5ஜி தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடு செய்யும் விண்வெளி நிறுவனங்கள்!

|

உலகம் முழுவதும் உள்ள விண்வெளி நிறுவனங்கள் உங்கள் நவீன சாதனங்களுக்கு முன் எப்போதும் இல்லாத வேகத்தில் அதிகமான இணையவசதியை கொண்டு வர விரும்புகின்றன.

ஸ்பேஸ்எக்ஸ் முதல் அமேசான் வரை

ஸ்பேஸ்எக்ஸ் முதல் அமேசான் வரை

ஸ்பேஸ்எக்ஸ் முதல் அமேசான் வரை கூடுதல் அலைவரிசையை சமாளிக்கக்கூடிய ஏராளமான புதிய செயற்கைக்கோள்களை ஏவி வருகின்றன (அல்லது விரைவில் ஏவ உள்ளன ). உலகெங்கிலும் உள்ள செல்லுலார் நெட்வொர்க் வழங்குநர்கள் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் தேவையை பூர்த்தி செய்ய தங்கள் சாதனங்களை பூமியில் மேம்படுத்திவருகின்றன.

 5 ஜி நெட்வொர்க்

5 ஜி நெட்வொர்க்

இந்த புதிய தொழில்நுட்பமானது புதிய 5 ஜி நெட்வொர்க்குகளுக்காக கட்டமைக்கப்படுகிறது. இது தற்போதைய 4 ஜி தொழில்நுட்பத்தை காட்டிலும் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இது நெட்ஃபிக்ஸ் போன்ற அதிக தரவுகள் தேவைப்படும் விஷயங்களை பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது.


5 ஜி இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள் பயனர்கள் குறைந்த தாமதத்தை அனுபவிப்பார்கள் என்கின்றனர். ஒரு நெட்வொர்க்கில் ஒரு ரிசீவருக்கு (செல்போன் போன்றது) ஒரு பாக்கெட் தரவை அனுப்ப எடுக்கும் நேரத்தை இது குறிக்கிறது. 4 ஜி நெட்வொர்க்குகள் சுமார் 50 மில்லி விநாடிகள் தாமதத்தை கொண்டுள்ள நிலையில், 5 ஜி நெட்வொர்க்குகள் அதைக்காட்டிலும் 10 மடங்கு சிறப்பாக 5 மில்லி விநாடிகளுக்கும் குறைவான தாமதத்தை மட்டுமே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண வாகனங்களை ஸ்மார்ட் காராக மாற்றுவது எப்படி?சாதாரண வாகனங்களை ஸ்மார்ட் காராக மாற்றுவது எப்படி?

 காணொளி ஒளிபரப்பு

காணொளி ஒளிபரப்பு

வேகமான இணையதரவுகளை கொண்டிருக்கும் போது விரைவான பதிவிறக்கம், தாமதமில்லா காணொளி ஒளிபரப்பு அனுபவத்தை பயனர்கள் பெறுவதுடன், ஐஓடி தொழில்நுட்பத்தின் மூலம் வீடு முழுவதையும் ஸ்மார்ட் கருவிகளால் ஸ்மார்டாக மாற்றிவிடலாம். மேலும் 5ஜி தொழில்நுட்பம் மூலம் தொழில்துறையும் வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது வெளியாகிறது 5ஜி?

எப்போது வெளியாகிறது 5ஜி?

அமெரிக்காவில் ஏடி அண்ட் டி, ஸ்பிரிண்ட், டி-மொபைல் மற்றும் வெரிசோன் ஆகிய நான்கு பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே ஒரு சில மெட்ரோ பகுதிகளில் மொபைல் 5 ஜி யை அறிமுகப்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, கடந்த ஜூலை வரை ஸ்பிரிண்ட் மொபைல் 5 ஜி யை அட்லாண்டா, சிகாகோ, டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த், ஹூஸ்டன் மற்றும் கன்சாஸ் சிட்டி, மிசோரி நகரங்களில் அறிமுகப்படுத்திய நிலையில் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் மற்ற எல்லா பகுதிகளிலும் 5ஜி நிறுவல் பணி தொடரவுள்ளது.

இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் உங்கள் பழைய சாதனத்துடன் 5ஜி இணையத்தை அணுக முடியாது. உள்கட்டமைப்பு உபகரணங்கள் மேம்படுத்தப்பட்டதும் இதற்காக நுகர்வோர்கள் புதிய செல்போன்களை வாங்க வேண்டும்.

5ஜி தொழில்நுட்பத்தில் பணியாற்றும் விண்வெளி நிறுவனங்கள் எவை?

5ஜி தொழில்நுட்பத்தில் பணியாற்றும் விண்வெளி நிறுவனங்கள் எவை?

பல விண்வெளி நிறுவனங்கள் 5G இல் டிரெண்ட் செட்டர்களாக இருக்க விரைந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக ஸ்பேஸ்எக்ஸ் கிட்டத்தட்ட 12,000 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை அனுப்ப ஒப்புதல் பெற்றுள்ளது (மேலும் சமீபத்தில் 30,000 க்கு விண்ணப்பித்துள்ளது). மே மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸ் தனது முதல் 60 ஸ்டார்லிங்க் விண்கலங்களல அறிமுகப்படுத்தியது. இது குறைந்த பூமி-சுற்றுப்பாதையில் சுமார் 342 மைல்கள் (550 கிலோமீட்டர்) உயரத்தில் இயங்கவுள்ளன. (ஒப்பீட்டளவில் சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே 250 மைல் அல்லது 400 கிமீ உயரத்தில் சுற்றுகிறது.)

ஒன்வெப் நிறுவனமும் செயற்கைக்கோள்-இணைய திட்டங்களையும் கொண்டுள்ளது. உலகெங்கிலும் வலை அணுகலை எளிதாக்குவதற்காக கிட்டத்தட்ட 650 செயற்கைக்கோள்களைக் கொண்ட ஒரு விண்க் கூட்டத்தை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒன்வெப் ஆறு செயற்கைக்கோள்கள் கொண்ட முதல் குழுவை பிப்ரவரியில் ஐரோப்பிய ஏவுகணை நிறுவனமான அரியான்ஸ்பேஸ் வழங்கிய சோயுஸ் ராக்கெட்டில் ஏவியது. இந்த செயற்கைக்கோள்கள் பூமியை சுமார் 750 மைல் (1,200 கி.மீ) உயரத்தில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகியவையும் 5 ஜி செயற்கைக்கோள் நெட்வொர்க்கு திட்டமிடும் மற்ற நிறுவனங்களில் அடக்கம் .

5ஜி தொழில்நுட்பத்தின் ஆபத்துகள்?

5ஜி தொழில்நுட்பத்தின் ஆபத்துகள்?

புவி சுற்றுவட்டப்பாதையில் உள்ள 5ஜி செயற்கைகோள்களால் பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதில் மிகப்பெரிய ஆபத்து, அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோள்களால் ஒன்றுக்கொன்று மோதி விண்வெளி குப்பைகளையும் அதிகரிக்கும். கடந்த மாதம் ஒரு ஐரோப்பிய செயற்கைக்கோள் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் ஒன்றில் மோதும் நிலையில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டபோது, ​​இந்த அபாயத்தை உலகம் அறிந்து கொண்டது.

மேலும் 5ஜி தொழில்நுட்பத்திற்காக செலுத்தப்படும் செயற்கைகோள்களால் ரேடியோ அலைவரிசை இடையூறும் ஏற்படவாய்ப்புள்ளது. குறிப்பாக வானிலை செயற்கைக்கோள்களின் ஆபரேட்டர்கள், வானிலை முன்னறிவிப்புகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 23.8-ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண்ணை நெருங்கும் அங்கீகரிக்கப்பட்ட 5 ஜி அதிர்வெண்களைப் பற்றி கவலை கொண்டுள்ளனர்.இந்த அலைவரிசையில், "வளிமண்டலத்தில் நீராவி பலவீனமான சமிக்ஞையை அளிக்கிறது" மேலும் செயற்கைக்கோள்கள் வளிமண்டலத்தில் ஈரப்பதத்தையும், இப்பகுதி மேகமூட்டமாக இருப்பதையும் ஆராயலாம். இதுபோன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவ முயலும் விண்வெளி நிறுவனங்களுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Space Companies Are Investing Big in 5G Technology: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X