Home
News

விண்கலத்தில் கழிவறை உடைந்ததால் ஏற்பட்ட சிக்கல்.! தவித்த விண்வெளி வீரர்கள்.!

அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் கனடா போன்றவை இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. குறிப்பாக இந்த சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

 3 முதல் 6 மாதங்கள் வரை அங்கு

குறிப்பாக விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படும் வீரர்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை அங்கு தங்கி இருந்து ஆய்வு செய்து விட்டு திரும்புவார்கள். அதேபோல் சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க வீராங்கனை மேகன் மெக்ஆர்தர், பிரான்ஸ் வீரர் தாமஸ் பெஸ்குவெட் உள்பட 3 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர்.

விண்கலத்தில் இருந்த கழிவறை

அந்த சமயம் விண்கலத்தில் இருந்த கழிவறை உடைந்ததாக கூறப்படுகிறது. எனவே இதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே 3 விண்வெளி வீரர்களும் டயப்பர்களை பயன்படுத்தினார்கள். இந்த பிரச்சனையால் சுமார் 20 மணி நேரம் அவர்கள் தவிப்புக்குள்ளானர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

குறித்து பூமிக்கு திரும்பிய

மேலும் இந்த சம்பவம் குறித்து பூமிக்கு திரும்பிய மேகன் மெக்ஆர்தர் தெரிவித்தது என்னவென்றால், விண்வெளி பயணம் மிகவும் சவால்கள் நிறைந்தது. எனவே இது எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் மற்றும் கவனித்துக் கொள்ளும் ஒன்று. எனவே நாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்று கூறினார்.

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்

அதேபோல் நாசா அமைப்பு பெர்சவரன்ஸ் விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய
புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டது. குறிப்பாக இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் போன்றவற்றை இதுவரை இல்லாத அளவு துல்லியமான தரத்தில் புகைப்படங்களை காணமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்சவரன்ஸ் விண்கலத்தின்

குறிப்பாக பெர்சவரன்ஸ் விண்கலத்தின் செயல்பாடுகளை நாசா வானியாலாளர் எமி வில்லியம்ஸ் தலைமையிலான குழு ஆய்வு
செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கத. மேலும் சமீபததில் கிடைத்த செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை குறித்து வில்லியம்ஸ் கூறுகையில், ஜெசேரோ பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளின் அம்சங்களும், நமது பூமியின் நதி டெல்டாக்களில் உள்ள வடிவங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படங்களில் காணப்படும் மூன்று அடுக்குகளின் வடிவமானது, சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் என எமி வில்லியம்ஸ் கூறியுள்ளார். இருந்தபோதிலும் இந்த படங்கள் ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்றது தான் என்றும், ரோவர் கருவியை எங்கு அனுப்ப வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தீர்மானப்பதற்கு இது உதவும் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பிடத்தக்கது

பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

News Source: thehindu.com

Best Mobiles in India

English summary
SpaceX crew returning using diapers after toilet breaks: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X