நோக்கியாவின் தரவரிசையையும் குறைத்த ஸ்டான்டர்டு அன்ட் புவர்!

Posted By: Staff
நோக்கியாவின் தரவரிசையையும் குறைத்த ஸ்டான்டர்டு அன்ட் புவர்!

நோக்கியா நிறுவனத்தின் தர வரிசையை  ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (எஸ் அண்ட் பி) நிறுவனம் குறைத்துள்ளது. மொபைல் தயாரிப்புகளில் பெரும் பங்களிப்பையும், முக்கிய இடத்தையும் வகித்து வருகிறது நோக்கியா நிறுவனம்.

சமீபமாக சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடன் நோக்கியா நிறுவனத்திற்கு விற்பனையில் கடும் போட்டி நிலவி வருகிறது. உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (எஸ் அண்ட் பி) நிறுவனம், மொபைல்கள் விற்பனையில் முன்னணி வகித்து வரும் நோக்கியாவின் தர வரிசையை அதிரடியாக குறைத்துள்ளது.

பிபி+ (BB+) என்ற தர வரிசையில் இருந்து நோக்கியா நிறுவனம் இப்போது பிபிபி- (BBB-) என்ற எதிர்மறையான தர வரிசை இடத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் எஸ் & பி நிறுவனம் இந்தியாவின் தர வரிசையையும் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று ஒரு நிறுவனத்தின் தரவரிசை குறைவதனால் நோக்கியாவின் எதிர்கால திட்டங்களில் பாதி்ப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. விற்பனையில் முதலிடத்தில் இருந்த நோக்கியா நிறுவனம், இப்போது பல காரணங்களால் அந்த இடத்தை இழந்துவிட்டது. இதனால் விற்பனையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ் அண்ட் பி நிறுவனத்தின் யூகப்படி, நோக்கியா நிறுவனத்தின் முன்னேற்றம் சற்று குறைவாகவே இன்னும் 12 மாதத்திற்கு இதே போல் நீடிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் அதே சமயம் நோக்கியா நிறுவனம் இந்நிலையை நீட்டிக்க விடாது, முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை வகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி முன்னேற்றத்தினை அடைந்துவிட்டால், நோக்கியா மறுபடியும் அதன் தர வரிசையில் உயர்வை பெறும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot