மனைவிகளுக்கு குட் நியூஸ்.. இனி கணவர்கள் வீட்டுவேலை செய்யலனா காலி.. டிராக்கிங் App வருது!
இப்போதெல்லாம் பெண்கள் மட்டும் வீட்டு வேலையை செய்யாமல், ஆண்களும் செய்ய வேண்டும் என்று சமத்துவம் பேசத் தொடங்கி விட்டனர். இருப்பினும், பல ஆண்கள் வீட்டு வேலைகளை செய்யாமல் பெண்களுக்கு டிமிக்கு கொடுத்து வருகின்றனர். இவர்களை கண்காணிக்க அரசாங்கமே, "டிராக்கிங் ஆப்" ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் மட்டுமே வீட்டு வேலையை செய்து வருகின்றனர். இந்த வழக்கம் படிப்படியாக மாறிவருகிறது. வீட்டின் சமயலறையை விட்டு பெண்கள் எப்போது படிக்க தொடங்கினார்களோ அந்த காலம் முதலே சமத்துவம் துளிர்விட்டது. ஆண்களுக்கு, பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் கிடையாது என்று, அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதித்து காட்டி வருகின்றனர்.

இதனால், திருமணத்துக்கு பின் வீட்டின் அனைத்து வேலைகளையும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தைரியமாக கணவர்களுக்கு கட்டளையிடுகின்றனர். இல்லையென்றால், வீட்டில் பூகம்பமே வந்துவிடும் அளவிற்கு சம்பவம் நடக்கும் என்பது அனைத்து கணவர்களுக்கு தெரிந்திருக்கும். இதேபோலத்தான் மற்ற நாடுகளிலும் நிலைமை உள்ளது. இருப்பினும், அப்படிப்பட்ட பெண்களுக்கே டிமிக்கு கொடுத்து சில கணவர்கள் வீட்டு வேலைகளை செய்வது கிடையாது.
ஆபீஸ் வேலை இருக்கிறது, வெளியில் செல்ல வேண்டும் என்று பல காரணங்களை சொல்லி தப்பித்து ஓடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை எப்படி வேலை செய்ய வைப்பது என்று பெண்கள் பல யோசனைகளை செய்து பார்த்தும் தோல்வியை தழுவியிருப்பார்கள். இப்போது, அவர்களை லாக் செய்யும்விதமாக அரசாங்கமே ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
அண்மையில் ஜெனீவாவில் பாலியல் சமத்துவம் தொடர்பாக பன்னாட்டு கூட்டம் நடைபெற்றது. அதில், ஸ்பெயின் நாட்டின் பாலின சமத்துவ துறைக்கான அமைச்சர் ஏஞ்சலா ரோட்ரிக்ஸ் (Angela Rodrguez) ஒரு புதிய திட்டம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ஸ்பெயின் நாட்டில் வீட்டு வேலைகளை செய்ய ஆண்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய டிராக்கிங் ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இந்த ஆப் மூலம், ஒரு வீட்டில் உள்ள மொத்த குடும்ப உறுப்பினர்களில் ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் வீட்டு வேலைகளை செய்கின்றனர் என்பதை கண்காணிக்க முடியும். இதனால் யார் வீட்டுவேலைகளை செய்யாமல் அல்லது குறைவான வேலைகளை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும்.
இந்த ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதற்காக 2 லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 1.9 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள பெண்களின் சுமைகளை குறைக்கவே இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் ஒருவரது வீட்டில் இருக்கும் மகன், மகள், தந்தை, தாய் உள்ளிட்ட அனைவரும் அவர்களது வீட்டு வேலைகளை சமமாக பிரித்துக்கொள்ள முடியும்.
இந்த பிரிக்கப்பட்ட வேலைகளை அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் முடித்தார்களா அல்லது செய்யவில்லையா அல்லது எவ்வளவு முடிந்துள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். வீட்டில் கணவன் மனைவி மட்டுமே இருந்தால் அவர்கள் சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம்.
இது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








