SpaceX ஃபால்கன் 9 ராக்கெட்டின் நோஸ்கோன்களை மூன்றாவது முறையாக கேட்ச் பிடித்த கப்பல்கள்!
எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஃபால்கன் 9 ராக்கெட்டின் நோஸ்கோன்களை வெற்றிகரமாக மீண்டும் பிடித்துள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது முறையாக கேட்ச் செய்யப்பட்டு ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. இது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு புதிய சாதனையைக் குறித்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் புதிய சாதனை
இந்த ரீயூசபில் ராக்கெட் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய சாதனையைத் தனது பட்டியலில் சேர்த்துள்ளது. மறுபயன்பாட்டிற்காக ராக்கெட்டின் மூக்கை மீட்டெடுப்பது தான் இப்பொழுது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குப் பிடித்த வேலையாக மாறியுள்ளது. இதனால் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் செயற்கைக்கோள்களை விண்வெளியில் வைப்பதற்கும் செலவுகளைப் பல மடங்கு குறைந்துள்ளது என்று எலோன் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

கடலில் இதற்காக இரண்டு ட்ரோன் கப்பல்கள்
விண்ணிற்கு அனுப்பப்பட்ட ராக்கெட்டில் இருந்து பூமியில் மீண்டும் விழும் பாகங்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்பேஸ்எக்ஸ் கப்பல் மூலம் நடுக்கடலில் கேட்ச் பிடித்துள்ளது. கடலில் இதற்காக இரண்டு ட்ரோன் கப்பல்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. விண்ணிலிருந்து தரையிறங்கிய முதல் கட்ட பூஸ்டரை நடுக்கடலில் அழகாக கேட்ச் பிடித்துள்ளது.
நோஸ்கோன்களின் சூப்பர் கேட்ச்
ஏவுதலின் போது ராக்கெட் சரக்குகளைப் பாதுகாக்கும் முக்கிய பாகமாக அதன் நோஸ்கோன் பகுதி இருக்கிறது. இந்த நோஸ்கோன் பகுதி திறந்து பிரிந்து மீண்டும் பூமியில் விழுகிறது. ஸ்பேஸ்எக்ஸின் மிஸ்.ட்ரீ மற்றும் மிஸ். சீஃப் (Ms. Tree and Ms. Chief) என்ற இரண்டு கப்பல்கள், வானத்திலிருந்து விழுந்த இரண்டு ராக்கெட் துண்டுகளையும் அவற்றின் அகல வலைகளில் பத்திரமாகப் பிடித்துள்ளது.

SpaceX நிறுவனர் ஏலோன் மஸ்க்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்த ராக்கெட் பாகங்களின் கேட்ச்சிங் வீடியோக்களை ஸ்பேஸ்எக்ஸ் டிவிட்டர் பக்கத்தில் முன்பே ட்வீட் செய்துள்ளது. நோஸ்கோனின் ஒவ்வொரு அரை பாகங்களும் இரண்டு கப்பல்களில் பத்திரமாக பாராசூட்டுடன் பிடிக்கப்பட்டதைத் தெளிவாகக் காட்டுகிறது. SpaceX நிறுவனர் ஏலோன் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் மூன்றாவது முறையாக ராக்கெட் பாகங்கள் கேட்ச் செய்யப்பட்டதை உற்சாகத்துடன் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications