விலை: கம்மி, ஸ்பீடு: செம- செயற்கைகோள் மூலம் இண்டர்நெட்- அனைத்துபகுதிகளிலும் அதிவேக இணையம்-குவியும் பாராட்டுகள்

|

பிராட்பேண்ட் சேவையில் ஒரு புரட்சி என்றே இந்த ஸ்டார்லிங்க் சேவையை கூறலாம். செயற்கைக்கோள் மூலம் கிராமப்புற, வனப்பகுதி, தொலைத்தூர பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் திட்டம் இதுவாகும். எலான் மஸ்க்கின் டெஸ்லா இந்தியாவிற்கு வந்த நிலையில் இந்த பிராட்பேண்ட் ஸ்டார்லிங்க் சேவை கூடிய விரைவில் இந்தியாவுக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் ஸ்டார்லிங்க் ஆரம்ப அணுகல் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் சேவைக்கு கொண்டு வந்தது. செயற்கைகோள் இணைய சேவையானது முதல் சில மாதங்களிலேயே 10,000-த்துக்கும் மேற்பட்ட பயனர்களை பெற்றது.

பயனர்கள் சேகரித்த கருத்துக்கள்

பயனர்கள் சேகரித்த கருத்துக்கள்

இதுகுறித்து சிஎன்பிசி வெளியிட்ட தகவல்கள் குறித்து பார்க்கலாம். சேவையின் உண்மை அனுபவத்தை தெரிந்து கொள்ள சிஎன்பிசி ஸ்டார்லிங்க் பயன்படுத்தும் 50-க்கு மேற்பட்டவர்களிடம் கருத்துகளை சேகரித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பில் கனடா மற்றும் கலிபோர்னியா, மெக்சிகன் உள்ளிட்ட 13 யுஎஸ் மாநிலங்களை சேர்ந்தவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டார்லிங்க் சேவை

ஸ்டார்லிங்க் சேவை

மேலும் ஸ்டார்லிங்க் பயனர்களில் பெரும்பாலானோர் விவசாய நிலங்கள், வனப்பகுதி உள்ளிட்ட கிராமப்புறம் மற்றும் தொலைதூர பகுதிகளை சேர்ந்தவர்கள். ஸ்டார்லிங்க் சேவை நீண்டகாலம் வழங்க வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும், சேவைக்கான பீட்டாவின் விலை பிற கிடைக்கும்த்தன்மை விலையை விட நியாயமானதாக உள்ளதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் இணைப்பு

ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் இணைப்பு

ஸ்டார்லிங்க் பயன்பாடு குறித்து பார்க்கையில், இது ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இணைய நெட்வொர்க் உருவாக்கி வழங்கும் சேவையாகும். தொலைதூர பயனர்களுக்கும் அதிவேக இணையத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையின் விண்மூன் என இது அழைக்கப்படுகிறது. உயரமான பகுதிகள், மேற்கூரை ஆண்டெனா பொருத்த வேண்டும் என்ற கவலை தவிர்க்கும் வகையில் இதன் வேகம், கட்டணம் ஆகியவை இருக்கிறது.

பயனர்கள் திருப்திபடும் சேவை

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் "சிறந்தது ஏதுமில்லை" என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதேபோல் இதுகுறித்த சிஎன்பிசி கணக்கெடுப்புப்படி பயனர்கள் பெரும்பாலானோர் நவம்பர், பிப்ரவரி மாதங்களில் இணைப்புகள் குறித்த அழைப்புகளை பெற்றுள்ளனர் எனவும் யுஎஸ்-ல் பீட்டாவின் கீழ் மாதம் 99 டாலர் விலையில் இணைப்பு பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் செயற்கைக்கோள்களுடன் இணைக்க வேண்டிய உபகரணங்களான வரி, ஷிப்பிங், ஆண்டெனா போன்ற உபகரணங்களுக்கு முன்பணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஸ்பேஸ்எக்ஸ் பயனர் கருவிகளை உண்மையாக குறைவான விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

300 இணைய வேகம் இலக்கு

ஸ்டார்லிங்க் நிறுவனம் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முன்னதாகவே 60 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது. ரூட்டர், ஆண்டெனா போன்ற உபகரணங்களுக்கு 499 டாலர் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது 150 எம்பிபிஎஸ் ஆக இருக்கும் பதிவிறக்க வேகம் செயற்கைகோள்கள் அதிகரிக்கும் போது 300 எம்பிபிஎஸ் ஆக அதிகரிக்கும் என எலான்மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
SpaceX's Starling project, provides Internet via satellite: Users Experience

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X