Elon Musk என்ன செய்யுறீங்க? விண்வெளியில் டிராஃபிக் ஜாம் ஆக போகுது! ஏற்கனவே 4400 சாட்டிலைட்! இதுல புதுசா 56-ஆ?
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 56 ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் செயற்கைக்கோள்களின் புதிய தொகுப்பை பூமிக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஆண்டின் 31வது வெற்றிகரமான பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக இந்த சாட்டிலைட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாமா?
மே 14 ஆம் தேதி, அதிகாலை 1:03 மணி (EDT) நேரப்படி, புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்திலிருந்து SpaceX ராக்கெட் ஏவப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட் (Falcon 9 Rocket) மூலம், 56 ஸ்டார்லிங்க் (Starlink) சாட்டிலைட்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் எடுத்து சென்றுள்ளது. இந்த செயற்கைகோள்கள் அணைத்தும், வெற்றிகரமாக பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஃபால்கன் 9 இன் முதல் நிலை வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது. இது ஸ்பேஸ்எக்ஸ் ட்ரோன்ஷிப்பில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இது 11வது வெற்றிகரமான ஏவுதல் என்பது குறிப்பிடத்தக்கது. 56 புதிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வளர்ந்து வரும் பிராட்பேண்ட் மெகா கான்ஸ்டலேஷன் தொகுப்பில் சேரும். இந்த தொகுப்பு இப்போது கிட்டத்தட்ட 4,400 செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது.
ஆம், இவற்றில், 4,000-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இப்போது செயல்பாட்டில் உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் நிறுவனம், ஒவ்வொரு வெற்றிகரமான வெளியீட்டின் போதும் இந்த செயற்கைகோள்களை அதன் தொகுப்பில் சேர்த்து தேவைக்கேற்ப இயக்கி வருகிறது. மே 14 ஆம் தேதி, ஏவப்பட்ட ராக்கெட் இந்த ஆண்டின் 29வது பயணமாகும்.
SpaceX இன் சக்திவாய்ந்த ஃபால்கன் ஹெவி ராக்கெட் ஆன ஃபால்கன் 9 மூலம் ஏவப்பட்ட மூன்றாவது சுற்றுப்பாதை பணி இதுவாகும். ஸ்டார்லிங்க் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் செலவு குறைந்த ஸ்பேஸ் லான்ச் சேவையை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இது குறிக்கிறது. SpaceX இன் பணியின் வெற்றியானது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் நிறுவனத்தின் தொடர்ச்சியான முன்னேற்றங்களுக்கு ஒரு சான்றாகும்.

ரியூசபிள் ராக்கெட்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த பிறகு, விண்வெளி பயணங்கள் இப்போது முன்பை விட மிக எளிமையாகிவிட்டது மற்றும் குறைந்த விலை செலவில் விண்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஃபால்கன் 9 இன் முதல் கட்டத்தை மீண்டும் பூமியில் தரையிறக்குவதன் மூலம், நிறுவனம் ஒவ்வொரு வெளியீட்டிலும் குறிப்பிடத்தக்க செலவுகளையும் வளங்களையும் சேமிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி, எலோன் மஸ்க், விண்வெளிப் பயணத்தை மேலும் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையாகவும் மாற்றுவதற்கான தனது இலக்கை அடைவதற்கு இந்தத் தொழில்நுட்பம் முக்கியமானது என்று முன்பு கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. புதிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் வெளியீடு, உலகெங்கிலும் இன்னும் அதிகமான பகுதிகளுக்கு அதிவேக இணையத்தை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக பாரம்பரிய பிராட்பேண்ட் உள்கட்டமைப்பு கிடைக்காத தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் இது சிறப்பாக செயல்படும் படி, கவனம் செலுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பிளவைக் குறைப்பதற்கும், எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். உண்மையில், இந்த முயற்சி பாராட்டிற்குரியது.


Click it and Unblock the Notifications








