Home
News

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று முதல் 2 நாட்கள் சிறப்பு முகாம்.. உடனே இந்த வேலையை முடிங்க..

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆகஸ்ட் 8 (இன்று) மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய இரு நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு e-KYC முகாம் நடைபெறுகிறது. இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது e-KYC நடைமுறையை நிறைவு செய்யலாம்.

இதற்காக சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ரேஷன் கடைக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு கைவிரல் ரேகை பதிவு மூலம் e-KYC செயல்முறையை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

தற்போது தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, குடும்ப அட்டையில் (Ration Card) இடம்பெற்றுள்ள பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குறிப்பிட்ட நேரத்தில் தங்களது ஆதார் eKYC பணிகளை மேற்கொள்ளலாம்.

அதுவும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் கைரேகை அடிப்படையிலான Biometric e-KYC மூலம் சரிபார்த்து உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் பணியில், இதுவரை 95.86 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் e-KYC செய்யப்படாமல் உள்ள பதிவுகளையும் முழுமையாக நிறைவு செய்வதற்காக, மாநிலம் முழுவதும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மீதமுள்ள பயனாளிகளின் பதிவுகளை விரைவாக சரிபார்த்து, 100 சதவீதம் e-KYC பணியை முடிப்பதே இந்த சிறப்பு முகாமின் முக்கிய நோக்கமாகும்.

அதுவும் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும், வயது வரம்புக்கு உட்பட்ட குழந்தைகள் உட்பட, தங்களுக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று கைரேகை அடிப்படையிலான eKYC பதிவை மேற்கொள்ள வேண்டும். இதற்காக குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய இரு ஆவணங்களையும் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆதார் eKYC சரிபார்ப்பு பணியை உரிய முறையில் நிறைவு செய்வது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து பெறுவதற்கு வசதியாக இருக்கும்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

இதுவரை ஆதார் eKYC எனப்படும் கைரேகை சரிபார்ப்பை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த இரண்டு நாட்களில் தங்களது அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று தேவையான பதிவுகளை விரைவாக நிறைவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கைரேகை பதிவு பணியை இதுவரை முடிக்காமல் இருக்கும் பயனாளிகளுக்கு இந்த மாநில அளவிலான சிறப்பு முகாம் பயனுள்ளதாக அமையும். எனவே, குறிப்பிட்ட நாட்களில் நியாயவிலைக் கடைகளை அணுகி eKYC சரிபார்ப்பை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம்கள் இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

Best Mobiles in India

English summary
Special e-KYC Camp for Ration Card Holders on August 8 and 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X