என்னா செய்றீங்க., இப்படியே போன இழுத்து மூட வேண்டியது தான்: எலான் மஸ்க் காரசார மெயில்., ஏன் எதற்கு?

|

எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்களுக்கு நெருக்கடியான மின்னஞ்சலை அனுப்பி இருக்கிறார். அதில் ராப்டர் என்ஜின் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லவில்லை என்பதை குறிப்பிட்டு அதை மேற்கோள் காட்டி இருக்கிறார்.

மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்

மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்

தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.

விண்ணுக்கு சென்ற ராக்கெட்

விண்ணுக்கு சென்ற ராக்கெட்

சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. இதில் பங்குபெற்ற முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. எலான் மஸ்க்கின் கனவுத்திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். ஆனால் இதற்கான முன்மாதிரி விண்கலம் சோதனையின்போது வெடித்து சிதறியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ப்ரோட்டோடைப் பூமிக்கு திரும்பியபோது வெடித்து சிதறியது. இதுகுறித்து ஸ்பேஸ்எகஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் தெரிக்கையில், இது வெற்றிகரமான சோதனை, தங்களுக்கு தேவையான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டு அடுத்தடுத்தப்படிக்கு தன்னையும் தன் நிறுவனத்தையும் உயர்த்தி வருகிறார். ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். அதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராப்டர் இன்ஜின் தொடரில் பணிபுரியுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதில் வாரத்தில் ஏழு நாட்கள் கடுமையாக உழைக்காவிட்டால் நிறுவனத்தை மூடிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என மஸ்க் குறிப்பிட்டார்.

விண்வெளிக்கு மூன்று முறை சுற்றுலா

விண்வெளிக்கு மூன்று முறை சுற்றுலா

நிறுவனம் விண்வெளிக்கு மூன்று முறை சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறது. தொடர்ந்து எலான் மஸ்க் கனவுத் திட்டமாவது மனிதர்களையும் செவ்வாய் கிரகத்துக்கும் நிலவுக்கும் அழைத்து செல்வதே ஆகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராபர்ட் என்ற இன்ஜினை இதற்கு மும்முரமாக கவனமாக தயாரித்து வருகிறது. இந்த திட்டத்தில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ராபர்ட் இன்ஜின் ஆனது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை ஒரே நாளில் அனுப்ப பயன்படுத்தப்படுவையாகும்.

ராபர்ட் இன்ஜின் தயாரிப்பு பணி

ராபர்ட் இன்ஜின் தயாரிப்பு பணி

ராபர்ட் இன்ஜின் தயாரிப்பு பணியில் ஏற்பட்ட தொய்வையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் ஊழியர்களுக்கு ஒரு இமெயில் அனுப்பினார். நிறுவனம் தயாரிக்கும் ராபர்ட் இன்ஜின் பணி மும்முரமாக நடந்து வந்தன. ஆனால் இதில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் சிலர் இதில் இருந்து வெளியேறிவிட்டனர். இதையடுத்து ராபர்ட் இன்ஜின் தயாரிப்பு பணியில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தயாரிப்பு பணி கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது.

நேரம் காலம் பார்க்காமல் கடுமையான உழைப்பு

நேரம் காலம் பார்க்காமல் கடுமையான உழைப்பு

இந்த தொய்வு குறித்த விவகாரத்தில் ஒளிவுமறைவு என்று எதுவும் இல்லை. இதையடுத்து நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்து இன்ஜினை தயாரித்தால் மட்டுமே இந்த பணியை முடிக்க முடியும். இது நிறைவேறாத பட்சத்தில் நிறுவனம் திவால் நிலைக்கு சென்றுவிடும். இந்த கடுமையான சூழலை நிறுவனத்தினர் இணைந்து பணியாற்ற வேண்டும். இது நடக்காதபட்சத்தில் நட்சத்திர இணைப்பு செயற்கைக்கோள்களை வி2, வி-1ஐ விண்வெளிக்கு அனுப்ப முடியாது நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

SpaceX Raptor இன்ஜின் தொடர்

SpaceX Raptor இன்ஜின் தொடர்

SpaceX Raptor இன்ஜின் தொடரில் பணிபுரியுமாறு தங்களது ஊழியர்களை பணிபுரிந்து வருகிறார். இது ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப்பை இயக்க பயன்படுகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்ல ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப்பை பயன்படுத்தும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாசா எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனத்துக்கு 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்திரனின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு ஸ்டார்ஷிப் சந்திர லேண்டரை உருவாக்க 2.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21,745 கோடி) ஒப்பந்தம் வழங்கியது.

ஸ்டார்ஷிப்பை உருவாக்கி சோதனை

ஸ்டார்ஷிப்பை உருவாக்கி சோதனை

நிறுவனம் ஸ்டார்ஷிப்பை உருவாக்கி சோதனை செய்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஸ்டார்ஷிப்பின் முதல் சுற்றுப்பாதை வெளியீட்டை நடத்துவதை நோக்கமாகக் கொண்டு ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது. மஸ்க் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில், அடுத்த ஆண்டில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது ஸ்டார்ஷிப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் ராப்டர் இன்ஜின் தற்போதுவைர வளர்ச்சி பாதையில் இல்லை என மஸ்க் மேற்கோள்காட்டி இருக்கிறார். முக்கியமான மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு ஊழியர்கள் ராப்டரை சுற்றியுள்ள சிக்கல்கள் ஆழமாக சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர். முந்தைய நிலைமையை விட தற்போதைய நிலை மிகவும் கடினமானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இரண்டு துணைத் தலைவர்கள் சமீபத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறினர் அவர்களில் ஒருவர் ராப்டர் தயாரிப்பில் பிரதானமாக இருந்தார்.

ஊழியர்களும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தல்

ஊழியர்களும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தல்

நீண்ட காலத்திற்கு பிறகு எனது முதல் வார விடுமுறையை எடுக்கப் போகிறேன். இந்த வார இறுதியில் நான் விடுமுறை எடுக்கப் போகிறேன். ஆனால் அதற்கு பதிலாக நான் இரவு முழுவதும் பணிபுரிந்து ராப்டர் வரிசையில் இருப்பேன் என மஸ்க் கூறினார். இதையே ஊழியர்களும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மெயில் அனுப்பினார்.

விடாமுயற்சியே எலான் மஸ்க்

விடாமுயற்சியே எலான் மஸ்க்

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் பெரும்பாலும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான். எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இந்த திட்டத்திலும் அவர் முன்னோக்கி செல்வார் என்றே அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Spacex CEO Elon Musk Recently Sent Crisis Email to Employees about Raptor Engine

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X