தோல்வி நிலையல்ல என்று நிரூபித்த எலான் மஸ்க்: ஸ்டார்ஷிப் எஸ்என் 15 விண்கல சோதனை வெற்றி!

|

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு தரையிறக்கப்பட்டது. எலான் மஸ்க்கின் சந்திரனுக்கு விண்வெளி வீரர்கள் அனுப்பும் திட்டமும், மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் திட்டத்திற்கான ராக்கெட் ஷிப் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

முந்தைய சோதனை தோல்வி

முந்தைய சோதனை தோல்வி

முந்தைய நான்கு சோதனை விமானங்களும் படிப்படியாக வெற்றி அடைந்தாலும் சோதனை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் முழு அளவிலான எஃகு, புல்லட் வடிவ ராக்கெட் ஷிப்பை வடிவமைத்து மேம்படுத்தியு, இந்த மேம்படுத்தப்பட்ட விண்கலம் மெக்ஸிகோ விளைகுடாவில் 6 மைல்-க்கு மேலாக பறந்து வெற்றிகரமாக சுற்றுப்பாதை அடைந்து மீண்டும் தரையிறக்கப்பட்டது. விண்கலம் சோதனை ஓட்டம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டது.

ஸ்டார்பேஸ் விமான கட்டுப்பாடு நிலையம்

ஸ்டார்பேஸ் விமான கட்டுப்பாடு நிலையம் இதை உறுதிப்படுத்தியது. மேலும் இந்த நேரடி வீடியோவும் கிடைக்கப்பெற்றது. இத வெளியீட்டு வர்ணனையாளர் ஜான் இன்ஸ்ப்ரக்கர் குறிப்பிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு அடுத்த சில ஆண்டுகளில் விண்வெளி வீரர்களை சந்திர மேற்பரப்புக்கு செல்ல நாசா ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்பை தேர்வு செய்தது. இருப்பினும் இதற்கு ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் மற்றும் டைனடிக்ஸ் கடும் போட்டியாக இருக்கிறது. மேலும் நாசாவுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் கிடைக்கும் பணம் ஸ்டார்ஷிப் உருவாக்கத்திற்கு உதவும் என மஸ்க் குறிப்பிட்டார்.

ஸ்டார்ஷிப்பின் "டியர்மூன்" திட்டம்

ஸ்பேஸ்எக்ஸ் முன்னதாகவே 2023 ஆம் ஆண்டு இலக்கு வெளியிட்டது. அது ஸ்டார்ஷிப்பின் "டியர்மூன்" திட்டமாகும். இந்த திட்டத்தில் ஜப்பானிய கோடீஸ்வரர் யூசாகு மெய்சாவா மற்றும் சிலரை பூமிக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஒரு வார கால மேற்கொள்ளப்படும் பயணத் திட்டமாகும். எலான் மஸ்க்கின் கனவுத்திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். ஆனால் இதற்கான முன்மாதிரி விண்கலம் சோதனையின்போது வெடித்து சிதறியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ப்ரோட்டோடைப் பூமிக்கு திரும்பியபோது வெடித்து சிதறியது.

செவ்வாய் கிரக பயணம்

செவ்வாய் கிரக பயணம்

செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்கக்கூடிய ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன்மாதிரி நேற்று அறிமுகம் செய்து சோதனை நடத்தப்பட்டது. சோதனை விண்கலத்துடனான ஸ்டார்ஷிப் ராக்கெட் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தின் மாதிரியை 40 ஆயிரம் அடி உயரத்திற்கு செலுத்த ஸபேஸ்எக்ஸ் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் எத்தனை அடி உயரத்திற்கு சென்றது என்று குறிப்பிடவில்லை. ஆனால் சில நிமிட பயணத்துக்கு பிறகு பூமிக்கு தரையிறங்கியபோது வெடித்து சிதறியது.

ஸ்டார்ஷிப்பின்

ஸ்டார்ஷிப்பின் "டியர்மூன்" திட்டம்

இதுகுறித்து ஸ்பேஸ்எகஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் தெரிக்கையில், இது வெற்றிகரமான சோதனை, தங்களுக்கு தேவையான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். ஸ்பேஸ் எக்ஸின் இந்த சோதனை ஓட்டம் யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. அதில் அற்புதமான சோதனை, வாழ்த்துக்கள் ஸ்டார்ஷிப் அணி என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு ஏற்ப இந்த முறை ஸ்டார்ஷிப் சோதனை வெற்றிப்பெற்றது. இந்த முறை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம் மீண்டும் விண்ணில் தரையிறங்கியது. கடந்த 2 சோதனை படிப்படியாக முன்னேறி தோல்வி அடைந்த நிலையில் இது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன்மாதிரி

ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன்மாதிரி

தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.

சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.

Best Mobiles in India

English summary
SpaceX Starship Landing Nominal: SN15 Rocket Lands Successfully

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X