்.!

தில்லி என்சிஆர் பகுதிகளில் கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, பெங்களூரில் இந்த திட்டங்களைத் தொடங்குவதாக ஸ்பெக்ட்ரா நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்பெக்ட்ரா வாய்ப்பின் கீழ் கிடைக்கும், வரம்பற்ற தொகுப்பானத

By Muthuraj

இந்தியாவின் ஜிகாபிட் பிராட்பேண்ட் சேவை வழங்குனர்களில் ஒருவரான ஸ்பெக்ட்ரா, அதன் 'ஸ்பெக்ட்ரா பாஸ்டஸ்ட் பேக்கேஸ்' வாய்ப்பை அறிவித்துள்ளது. இது 1 ஜிபிபிஸ் வேகத்துடன், பெங்களூரில் உள்ள அதன் வர்த்தக மற்றும் வீட்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கும்.

தில்லி என்சிஆர் பகுதிகளில் கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, பெங்களூரில் இந்த திட்டங்களைத் தொடங்குவதாக ஸ்பெக்ட்ரா நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்பெக்ட்ரா வாய்ப்பின் கீழ் கிடைக்கும், வரம்பற்ற தொகுப்பானது 1 ஜிபிபிஸ் என்கிற பதிவிறக்கம் வேகத்தை வழங்குகிறது மற்றும் இதன் மாதாந்திர விலை ரூ.1249/- ஆகும்.

ரூ.899/-க்கு 400 ஜிபி அளவிலான டேட்டா

ரூ.899/-க்கு 400 ஜிபி அளவிலான டேட்டா

மறுகையில் உள்ள நுழைவுநிலை தொகுப்பான 1 ஜிபிபிஸ் பதிவிறக்க வேகம் கொண்ட ரூ.899/- ஆனது 400 ஜிபி அளவிலான டேட்டா வரம்பை கொண்டுள்ளது. உடன் ஸ்பெக்ட்ரா நிறுவனம் டேட்டா ரோல் ஓவர் வாய்ப்பையும் வழங்குகிறது.

பயன்படுத்தப்படாத தரவுகளை அடுத்த மாதத்திற்கு

பயன்படுத்தப்படாத தரவுகளை அடுத்த மாதத்திற்கு

அதாவது இந்த மாதம் பயன்படுத்தப்படாத தரவுகளை அடுத்த மாதத்திற்கு முன்னோக்கி எடுத்துச்செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. இதர திட்டமானது வரம்பற்ற டேட்டாவை வழங்குவதால் இந்த வாய்ப்பு ரூ.899/-க்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமச்சீரான டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகம்

சமச்சீரான டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகம்

ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் படி 1 ஜிபிபிஎஸ் போன்ற அலைவரிசையானது, பயனர்களுக்கு வேகமான இணைய அனுபவத்தை வழங்குவதோடு ஒரே நேரத்தில் பல சாதனங்களையும் பயன்படுத்த உதவும். ஸ்பெக்ட்ரா டேட்டா நன்மையானது 'வரம்பற்றது' என்பதால், சமச்சீரான டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகம் கிடைக்கும்.

ஸ்பெக்ட்ரா நாட்டின் மிகப்பெரிய 1 ஜிபிபிஸ் பிராட்பேண்ட் நெட்வொர்க்

ஸ்பெக்ட்ரா நாட்டின் மிகப்பெரிய 1 ஜிபிபிஸ் பிராட்பேண்ட் நெட்வொர்க்

உடன் பெங்களூரில் ஏற்கனவே ஸ்பெக்ட்ராவின் வாடிக்கையாளராக இருக்கும் பயனர்கள், கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் 1 ஜிபிபிஎஸ் வேக திட்டத்துடன் மேம்படுத்தப்பட்டனர் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், ஸ்பெக்ட்ரா நாட்டின் மிகப்பெரிய 1 ஜிபிபிஸ் பிராட்பேண்ட் நெட்வொர்க் வழங்குநராக உருமாறியுள்ளது.

'பொழுதுபோக்கு' மற்றும் 'பிரீமியம்' தொகுப்பு

'பொழுதுபோக்கு' மற்றும் 'பிரீமியம்' தொகுப்பு

மேலும், ஸ்பெக்ட்ரா அதன் வாய்ப்பின்கீழ் ஹங்கமா மற்றும் ஆல்ட்பாலாஜி போன்ற முன்னணி உள்ளடக்க வழங்குநர்களுடன் இணைந்து, மாதாந்திர 'பொழுதுபோக்கு' மற்றும் 'பிரீமியம்' தொகுப்புகளை ரூ.1,549/- மற்றும் ரூ.1,849/-க்கு அதன் பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

முழுக்க முழுக்க இலவசமாக ஆறுமாத கால சந்தா

முழுக்க முழுக்க இலவசமாக ஆறுமாத கால சந்தா

சமீபத்தில் ஆக்ட் பைபர்நெட் நிறுவனமானது தனது பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாக ஆறுமாத கால சந்தா ஒன்றை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த திட்டம் கிடைக்கபெறும் ஆறு மாதங்களுக்கும், கூடுதலாக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்ப்பட மாட்டாது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஃப்ரீ டூ ஏர் சேனல்கள்

ஃப்ரீ டூ ஏர் சேனல்கள்

'ஃப்ரீ டூ ஏர் சேனல்கள்' என்று அழைக்கப்படும் இந்த சேவையை, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பயன்பாடான ஆக்ட் பைபர் நெட் வழியாக அணுகப்படலாம். இந்த சேவையை வழங்க, ஆக்ட் பைபர்நெட் நிறுவனமானது யப் (Yupp) டிவி உடன் கைகோர்த்ததுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இலவச சந்தா

இலவச சந்தா

வெளியான அறிக்கையின்படி, ஆக்ட் பைபர்நெட் சேவைகள் வழங்கப்படும் 12 நகரங்களிலும் உள்ள நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த இலவச சந்தா கிடைக்கும். இதன்கீழ் மொத்தம் 13 வெவ்வேறு மொழிகளில் 140க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை அனுபவிக்க முடியும்.

ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே

ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே

மேற்குறிப்பிட்டபடி இந்த சமீபத்திய வாய்ப்பிற்காக, வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. முதலில் இந்த சேவை பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைத்தது, இப்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது.

விரைவில் ஐஓஎஸ்

விரைவில் ஐஓஎஸ்

வெளியான ஊடக அறிக்கையில், ஆக்ட் பைபர்நெட் நிறுவனம் கூறியது போல், "இது விரைவில் ஐஓஎஸ்" பதிப்பின்கீழும் தொடங்கப்படும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்

மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்

ஆறு மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும் இந்த வாய்ப்பை அணுக எந்தவொரு வாடிக்கையாளரும் நிறுவனத்தின் பயன்பாட்டினுள் நுழைந்து தங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் கொண்டு உள்நுழைய வேண்டும்.

பிரீமியம் சேனல்கள்

பிரீமியம் சேனல்கள்

அதை நிகழ்த்துவதின் மூலம் பிரீமியம் சேனல்கள், ஒரிஜினல் டிவி தொடர், திரைப்படங்கள், வலைத் தொடர் மற்றும் பலவற்றை வாடிக்கையாளர்கள் பார்வையிட முடியும். இந்த இலவச சந்தா ம் முடிந்த பின்னரும் கூட இதை நீங்கள் தொடர விரும்பினால் மாதம் ரூ.99/- செலுத்தி அனுபவிக்கலாம்.

சிறந்த பொழுதுபோக்கு உள்ளடக்கம்

சிறந்த பொழுதுபோக்கு உள்ளடக்கம்

உடன், ஆக்ட் பைபர்நெட் ஆனது ஹூக் டிவி, பாஸ்ட்பிலிம்ஸ், ஆல்ட்பாலாஜி மற்றும் ஹங்காமா டிவி ஆகியவற்றின் கூட்டணி கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை வழங்கி வருகிறது. ஆனால் இவைகள் இலவச சந்தா அல்ல, கட்டண சந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Spectra Launches 1 Gbps Broadband Plans in Bengaluru, Rs 899 Plan Gives 400GB Data With Carry Forward Feature. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X