ரஷ்யா நடத்திய விபரீத பரிசோதனை, சீனாவுடன் போட்டி..?!

Posted By:

சூப்பர்பவர் நாடுகள் தங்களின் பலத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதிலும், போட்டி நாடுகளுக்கு சவால் விட தவறாத நோக்கத்திலும் தான் குறியாக செயல்படுகிறது என்பதற்கு ரஷ்யா தற்போது நடத்தியுள்ள விபரீதமான பரிசோதனை மட்டுமொர சாட்சியாகும்.

ஏவுகணை தொழில்நுட்பத்தில், அமெரிக்கவையே அஞ்ச வைக்கும் அளவு அதீத வளர்ச்சி அடைந்திருக்கும் ரஷ்யாவின் சமீபத்திய பரிசோதனை உலக நாடுகளை உஷார் நிலையில் இருக்க வைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முதல் முறை :

முதல் முறை :

ரஷ்யா முதல் முறையாக, செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஆன்ட்டி சாட்டிலைட் மிசைல் (anti-satellite missile) பரிசோதனையை நிகழ்த்தியுள்ளது.

நுடோல் :

நுடோல் :

செயற்கைகோள்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த பரிசோதனைக்கு 'நுடோல்' (Nudol) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் :

தகவல் :

கடந்த நவம்பர் மாதம் இந்த பரிசோதனையை ரஷ்யா நிகழ்த்தியுள்ளதாக தி வாஷிங்டன் ஃப்ரீ பேகன் (The Washington Free Beacon) தகவல் அளித்துள்ளது.

சீனா :

சீனா :

விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி பந்தயத்தில் சீனா சிறப்பாக செயல்படுவதை மனதில் கொண்டு, ரஷ்யா இந்த ஏவுகணை பரிசோதனையை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்து :

கருத்து :

நுடோல் பரிசோதனை குறித்து ரஷ்யாவின் ஆன்லைன் அணு படைகள் திட்ட (Online Russian Nuclear Forces Project) தலைவர் பாவெல் போட்விக் (Pavel Podvig) வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார்.

நோக்கம் :

நோக்கம் :

அவர் "மாஸ்கோ ஏவுகணை பாதுகாப்பு (Moscow missile defense) திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதே - நுடோல்" என்று கூறியுள்ளார்.

டாங் நெங்- 3 :

டாங் நெங்- 3 :

சமீபத்தில் சீனா டாங் நெங்- 3 (Dong Neng-3) என்ற ஆன்ட்டி சாட்டிலைட் ஏவுகணை பரிசோதனையை நிகழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

செயற்கைகோள்களுக்கு எதிரான சீனாவின் ஏவுகணையானது நேரடியாக மேலேறி தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றிருந்தாலும், அதில் சில ஏவுகணை பாதுகாப்பு திறன்கள் இல்லை என்று ஏவுகணை வல்லுநர்கள் கருத்து கூறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி :

போட்டி :

இந்த விண்வெளி போர் தொழில்நுட்ப (Space warfare technology) போட்டியில் அமெரிக்கா சீனா முன்னிலை வகிக்கின்றன.

ஹைபர்சோனிக் :

ஹைபர்சோனிக் :

மேலும் சமீபத்தில் சீனா, செயலிழக்க செய்யும் தொழில்நுட்பமான 'ஹைபர்சோனிக் மேனுவரிங் ஸ்ட்ரைக் வெயிக்கல்' (hypersonic maneuvering strike vehicle) பரிசோதனையை ஆறாவது முறையாக நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Space warfare technology Heats Up As Russia Tests AntiSatellite Missile. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot