சுழலும் டயல் அமைப்பு கொண்ட செல்போன்! விண்வெளி பொறியாளர் கண்டுபிடிப்பு..

|

21 ஆம் நூற்றாண்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு ஸ்மார்ட்போன். எலன் மஸ்க் சொல்வது போல், ஒரு பொத்தானை அழுத்தினால் நமக்கு அதீத அறிவுத்திறனை (சூப்பர் இன்டெலிஜென்ஸ்) வழங்கவல்லன இந்த ஸ்மார்ட்போன்கள். இவை நம்மை உலகத்துடன் இணைப்பதுடன், எந்த நிமிடத்திலும் நாம் எங்கிருக்கிறோம் என்பதை அறிய உதவுகின்றன.

 நன்மைக்காக மட்டுமே இல்லை.

இவை எல்லாம் நன்மைக்காக மட்டுமே இல்லை. நாம் நம்பமுடியாத அளவிற்கு நமது சாதனங்களைச் சார்ந்து இருக்கிறோம், ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவது ஒருபுறம் என்றாலும், பல உரையாடல்கள் ஒருபோதும் நடைபெறுவதே இல்லை. ஏனென்றால் மக்கள் தங்கள் சாதனங்களில் புதையுண்டு மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டுள்ளனர்.

"சுழலும் செல்போன்"

ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் மோசமான அம்சங்களுக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க பலரும் முயற்சித்துள்ளனர். அவர்களின் ஒருவரான ஜஸ்டின் ஹாப்ட், "சுழலும் செல்போன்" என அழைக்கப்படும் சாதனத்தை உருவாக்கியுள்ளார்.

Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்Google Map-ஐ மிஞ்சிய டால்பின்: புயலில் சிக்கிய படகு.,ஏலே டோன்ட் வொரி பீ ஹேப்பி-கரை சேர்த்த டால்பின்

நியாபகம் வந்திருக்கும்

நியாபகம் வந்திருக்கும்

எண்கள் சுழலும் தொலைபேசிகளை நினைவில் வைத்திருக்கும் வயதான எவருக்கும், ஒரு எண்ணை டயல் செய்ய வடிவமைக்கப்பட்ட மோசமான அமைப்பும், சிக்கலான செயல்பாடும் நிச்சயம் நியாபகம் வந்திருக்கும்.

அறிவாற்றல் நிறைந்த செயல்பாடாகவே இருந்தது

அறிவாற்றல் நிறைந்த செயல்பாடாகவே இருந்தது

தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள விரும்பும் பயனர் அவர்கள் டயல் செய்ய விரும்பும் எண்ணின் துளைக்குள் ஒரு விரலை வைத்து, அந்த எண் உலோக கிளிப்-ஐ அடையும் வரை அந்த பிளாஸ்டிக் ரோட்டரி டயலை (கீழே உள்ள படம்) சுற்றி விடவேண்டும். பின்னர் அந்த பிளாஸ்டிக் டயல் உலோக கிளிப்பை அடைந்து மீண்டும் இயல்பு நிலையில் இடத்திற்குச் சென்று டயல் செய்த எண்ணைப் பதிவுசெய்ய அனுமதிக்கிறது. இதே செயலை தொலைபேசி எண்ணின் ஒவ்வொரு இலக்கத்திற்கும் பயனர்கள் செய்ய வேண்டும். இன்றைய ஸ்மார்ட்போன்களை விட இது நிச்சயமாக அதிக அறிவாற்றல் நிறைந்த செயல்பாடாகவே இருந்தது.

சுலபமான டயல் சாத்தியமில்லை

சுலபமான டயல் சாத்தியமில்லை

ஆனால் தற்போது நமக்கு அது தேவைப்படலாம். நாம் ஒவ்வொரு முறையும் யாருடைய எண்ணை டயல் செய்கிறோம் என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கும். மேலும் மிக முக்கியமாக, ரோட்டரி டயலிங் முறையில் அச்சப்படக்கூடிய சுலபமான டயல் சாத்தியமில்லை.

 மாற்றி உருவாக்க முடியும்

ஹாப்ட்டின் வடிவமைப்பைப் பற்றிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், அது முற்றிலும் ஓபன் ஸ்சோர்ஸ் ஆகும். அதாவது அவர் தனது வடிவமைப்புகளை இலவசமாக பகிர்ந்து கொண்டுள்ளதால், செயல்திறனுள்ள எவரும் அவர்களது விருப்பத்திற்கேற்ப அதை மாற்றி உருவாக்க முடியும்.

 எரிச்சலூட்டும் தொடுதிரை

எரிச்சலூட்டும் தொடுதிரை

ஜஸ்டின் ஹாப்ட் தனது இணையதளத்தில் இதுகுறித்து விவரிக்கையில், தனது வடிவமைப்பைப் பற்றி நிறைய விவரங்களுக்குச் செல்கிறார். "மிகைப்படுத்தப்பட்ட, எரிச்சலூட்டும், தொடுதிரை உலகில், அதனுடன் எந்த கட்டுப்பாடும் அல்லது புரிதலும் இல்லாத தொலைபேசிகளைப் பயன்படுத்தி இணைக்கப்பட்ட நபர்களின் மத்தியில், நான் முற்றிலும் என்னுடைய தனிப்பட்ட மற்றும் முற்றிலும் தொட்டுணரக்கூடிய, அதே நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்புவதை தவிர்ப்பதற்குமான ஒன்றை விரும்பினேன்." என்கிறார்.

முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டது

முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டது

ஹாப்ட் விவரிக்கையில், பழைய வெஸ்டர்ன் எலக்ட்ரிக் டிரிம்லைன் தொலைபேசியிலிருந்து ஒரு டயலைத் தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார் . ஏனெனில் இந்த ரோட்டரி டயல்கள் இருக்கும் வரை இது மிகவும் கச்சிதமானது. அவர் அதை ஒரு நவீன செல்லுலார் சிப்செட் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட போர்டில் இணைத்தார். இருப்பினும் அதன் உறை சிறப்பாக வடிவமைக்கப்பட்டு முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டது.

24 மணி நேரம் நீடிக்கும்

24 மணி நேரம் நீடிக்கும்

10 எல்இடி சிக்னல் மீட்டர், குறிப்பிட்ட எண்களை அழைப்பதற்கான நிரல்படுத்தக்கூடிய குறுக்குவழி பொத்தான்கள், பவர் சுவிட்ச் மற்றும் தவறவிட்ட அழைப்புகள் போன்ற அடிப்படை தகவல்களைக் காண்பிக்கும் வளைந்த ஈபேப்பர் திரை போன்ற சில நவீன அம்சங்களையும் இந்த தொலைபேசி கொண்டுள்ளது .


"எனது முதன்மை தொலைபேசியாக அதைப் பயன்படுத்துவதே எனது நோக்கம். இது ஒரு பாக்கெட்டில் கச்சிதமாக பொருந்துகிறது. நான் அடிக்கடி அழைக்கும் நபர்களை அழைப்பது எனது பழைய தொலைபேசியை விட இதில் வேகமானது. மேலும் பேட்டரி கிட்டத்தட்ட 24 மணி நேரம் நீடிக்கும்"என்று ஹாப்ட் விளக்குகிறார்.

Best Mobiles in India

English summary
Space Engineer Built Her Own Cell Phone with a Rotary Dial System : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X