Home
News

இது என்ன விசித்திரம்: விண்மீன் இருக்க வேண்டிய இடத்தில் ஜெல்லி மீன்., "ஸ்பேஸ் ஜெல்லிஃபிஷ்"- வானத்தில் விநோதம்!

அதிகாலை நேரத்தில் ராக்கெட் புறப்படும் போது விண்வெளி ஜெல்லிமீன் விளைவு ஏற்படத் தொடங்கியது. பல சமூகவலைதள பயனர்கள் "விண்வெளி ஜெல்லிமீன்" நிகழ்வின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்திருக்கிறார்.

"விண்வெளி ஜெல்லிமீன்கள்"

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் "விண்வெளி ஜெல்லிமீன்களை" உருவாக்கிய நிகழ்வு பலரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருந்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு 53 புதிய ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோளை விண்வெளிக்கு கொண்டு சென்றது. ராக்கெட் ஏவுதலில் ராக்கெட் விண்ணுக்கு சென்ற போது ஏற்படுத்திய விளைவு பலரால் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. ப்ளோரிடாவின் கேப் கனாவெரில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து காலை 5:42 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அப்போது பலரும் விண்வெளி ஜெல்லிமீன் என்று குறிப்பிடப்படும் விநோத நிகழ்வு ஏற்பட்டது.

விண்வெளி சுற்றுலா பயணம்

விண்வெளி சுற்றுலா பயணம்

அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் "ஸ்பேஸ் எக்ஸ்" நிறுவனம் விண்வெளி சுற்றுலா பயணம் வெகு சிறப்பாக நடத்தி வருகிறது. அதேபோல் இந்த நிறுவனம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயனர்களை ஏற்றிச் செல்வதும், திரும்ப அழைத்து வருவதுமான பணிகளை சிறப்புடன் செய்து வருகிறது. அதன்படி ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு அழைத்து வந்தது. விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு 24 மணி நேரத்தில் பூமிக்கு திரும்பினர்.

விண்ணில் செலுத்தப்பட்ட 53 இணைய செயற்கைக்கோள்கள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ப்ளோரிடா கடற்கரையில் ஸ்டார்லிங்க்ஸ் செயல்பாட்டுக்கான 53 இணைய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. அதேபோல் இந்த ஏவுதலுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு எலான்மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நான்கு விண்வெளி வீரர்களை வீட்டுக்கு அழைத்து வந்தது. ஸ்பேஸ் எக்ஸின் இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் "ஸ்பேஸ் ஜெல்லிஃபிஷ்" எனப்படும் ஒரு காட்சி நிகழ்வு ப்ளோரிடா வாசிகளை உற்சாகப்படுத்தியது.

ராக்கெட் புறப்படும் போது விண்வெளி ஜெல்லிமீன் விளைவு

விடியற்காலை நேரத்தில் ராக்கெட் புறப்படும் போது விண்வெளி ஜெல்லிமீன் விளைவு ஏற்பட்டது. ராக்கெட் வெளியேற்றமானது அதிக உயரத்தை அடைந்த உடன் ஒரு புகை மண்டலத்தை உருவாக்கியது. இந்த புகைக்குள் சூரியனின் கதிர்கள் பாதையை பிரகாசிக்கச் செய்கிறது. இதன் விளைவாக ஜெல்லிமீன் வடிவத்தில் காட்சியளித்தது.

ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதலைக் காண அதிகாலையில் எழுந்த பலர்

ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதன் மூலம் "விண்வெளி ஜெல்லிமீனை" உருவாக்கியது. ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதலைக் காண அதிகாலையில் எழுந்த பலரும் இதை கண்டு ரசித்தனர். சமூகவலைதள பயனர்கள் பலரும் இந்த காட்சியை பதிவு செய்து தங்கள் இணையதள கணக்கில் பகிர்ந்துள்ளனர். இந்த நிகழ்வை ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் மிஷன் நிர்வாகத்தின் இயக்குனர் ஜெசிகா ஜென்சன் என்பவர் விளக்கி கூறினார். அதில், அடிப்படையில் என்ன நடக்கிறது, வெளிப்புறத்தில் இருட்டாக இருக்கும் நேரத்தில் ராக்கெட் ஒளி ஒளிர்கிறது அதனுடன் சூரிய ஒளி கதிர்களும் இணைந்த இந்த காட்சியை ஏற்படுத்துகிறது என விளக்கினார்.

மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் நாசாவின் திட்டம்

தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்தாண்டு சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர். சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்

முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. முன்னதாக ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு இருக்கைக்கு சுமார் ரூ.600 கோடி கட்டணம் வசூலித்தது. இந்த செலவை குறைக்கும் பொருட்டு நாசா தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது. இருப்பினும் எலான் மஸ்க்கின் கனவுத்திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இதற்கான பணியில் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Space jellyfish appeared in the Florida sky: SpaceX effect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X