மத்திய அரசின் சீர்திருத்தங்கள்: கண்டிப்பாக மாற்றம் ஏற்படும்: இஸ்ரோ கே.சிவன்.!

|

மத்திய அரசு கூறியுள்ள விண்வெளி துறை சீர்திருத்தங்கள் ஆனது இந்தியாவின் விண்வெளி துறையில் ஒரு சிறந்த மாற்றம் கொண்டுவரும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ தலைவர் கே.சிவன் அவர்கள் கூறியுள்ளார்.

தலைவர் கே.சிவன்

வியாழக்கிழமை அன்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் அவர்கள் விண்வெளித்துறையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்கள் சிறந்த மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறியதோடு இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என்று உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் வெபினார் ஒன்றில் உரையாற்றிய சிவன் அவர்கள் விண்வெளித்துறையை தனியார் மயமாக்கும் நோக்கில், சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

துறையில் மேற்கொள்ள

குறிப்பாக விண்வெளித் துறையில் மேற்கொள்ள இருக்கும் சீர்திருத்தங்கள் குறித்த அரசு அறிவிப்பு வெளியான போது, இது இஸ்ரோவை தனியார்மயமாக்க வழிவகுக்கும் என்பது போன்ற பல தவறான கருத்துகள் கூறப்பட்டன. ஆனாலும் இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என்று நான் மீண்டும் உறுதிபடுத்துகிறேன் என்று சிவன் அவர்கள் கூறியுள்ளார்.

கொசு மாஸ்க் போடாது! கொரோனாவை விட மோசமானது 'இது' தான் என்று எச்சரிக்கும் பில்கேட்ஸ்!கொசு மாஸ்க் போடாது! கொரோனாவை விட மோசமானது 'இது' தான் என்று எச்சரிக்கும் பில்கேட்ஸ்!

முன்மொழியப்பட்ட விண்வெளி

பின்பு அன்மையில் முன்மொழியப்பட்ட விண்வெளி நடவடிக்கை வரைவு மசோதா கிட்டத்தட்ட இறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், அது விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் சிவனம் அவர்கள் கூறியுள்ளார்.

 இந்தியாவின் திறனை

விண்வெளி துறையில் இந்தியாவின் திறனை ஊக்குவித்தல் என்ற தலைப்பின் மூலம் நடைபெற்ற வெபினாரில் உரையாற்றிய அவர், இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் தனியார் துறையினருக்கும் விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள் ஊக்குவிப்பதாகும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவரும் விண்வெளித் துறை

மத்திய அரசு கொண்டுவரும் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் இந்தியாவின் விண்வெளித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் சிவன் கூறியுள்ளார். இஸ்ரோ அமைப்பு ஆனது முன்பை விட மேலும் தீவிரமாக பணியாற்ற உள்ளது. உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் கூடவே, அரசின் வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் இஸ்ரோ தனது தனித் திறமைகளை சிறப்பாகவே பயன்படுத்த இது வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

கூகுள் பிக்சல் 5 செப்டம்பர் 30 வெளியாக வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!கூகுள் பிக்சல் 5 செப்டம்பர் 30 வெளியாக வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

 கிரகங்கள் தொடர்பான ஆய்வு பணிகள்

மேலும் கிரகங்கள் தொடர்பான ஆய்வு பணிகள் உட்பட விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் துறையின் பங்களிப்பிற்குமத்திய அரசு ஜூன் 24 அன்று ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Space sector reforms not aimed at privatising ISRO: Chairman K Sivan: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X