40 கிலோ எடை., ஒரே நாளில் பணக்காரர் ஆனா விவசாயி! விண்கல் செய்த மாயம்!

|

விண்வெளியிலிருந்து பூமிக்குள் விழும் விண்கற்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. சில நாடுகளில் விண்கற்களின் வகைக்கு ஏற்றார் போல பணம் வழங்கப்படுகிறது. அப்படி வடகிழக்கு பிரேசிலின் தொலைதூர நகரமான சாண்டா ஃபிலோமினாவில் வசிக்கும் விவசாயிக்கு கிடைத்த அரிய வகை விண்கற்களிற்கு சுமார் 26,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் பணக்காரர் ஆகிவிட்டார்.

விண்கல்லிற்கு இவ்வளவு பெரிய தொகையா?

விண்கல்லிற்கு இவ்வளவு பெரிய தொகையா?

விண்கல்லிற்கு இவ்வளவு பெரிய தொகையா என்று அனைவரும் திகைப்பில் உள்ளனர். இதுவரை பல காலகட்டத்தில், நூற்றுக்கணக்கான விண்கற்கள் வானத்திலிருந்து பூமியில் மழை போல பொழிந்துள்ளது. சில நாடுகளில் விண்கற்களை தேடி எடுத்து விற்பனை செய்யும் வேலையை முழுநேர வேலையாகவே சிலர் செய்து வருகின்றனர். தற்பொழுது அதிக விலை கொண்ட விண்கல் பொருளாகக் குறிப்பிட்ட ஒரு விண்கல் மட்டும் கருதப்படுகிறது.

அதிக விலைக்கு காரணம் இது தான்

அதிக விலைக்கு காரணம் இது தான்

இதற்குக் காரணம் அந்த விண்கற்கள் மிகவும் அரியது என்பதால் தான், சமீபத்திய அறிக்கையின்படி, இந்த விண்வெளி பாறையின் துண்டுகள் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் ஒரு பகுதி மட்டும் தற்பொழுது விவசாயி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சூரிய மண்டலத்தின் தொடக்கத்திற்கு முந்தியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வாடகை வீட்டுக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை: நீங்களும் இப்படி ஏமாறாதீர்கள்!வாடகை வீட்டுக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை: நீங்களும் இப்படி ஏமாறாதீர்கள்!

எத்தனை கிலோ விண்கற்கள் தெரியுமா?

எத்தனை கிலோ விண்கற்கள் தெரியுமா?

இதுவரை அறியப்பட்ட மற்றும் ஆய்வு செய்யப்பட்ட விண்கற்களில் ஒரு சதவீதம் மட்டுமே இந்த அரிய வகை விண்கற்களுடன் ஒற்றிப்போகிறது. இந்த அரிய வகை விண்வெளி பாறைகளில் ஒரு பங்கை கண்டுபிடித்தால் கூட சாண்டா பிலோமினாவில் உள்ள உள்ளூர் மக்கள் பணக்காரர்களாகிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 40 கிலோவுக்கு மேல் எடையுள்ள இந்த பாறையின் கற்கள் கிடைத்துள்ளது. இதற்கு 26,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள்

விவசாயிகள்

இந்திய மதிப்பின்படி இந்த விண்கற்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகையானது 19,00,000 லட்சத்தைத் தாண்டுகிறது. இதற்கு முன்பு ஒரு கிராம் எடை கொண்ட விண்கற்களுக்கு சுமார் 40 ரியால்ஸ் வழங்கப்பட்டு வந்தது, தற்பொழுது இந்த தொகை அதிகமாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்புதான் இந்த தொகை பாதியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்தில் வாழும் நகர மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம் விவசாயிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!

இது ஒரு நல்ல விஷயம்

இது ஒரு நல்ல விஷயம்

இந்த பகுதி ஒரு தாழ்மையான இடம், இங்கு அதிகப்படியான விண்கல் பொழிவைக் கண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு நல்ல விஷயம் என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். இங்குள்ள மக்களில் நிறையப் பேர் தங்களின் வாழ்வில் ஒரு பாறைக்கும் மேலாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று சாவ் பாலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரின் கூறுகிறார்.

விண்கல் சேகரிப்பாளர்கள்

விண்கல் சேகரிப்பாளர்கள்

இவரின் கூற்றுப்படி, விண்கல் காண்டிரைட் வகையைச் சேர்ந்தது மற்றும் பூமிக்கு முன் சூரிய மண்டலத்தில் உருவான முதல் தாதுகளில் ஒன்றாகும். இது விண்கல் சேகரிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!

விற்பனைக்கு வெளிநாட்டு செல்லும் மக்கள்

விற்பனைக்கு வெளிநாட்டு செல்லும் மக்கள்

தேவை அதிகமாக உள்ள காரணத்தினால் தற்பொழுது இதன் விலையும் அதிகமாக உள்ளது. சிலர் விண்கற்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய வெளிநாட்டு மில்லியனர்களை தேடிச் செல்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Space rocks: Hundreds of meteorite rocks worth up to $26,000 rain down on Brazilian town : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X