வரலாற்று சிறப்புமிக்க ஸ்பேஸ்எக்ஸ் பயணத்தில் விண்வெளிக்கு சென்ற சிறப்பு விருந்தினர்!

|

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது மிக விலைமதிப்பற்ற விண்கலத்தை கடந்த சனிக்கிழமையன்று, இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அலங்கரிக்கப்பட்ட டைனோசர் பொம்மையுடன் விண்வெளியில் செலுத்தியது.

புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து,

பிற்பகல் 3:22 மணிக்கு, புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து, நாசா நிதியுதவியுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வடிவமைத்த க்ரூ டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு பால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

விண்கலம் மனிதர்களை

ஒரு வணிகரீதியான விண்கலம் மனிதர்களை விண்வெளிக்கு அழலத்து செல்வது இதுவே முதல் முறை.‌ அதுமட்டுமின்றி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பேஸ் ஷட்டில் திட்டம் முடிவடைந்த பிறகு முதல்முறையாக விண்வெளி வீரர்கள் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு பயணித்துள்ளனர்.

சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?சுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள்! நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்?

ட டைனோசர் பொம்மை

மேலும் அலங்கரிக்கப்பட்ட டைனோசர் பொம்மை ஒன்று விண்வெளிக்கு பயணிப்பதும் இதுவே முதல் முறையாகும். (ஆனால் டைனோசர் புதைபடிவங்கள் இதற்கு முன்பு நம் வளிமண்டலத்திற்கு அப்பால் பயணித்துள்ளது)

விண்கலங்களில்

இந்த டைனோசர் விண்கலங்களில் பொம்மைகளை கொண்டுசெல்லும் பாரம்பரியத்திற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. பொம்மைகள் காற்றில் மிதக்க ஆரம்பித்ததும், விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியேறியதை பார்வையாளர்கள் அறிவார்கள். அதனால்தான் அவை பெரும்பாலும் "பூஜ்ஜிய-ஈர்ப்பு குறிகாட்டிகள்" என்று அழைக்கப்படுகின்றன.


விண்கலம் ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, நாசாவின் க்ரூ டிராகனின் நேரடி காணொளியில் டைனோசர் பொம்மை தோன்றியதுடன், அது விண்கலத்தின் கேபினைச் சுற்றி மிதந்து கொண்டிருந்தது. பெஹன்கனை நோக்கி நகர்ந்த அந்த பொம்மையை, அவர் ஒதுக்கித் தள்ளினார்.

தோன்றியபோது நாசா

டைனோசர் திரையில் தோன்றியபோது நாசா வர்ணனையாளர் ஒருவர் கூறுகையில், "எங்கள் பூஜ்ஜிய ஈர்ப்புவிசை குறிகாட்டி அங்கே மிதப்பதை நாங்கள் பார்த்தோம். பாப் மற்றும் டக் அவர்களுடன் எடுத்துசென்றது என்ன என்பது பற்றி எங்களுக்கு கொஞ்சம் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்." என தெரிவித்துள்ளார்.

டைனோசரைத் தேர்ந்தெடுத்தது யார், அவர்கள் ஏன் அதைத் தேர்ந்தெடுத்தார்கள், அல்லது அதற்கு ஒரு பெயர் இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த புதன்கிழமை ராக்கெட் முதலில் விண்ணில் செலுத்த திட்டமிட்டபோது, (பின்னர் மோசமான வானிலை காரணமாக தாமதமானது), நாசாவின் நேரலை ஒளிபரப்பு தயாரிப்புகளின் போது டைனோசரை பார்வையாளர்கள் முதலில் கண்டனர்.


புவி இயற்பியலாளர் மைக் மெக்கின்னன் ட்விட்டரில், இந்த பொம்மை TY நிறுவனத்தின் Flippables Tremor Dinosaur ஆக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

 தனது முதல் சோதனை

க்ரூ டிராகன் தனது முதல் சோதனை விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியபோது, ​​விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாமல், அது "Buddy" என்ற பெயர்கொண்ட ஒரு பொம்மையை சுமந்துசென்றது. பின்னர் அந்த மாடல் பொம்மைகளை கடைகளில் பரபரப்பாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும், TY நிறுவனம் Tremor Dinosaur பொம்மை உற்பத்தியை நிறுத்திவிட்டதால், அமேசான், வால்மார்ட், பார்ன்ஸ் மற்றும் நோபல் ஆகியவற்றில் விற்பனைக்கு கையிருப்பில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
SpaceX Launched Its Most Precious Dinosaur Toy Cargo Into Space: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X