SpaceX ராக்கெட் நோஸ்கோன்களை கேட்ச் பிடித்த கப்பல்கள்! நடுக்கடலில் எடுக்கப்பட்ட வீடியோ!

|

தென் கொரிய அனாசிஸ்- II (Anasis-II) இராணுவ செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற ஸ்பேஸ்எக்ஸ் (Spacex) நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் வெற்றிகரமாகச் செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பியது. திங்கள்கிழமை ஏவப்பட்ட இந்த ரீயூசபில் ராக்கெட் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய சாதனையைத் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.

கப்பல் மூலம் நடுக்கடலில் கேட்ச்

விண்ணிற்கு அனுப்பப்பட்ட ராக்கெட்டில் இருந்து பூமியில் மீண்டும் விழும் பாகங்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்பேஸ்எக்ஸ் கப்பல் மூலம் நடுக்கடலில் கேட்ச் பிடித்துள்ளது. கடலில் இதற்காக இரண்டு ட்ரோன் கப்பல்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. விண்ணிலிருந்து தரையிறங்கிய முதல் கட்ட பூஸ்டரை நடுக்கடலில் அழகாக கேட்ச் பிடித்துள்ளது.

ஏவுதலின் போது ராக்கெட் சரக்குகளைப் பாதுகாக்கும் முக்கிய பாகமாக அதன் நோஸ்கோன் பகுதி இருக்கிறது. இந்த நோஸ்கோன் பகுதி திறந்து பிரிந்து மீண்டும் பூமியில் விழுகிறது. ஸ்பேஸ்எக்ஸின் மிஸ்.ட்ரீ மற்றும் மிஸ். சீஃப் (Ms. Tree and Ms. Chief) என்ற இரண்டு கப்பல்கள், வானத்திலிருந்து விழுந்த இரண்டு ராக்கெட் துண்டுகளையும் அவற்றின் அகல வலைகளில் பத்திரமாகப் பிடித்துள்ளது.

உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தற்பொழுது இந்த ராக்கெட் பாகங்களின் கேட்ச்சிங் வீடியோக்களை ஸ்பேஸ்எக்ஸ் டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. நோஸ்கோனின் ஒவ்வொரு அரை பாகங்களும் இரண்டு கப்பல்களில் பத்திரமாக பாராசூட்டுடன் பிடிக்கப்பட்டதைத் தெளிவாகக் காட்டுகிறது. SpaceX நிறுவனர் ஏலோன் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்திலும் இந்த செய்தியை உற்சாகத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

புதிய சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!புதிய சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

SpaceX கப்பல்கள்

SpaceX கப்பல்கள் மூலம் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பிய பாகங்கள் இரண்டும் பத்திரமாகப் பிடிக்கப்பட்டது" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிகள் அனைத்தும் ஏவுதளங்களின் செலவைக் குறைக்கவும், ராக்கெட் பாகங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான அறிவுப்பூர்வமான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
SpaceX ships finally catch a whole Falcon 9 rocket nose cone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X