விண்வெளி மையத்திற்கு மனிதர்களை முதல்முறையாக அழைத்துச்செல்லும் ஸ்பேஸ்எக்ஸ்!

|

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரும் மே 27 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று நாசா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததுள்ளது‌. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு அமெரிக்காவிலிருந்து மனிதர்கள் செல்லும் முதல் விண்வெளிப் பயணம் இது.

 நாசா மீண்டும்

"மே 27 அன்று, நாசா மீண்டும் அமெரிக்க விண்வெளி வீரர்களை அமெரிக்க ராக்கெட்டுகளில் அமெரிக்க மண்ணிலிருந்து விண்ணிற்கு அனுப்பும்!" என தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி

ஜூலை 2011 முதல், அமெரிக்க விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு(ஐ.எஸ்.எஸ்) அனுப்ப அமெரிக்கா ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டுகளை மட்டுமே நம்பியுள்ளது.

மே 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு: சொமேட்டோ, ஸ்விக்கி செயல்படாது- அதிரடி உத்தரவு!மே 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு: சொமேட்டோ, ஸ்விக்கி செயல்படாது- அதிரடி உத்தரவு!

 நாசா மே மாதத்தில்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மே மாதத்தில் மனிதர்களை மீண்டும் விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்த நிலையில், உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தலாக இருந்தபோதிலும் இந்த திட்டத்தில் இருந்து பின்வாங்காமல் உள்ளது.

பால்கான் 9 ராக்கெட்டில்

விண்வெளி வீரர்கள் ராபர்ட் பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் பால்கான் 9 ராக்கெட்டில், எலன் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் வடிவமைத்த க்ரூ டிராகன் விண்கலத்தில் பயணம் செய்யவுள்ளனர்.

 பெஹன்கென் மற்றும் ஹர்லி

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில், அப்பல்லோ மற்றும் விண்வெளி விண்கலப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏவுதளயான 39A இலிருந்து மே 27 அன்று உள்ளூர் நேரப்படி மாலை 4:32 மணிக்கு (20:32 UTC) அவர்கள் விண்வெளி பயணத்தை துவங்குவர் என்று நாசா தெரிவித்துள்ளது.

பெஹன்கென் மற்றும் ஹர்லி இருவரும் இந்த மிஷனுக்காக பல ஆண்டுகளாக பயிற்சிபெற்று வருகின்றனர். இந்த மிஷன் மூலம் அமெரிக்கா இனிமேலும் மனிதர்களுக்கான விண்வெளி பயணங்களுக்கு ரஷ்யாவை நம்பாமல் இருப்பதற்கான வாய்ப்புகளை பிரகாசமாக்கியுள்ளது.

 டிராகன் காப்ஸ்யூல்

இந்த க்ரூ டிராகன் காப்ஸ்யூல் என்பது ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூலின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். இந்த டிராகன் காப்ஸ்யூல் 2012 முதல் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பொருட்களை அனுப்ப பயன்படுகிறது.

இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பின்பு ஐ.எஸ்.எஸ் உடன் இணைய சுமார் 24 மணி நேரம் ஆகும். சர்வதேச விண்வெளி மையத்தில் அவர்கள் தங்கியிருக்கும் காலம் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை

விண்வெளி வீரர்

ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் தற்போது ஐ.எஸ்.எஸ். மையத்தில் தங்கியுள்ளனர்.


விண்வெளி விண்கலம் சகாப்தத்தில் பல்வேறு சிக்கல்களில் தவித்துவரும் நாசாவிற்கு, இந்த மே மிஷன் ஒரு மைல்கல்லாக இருக்கும். கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்க விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்து சென்ற விண்கலங்கள் இரண்டு ஏற்கனவே வெடித்தது குறிப்பிடத்தக்கது.

விண்கலங்களை கைவிட்ட பிறகு, நாசா

அந்த விண்கலங்களை கைவிட்ட பிறகு, நாசா தனது அடுத்த தலைமுறை விண்கலத்தை உருவாக்க தனியார் பக்கம் தனது பார்வையை திரும்பியது. ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் போயிங் ஆகியவை ஒரு குழுவான மனிதர்கள் பயணிக்கும் காப்ஸ்யூலை உருவாக்குவதில் போட்டியிடுகின்றன.


ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்-ஐயும், போயிங் தி ஸ்டார்லைனரும் உருவாக்கிய நிலையில், ஸ்டார்லைனர் கடந்த டிசம்பரில் ஒரு சோதனை ஓட்டத்தின் போது பின்னடைவை சந்தித்தது.

விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனமாக ஸ்பேஸ்எக்ஸ் இப்போது தயாராக உள்ளது.

 ஸ்பேஸ்எக்ஸ் 15 முறை விண்வெளி

கடந்த மார்ச் மாதத்தில், எலன் மஸ்க்கின் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் ஐ.எஸ்.எஸ்-க்கு ஒரு சுற்று பயணம் மேற்கொண்டது. இது பூமியிலிருந்து 250 மைல் (400 கிலோமீட்டர்) க்கும் அதிகமான சுற்றுப்பாதையில் உள்ளது. அட்லாண்டிக்கு திரும்பும் முன்னர் ஆறு நாட்கள் ஒரு டம்மி மனித பொம்மையுடன் விண்வெளியில் இருந்தது.


2012ம் ஆண்டு முதல் ஸ்பேஸ்எக்ஸ் 15 முறை விண்வெளி பயணத்தை மேற்கொண்ட நிலையில், நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

Best Mobiles in India

English summary
SpaceX Will Carry Its First Humans to The Space Station Next Month: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X