சைலண்டா சம்பவம் செய்த Vivo: 12ஜிபி ரேம் உடன் கம்மி விலையில் அறிமுகமான ஸ்பெஷல் எடிஷன் போன்!

|

மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC உடன் Vivo Y76s (t1 வெர்ஷன்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டூயல் ரியர் கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 4100 எம்ஏஎச் பேட்டரி என பல மேம்பட்ட ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது மிட் ரேன்ஜ் விலையில் கிடைக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி

விவோ நிறுவனம் சைலண்டாக Vivo Y76s (t1 வெர்ஷன்) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2408x1080 பிக்சல்கள் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

4100 எம்ஏஎச் பேட்டரி

4100 எம்ஏஎச் பேட்டரி

விவோவின் இந்த புதிய ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில் 4100 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. Vivo Y76s ஆனது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

டூயல் ரியர் பின்புற கேமராக்கள்

டூயல் ரியர் பின்புற கேமராக்கள்

முன்னதாக நவம்பர் மாதம் Vivo Y76s ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 SoC மூலம் இயக்கப்படுகிறது. டூயல் ரியர் பின்புற கேமராக்கள் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Vivo Y76s (t1 வெர்ஷன்) விலை

Vivo Y76s (t1 வெர்ஷன்) விலை

Vivo Y76s (t1 வெர்ஷன்) விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலையானது CNY 1,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.21,800 ஆகும். இது 12 ஜிபி ரேம் வேரியண்ட் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். ஸ்டார் டைமண்ட் ஒயிட், கேலக்ஸி ஒயிட் மற்றும் ஸ்டாரி நைட் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது.

Vivo Y76s (t1 வெர்ஷன்) சிறப்பம்சங்கள்

Vivo Y76s (t1 வெர்ஷன்) சிறப்பம்சங்கள்

Vivo Y76s (t1 வெர்ஷன்) சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். Vivo Y76s (t1 எடிஷன்) ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான FunTouch OS UI மூலம் இயக்கப்படுகிறது.

IPS LCD முழு-HD+ டிஸ்ப்ளே

IPS LCD முழு-HD+ டிஸ்ப்ளே

Vivo Y76s (t1 வெர்ஷன்) ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 1,080 x 2,408 பிக்சல்கள் தீர்மானம், 60Hz ரெஃப்ரஷிங் ரேட், 180Hz டச் மாதிரி விகிதத்தை கொண்டிருக்கிறது. இதில் IPS LCD முழு-HD+ ஆதரவுடன் கூடிய 6.58 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

50 எம்பி பிரதான கேமரா

50 எம்பி பிரதான கேமரா

Vivo Y76s (t1 வெர்ஷன்) ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி துணை கேமரா என டூயல் ரியர் கேமரா அமைப்புகள் உள்ளது. செல்பி ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் ஆதரவு இருக்கிறது. இந்த பவர் பட்டன் பாதுகாப்பு அம்சத்துக்கான கைரேகை ஸ்கேனர் ஆதரவையும் கொண்டுள்ளது.

4100 எம்ஏஎச் பேட்டரி

4100 எம்ஏஎச் பேட்டரி

Vivo Y76s (t1 வெர்ஷன்) ஸ்மார்ட்போனில் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இதில் 4100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த போனின் எடை 175 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Special Edition Smartphone Launched by Vivo! Vivo Y76s t1 Version Launched With 12GB RAM

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X