2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.! புதிய சாதனை.!

|

நாசா அமைப்பை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஃபல்கான் 9ராக்கெட்

குறிப்பாக நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9ராக்கெட் அமெரிக்காவில் புளோரிடாவில்உள்ள கென்னடி ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

மனிதர்கள்

மேலும் தனியார் விண்வெளி நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பது இதுவேமுதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை காரணமாக இந்த திட்டம்

கடந்த வாரம் மழை காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அதன்படி இதில் நாசா அமைப்பை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் விண்ணுக்கு சென்று நாளை காலை 10.30 மணியளவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள்என்பது குறிப்பிடத்தககது.

 மனிதர்களை

சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் புறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் பில்லியனரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை போன்று பல்வேறுதனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

னத் தகவல்

மேலும் தனது நிறுவனத்தின் ஏவூர்தி விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதைக்கு கொண்டுசெல்வதை பார்த்து தான் உணர்ச்சிவசப்பட்டதாக
எலான் மஸ்க் கூறினார் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

அனுப்பும் முதல்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும்; மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே
முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்
நிறுவனம் நிறுவனம் பெற்றது.

 அனுப்பி இருந்தன.முதல்முறையாக தனியார் நிறுவனம்

இதற்கு முன் மனிதர்களை விண்ணுக்கு அமெரி்க்கா, ரஷ்யா, சீனா அரசுள் மட்டுமே அனுப்பி இருந்தன.முதல்முறையாக தனியார் நிறுவனம் மனிதர்களை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
History in the making: SpaceX propels two NASA astronauts into orbit: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X