4 பேரும் நலம், 6 முறை பூமியை சுத்துட்டாங்க- ஸ்பேஸ் எக்ஸ் இன்ஸ்பிரேஷன்-4 மிஷன் அமோகம்!

|

ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் இன்ஸ்பிரேஷன்-4 பொதுமக்கள் 4 பேரை ஏற்றி விண்ணுக்கு சென்றது. அமெரிக்காவின் ஷிப் 4 பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பெரும் கோடீஸ்வரருமான ஜாரிட் ஐசக்மேன் தலைமையில் ஆன 4 பேர் கொண்ட குழுவினர் விண்ணுக்கு பயணம் செய்தனர்.

சுற்றுப்பாதையை நோக்கி பயணம்

சுற்றுப்பாதையை நோக்கி பயணம்

ஒரு ராக்கெட் அனைத்து அமெச்சூர் குழுவினர் உடன் சுற்றுப்பாதையை நோக்கி செல்வது இதுவே முதன்முறையாகும். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் கேப் கெனவெரல் நகரில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. இது இந்திய நேரப்படி அதிகாலை 5:32 மணியளவில் ஸபேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 பேரை ஏற்றிச் சென்றது.

12 நிமிடங்களில் பிரிந்த விண்கலம்

விண்ணில் ராக்கெட் பறந்து 12 நிமிடங்களில் விண்கலம் பிரிந்தது. வெற்றிகரமாக விண்கலம் புவியின் நீள்வட்டபாதைக்குள் நுழைந்தது. சுற்றுப்பயணத்துக்கான பணிக்கு 38 வயதான தொழில்முனைவோர் ஜாரெட் ஜசக்மேண் தலைமை தாங்கினார். தொழில்முறை விண்வெளி வீரர்கள் இல்லை என்பதும் அனைத்து அமெச்சூர் (அனுபவமில்லாத) குழுவினருடன் ஒரு ராக்கெட் சுற்றுப்பாதையை நோக்கி செல்வது இதுவே முதன்முறையாகும். செயற்கைக்காலுடன் விண்வெளிக்கு சென்ற முதல் பெண் என்ற பெறுமையை ஆ்ர்சனாக்ஸ் ஆவார். மேலும் கிறிஸ் செம்பரோஸ்கி மற்றும் சியான் பிராக்டர் ஆகிய 2 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல் முன்னாள் வீரர் ஆன செம்ப்ரோஸ்கி, 51 வயதான சியான் பிராக்டர் ஆகியோர் இந்த பயணத்தில் இருக்கின்றனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயற்சி

இவர்கள் 4 பேரும் விண்வெளி பயணத்துக்காக 9 மாதங்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயற்சி பெற்றுள்ளனர். இந்த விண்கலம் மூன்று நாட்கள் சுற்றுலா திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது வரை 6 முறை பூமியை சுற்று வந்துள்ளதாகவும், உள்ளே இருப்பவர்கள் சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் ஆனது பூமியில் இருந்து 590 கிமீ தொலைவில் சுற்றி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ ஷெப்பர்ட் ராக்கெட்

இதற்கு முன்னதாக அமேசான்.காம் இன்க் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் மூன்று பேரை ஏற்றிக் கொண்டு ப்ளூ ஆர்ஜினின் முதல் விமானம் விண்ணுக்கு பறந்தது. ப்ளூ ஆர்ஜினின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு தரையிறங்கியது. விண்கலன் பூமியில் இருந்து சுமார் 62 மைல் (100 கிலோமீட்டர்) உயரத்தில் கர்மன் கோட்டை கடந்து சென்றது. இதனால் குழுவினர் எடை குறையும் உணர்வை அனுபவித்தனர். பின் காப்ஸ்யூல் ஆறு பாராசூட்களுடன் பூமிக்கு திரும்பியது.

விர்ஜின் கேலடிக்

விர்ஜின் கேலடிக்

அதேபோல் விர்ஜின் கேலடிக் ஹோல்டிங்ஸ் இன்க் விண்வெளி பயணம் வெற்றிகரமாக மேற்கொண்ட சில நாட்களில் ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனமும் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது விரைவில் விண்வெறி சுற்றுலா மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை குறிக்கும் விதமாக இருக்கிறது. மேலும் அடுத்தடுத்த பயணங்களை மேற்கொள்வதற்கு பல செல்வந்தர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

தொடரும் விண்கலம்

தொடரும் விண்கலம்

இருப்பினும் ரிச்சர்ட் பிரான்சன் பயணத்தின் சில நாட்களுக்கு பிறகு பெசோஸ் பயணிப்பதால் இது போட்டி என்று கருத வேண்டாம் எனவும் பெசோஸ் குறிப்பிட்டார். அடுத்த சில தினங்களில் தற்போது எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பயணம் மேற்கொண்டது.

ப்ளு ஆர்ஜின் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் நகரில் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

ப்ளூ ஆர்ஜின் தலைமை நிர்வாக அதிகாரி

ப்ளூ ஆர்ஜின் தலைமை நிர்வாக அதிகாரி

நிறுவனத்தின் அடுத்த விமானம் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் பயணிக்கும் என ப்ளூ ஆர்ஜின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஸ்மித் கூறினார். அதேபோல் எதிர்காலத்தில் பறக்கும் விமானத்தில் பறக்க ஏணையத்தோர் ஆர்வத்துடன் பணம் செலுத்த தயாராக இருப்பதாக ஸ்மித் கூறினார்.

அமெரிக்கா டெக்ஸாஸில் இருந்து பறந்த ராக்கெட், 3600 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
SpaceX Inspiration- 4 Mission Launches with Civilian Crew: Travels 160Km Higher than ISS

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X