விண்வெளி ஆய்வு பயிற்ச்சிக்கு தேர்வான பெண்: துணை முதல்வரிடம் கோரிக்கை.! என்ன தெரியுமா?
விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த உதயகீர்த்திகா, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். குறிப்பாக உதயகீர்த்திகா விண்வெளி ஆய்வில் ஆர்வம் உடையவர் ஆவார்.

மேலும் உதயகீரத்திகா ஜெர்மனி, போலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள விண்வெளி ஆய்வு பயிற்சிக்கு சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பாக தேர்வாகியுள்ளார், எனவே இந்த பயிற்சிக்கு பத்து லட்சம் ரூபாய் வரை
தேவைப்படுகிறது.
ஆனால் உதயகீர்த்திகாவிடம் அவ்வளவு பணம் இல்லாததால் தமிழக அரசிடம் உதவி கேட்க, உதயகீர்த்திகாவின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்,அதன்படி நேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை குடும்பத்துடன் சந்தித்த உதயகீர்த்திகா தமிழக அரசு உதவவேண்டும் என மனு அளித்துள்ளார். பின்பு உடனே இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியா: ரூ.6,999-விலையில் மிரட்டலான நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். ஸ்டீல் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை
மேலும் 2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதன்படி 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன. மேலும் பேஸ் அன்லாக், எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு ஆதரவுகள் உள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

விலை:
2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் 11-ம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் சில ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications