ஸ்பெசல் 15 : தொழில்நுட்ப துறையில் பெருமைபட வைக்கும் அதிசக்திவாய்ந்த இந்தியர்கள்..

தொழில்நுட்பத்துறையில் ஜொலித்து வரும் நபர்களின் பட்டியலில் இந்தியர்களுக்கு எப்போதும் தனிஇடம் உண்டு. அவ்வகையில் தொழில்நுட்ப துறையில் அதிசக்திவாய்ந்த 15 இந்தியர்களைப் பற்றி இந்த 'ஸ்பெசல் 15'-ல் காணலாம்.

|

தொழில்நுட்பத்துறை அசுரவேகத்தில் வளர்ந்துவரும் நிலையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அத்துறையில் பலர் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். தொழில்நுட்பத்துறையில் ஜொலித்து வரும் நபர்களின் பட்டியலில் இந்தியர்களுக்கு எப்போதும் தனிஇடம் உண்டு. அவ்வகையில் தொழில்நுட்ப துறையில் அதிசக்திவாய்ந்த 15 இந்தியர்களைப் பற்றி இந்த 'ஸ்பெசல் 15'-ல் காணலாம்.

தொழில்நுட்ப துறையில் பெருமைபட வைக்கும் அதிசக்திவாய்ந்த இந்தியர்கள்..

முன்னாள் பெப்ஸிகோ

சி.ஈ.ஓவான இந்திரா நூயி அமேசான் இயக்குநர்கள் குழுவில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார். இதன்மூலம் மிகப்பெரிய பதவியில் இருக்கும் முதல் இந்தியர் என பெயர்பெற்றார். இப்போது 5 பெண்களை உள்ளடக்கிய அமேசான் குழுவில் 11 வது உறுப்பினராக இருக்கிறார். ஆனால் பெரிய நிறுவனங்களின் குழுவில் உள்ள மற்ற இந்தியர்கள் யார்? கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ மற்றும் பிற நிறுவனங்களின் உயர்பதவிகளில் இருக்கும் 15 இந்தியர்களின் பட்டியல் இதோ.

1) சுந்தர்பிச்சை (ஆல்பாபெட் /கூகுள்)

1) சுந்தர்பிச்சை (ஆல்பாபெட் /கூகுள்)

கூகுளின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் இவரது பெயர் தான் கண்டிப்பாக பட்டியலில் முதலில் இருக்கும். பிச்சை ஆல்பாபெட் மற்றும் அதன் இணை நிறுவனமான கூகுள் ஆகியவற்றின் இயக்குநர்கள் குழுவிலும் உள்ளார்.

2)கே ராம் ஶ்ரீராம்(ஆல்பாபெட்)

2)கே ராம் ஶ்ரீராம்(ஆல்பாபெட்)

ஆல்பாபெட் இயக்குனர் குழுவில் உள்ள இரண்டாவது இந்தியர் கே ராம் ஸ்ரீராம். சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் , கூகுளின் ஆரம்ப முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்தார். இவர் நெட்ஸ்கேப், அமேசான் போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

3) சத்யா நாதெள்ளா (மைக்ரோசாப்ட்)

3) சத்யா நாதெள்ளா (மைக்ரோசாப்ட்)

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் மைக்ரோசாப்ட் மேலும் மேலும் வலிமையாகிவருகிறது. இவர் மைக்ரோசாப்ட் இயக்குநர் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

4)பத்மஶ்ரீ வாரியர் (மைக்ரோசாப்ட்)

4)பத்மஶ்ரீ வாரியர் (மைக்ரோசாப்ட்)

டெல்லி ஐஐடி-ல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இவர், 2015 ஆம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் இயக்குனர் குழுவில் உள்ளார். முன்னதாக மோட்டோரோலாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தார்.

5)இந்திரா நூயி (அமேசான்)

5)இந்திரா நூயி (அமேசான்)

ஏற்கனவே குறிப்பிட்டபடி, அமேசான் இயக்குனர் குழுவில் 11 வது உறுப்பினராக இவர் உள்ளார். பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

6)சாந்தானு நாராயன் (அடோப்)

6)சாந்தானு நாராயன் (அடோப்)

அடோப் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சாந்தானு நாராயன், அதன் இயக்குனர் குழுவிலும் உள்ளான். இவருக்கு 2019 ல் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

7)தீரஜ் பாண்டே (அடோப்)

7)தீரஜ் பாண்டே (அடோப்)

2019 ஜனவரி மாதம் அடோப் இயக்குனர் குழுவில் நியமிக்கப்பட்ட தீரஜ் பாண்டே, எண்டர்ப்ரைஸ் கிளவுட் சாப்ட்வேர் துறையில் இயங்கும் நியுடானிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.இவர் கான்பூர் ஐஐடி-ல் பட்டம் பெற்ற கணினி பொறியாளர்.

8)சஞ்சீவ் அஹுஜா (வோடபோன்)

8)சஞ்சீவ் அஹுஜா (வோடபோன்)

சஞ்சிவ் அஹுஜா நவம்பர் 2018 ல் வோடபோன் நிறுவனத்தின் நிர்வாகம் சாரா இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர் டெலினார் ஏஎஸ்ஏ மற்றும் காட்பரி ஷ்வூப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் இருந்துள்ளார். நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து கம்ப்யூட்டர் இன்பர்மேசன் சிஸ்டம் பிரிவில் முதுகலை பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் பட்டமும் பெற்றுள்ளார்.

9)ஹரிஷ் மான்வானி (குவால்காம்)

9)ஹரிஷ் மான்வானி (குவால்காம்)

ஹரிஷ் மான்வானி மே மாதம் 2017 ல் குவால்காம் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் நியமிக்கப்பட்டார். யுனிலிவர் நிறுவனத்தில் பணியாற்றும்போது பிரபலமடைந்த மான்வானி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்துள்ளார்.

10)அபி தால்வால்கர் (ஏஎம்டி)

10)அபி தால்வால்கர் (ஏஎம்டி)

லிங்கிடுஇன் சுயவிவரத்தை பொறுத்தவரையில், அபி தால்வால்கர் தொழில்நுட்ப துறையில் 33 ஆண்டுகள் அனுபவம் உடையவர். 2017 ஜூலையில் இருந்து ஏஎம்டி நிறுவன இயக்குனர் குழுவில் இருக்கிறார்.

11)அஜய் பாங்கா (மாஸ்டர்கார்ட்)

11)அஜய் பாங்கா (மாஸ்டர்கார்ட்)

ஐஐஎம் அகமதாபாத் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான அஜய் பாங்கா, மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.மேலும் அவர் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு உறுப்பினராக உள்ளார்.

12)சஞ்சய் மெஹ்ரோட்ரா (மைக்ரான்)

12)சஞ்சய் மெஹ்ரோட்ரா (மைக்ரான்)

மைக்ரான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சஞ்சய் மெஹ்ரோத்ரா, அதன் இயக்குநர் குழு உறுப்பினராக உள்ளார்.மேலும் அவர் சான்டிஸ்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

13)மணீஷ் பாட்டியா (மைக்ரான்)

13)மணீஷ் பாட்டியா (மைக்ரான்)

மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கான நிர்வாகத் தலைவராக மனிஷ் பாட்டியா பணியாற்றி வருகிறார். மைக்ரான் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கான குறிக்கோள் மற்றும் பாதைக்கான நிர்மானிக்கும் பொறுப்பிலும் உள்ளார். திரு. பாட்டியா 2017 ல் மைக்ரானில் இணைந்தார்.

14)சுமித் சதனா (மைக்ரான்)

14)சுமித் சதனா (மைக்ரான்)

மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் துணைத் தலைவரும், தலைமை வணிக அதிகாரியுமான சுமித், கராக்பூர் ஐ.ஐ.டி.யில் பட்டம்பெற்ற மின்னணு பொறியியல் பட்டதாரி. அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

15)அருண் சரீன் (சிஸ்கோ)

15)அருண் சரீன் (சிஸ்கோ)

தொலைதொடர்புத் துறையில் மூத்தவரான அருண் சரீன், சிஸ்கோ நிறுவன இயக்குநர் குழுவில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அசென்சர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலும் உள்ளார்

Best Mobiles in India

English summary
Special 15 Most 'powerful Indians' in the tech industry: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X