பாகம் 2 : அமெரிக்கா செய்த வரலாற்று துரோகம்..!

|

பல ஆண்டுகளுக்கு முன் நாம் வாழ்ந்த காலத்தை பற்றிய வரலாற்றை நாமே படித்து பார்த்தால் தான் புரியும் - வரலாறு என்பது பெரும்பாலும் பொய் கதைகள் என்று..!

பாகம் 1 : அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!

யாருக்கு தெரியப்போகிறது என்ற நம்பிக்கையிலும், யார் நம்மை கேள்வி கேட்பார்கள் என்ற குருட்டு திமிரிலும் தெளிவாக வடிவமைக்கப்பட்டதே வரலாறு. அப்படியாக, விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த வரலாற்றில் சோவியத் ஒன்றியத்தின் பெயருக்கு முன்னால் அமெரிக்கா நிலைநிறுத்தப்பட்ட விடயங்களை பற்றி 'அமெரிக்கா செய்த வராலாற்று துரோகம்' என்ற கட்டுரையில் விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியே இந்த இரண்டாம் பாகம்..!

சோவியத் சாதனைகள் :

சோவியத் சாதனைகள் :

அமெரிக்காவிற்கு சமமாக, சோவியத் ஒன்றியத்தால் நிகழ்த்தப்பட்ட 'முதல் முதலில்' என்ற பட்டியலில் அடங்கும் (வரலாற்றில் மறைக்கப்பட்ட) விண்வெளி ஆராய்ச்சி சாதனை மற்றும் சோதனைகள் தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன..!

முதலில் யார் :

முதலில் யார் :

அமெரிக்காவா இல்லை சோவியத் ஒன்றியமா..? செவ்வாய் கிரகத்தை முதலில் யார் சென்றடைவது என்ற போட்டியில் சோவியத் ஒன்றியத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது தான் - மார்ஸ் 2 மற்றும் மார்ஸ் 3 விண்கலங்கள்..!

வெற்றி :

வெற்றி :

அந்த போட்டியில் அமெரிக்காவின் மாரினர் 9 (Mariner 9) விண்கலம், சோவியத் ஒன்றியத்தின் இரண்டு விண்கலங்களையும் முந்தி, இரண்டு வாரத்திற்கு முன்பாகவே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்து வெற்றி கண்டது.

வெடிப்பு :

வெடிப்பு :

இதற்கிடையில், சோவியத் ஒன்றியத்தின் மார்ஸ் 2 வெடிப்புக்கு உள்ளாகிய பின், மார்ஸ் 3 வெற்றிகரமாய் செவ்வாயில் தரை இறங்கியது.

20 நொடி :

20 நொடி :

மேலும் மார்ஸ் 3 - தெளிவில்லாத, ஒளியில்லாத ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்துவிட்டு, வெறும் 20 நொடிகளுக்கு மட்டுமே தொடர்பில் இருந்தது, பின் செயலிழந்து போனது.

தவறவிட்டது :

தவறவிட்டது :

மார்ஸ் 3 விண்கலத்தின் செயலிழப்பால், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி எடுக்கப்பட்ட முதல் தெளிவான புகைப்படம் என்ற சாதனையை தவறவிட்டது சோவியத் ஒன்றியம் என்பது குறிப்பிடத்தக்கது.

புழுதி புயல் :

புழுதி புயல் :

அமெரிக்கா அனுப்பிய மாரினர் 9 விண்கலமும், மே 1971-ஆம் ஆண்டு வெடிப்புக்குள் உள்ளனது, அனைத்து விபத்துக்கும் செவ்வாய் கிரகத்தின் புழுதி புயலே காரணமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முயற்சி :

முயற்சி :

அமெரிக்காவை போல் நிலவில் மனிதர்களை தரையிறக்க முடியாவிட்டாலும், நிலவின் மண் மாதிரிகளை எடுக்க சோவியத் ஒன்றியம் பல முயற்சிகளை எடுத்தது.

தோல்வி :

தோல்வி :

அவைகளில், லுனா 15 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதை தொடர்ந்து எடுக்கப்பட்ட அடுத்த 5 முயற்சிகளும் பூமியிலேயே தோல்வி அடைந்தன.

101 கிராம் :

101 கிராம் :

அதன்பின் அனுப்பட்ட லுனா 16 வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி, 101 கிராம் நிலவு கிரக மண்ணை பரிசோதனைக்காக கொண்டு வந்தது.

நாசா :

நாசா :

இது அமெரிக்காவின் அப்போலோ 11 மற்றும் அப்போலோ 12 விண்கலங்களுக்கு பின்தான் நிலவில் தரை இறங்கியது என்பதும், அப்போலோ 11, சுமார் 22 கிலோ நிலவு கிரக மண்ணை பரிசோதனைக்காக கொண்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தககது.

முதல் விண்கலம் :

முதல் விண்கலம் :

ஒன்றுக்கும் மேற்ப்பட்ட விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற முதல் விண்கலம் - சோவியத் ஒன்றியத்தின் வோஸ்கொட் 1 (Voskhod 1) தான்..!

வோஸ்கொட் 1 :

வோஸ்கொட் 1 :

3 விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு, 1964-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி அன்று விண்ணில் செலுத்தப்பட்டது - வோஸ்கொட் 1.

அமெரிக்கா திணறியது :

அமெரிக்கா திணறியது :

அதே காலகட்டத்தில் இரண்டு விண்வெளி வீரர்களை ஒன்றாக விண்ணுக்கு அனுப்பவே அமெரிக்கா திணறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை :

சர்ச்சை :

அந்த காரணத்தால், இது பாதுகாப்பற்ற ஒன்று, இது புதிதாக மெருகேற்றப்பட்ட பழைய விண்கலம் என்று, வோஸ்கொட் 1 பெருவகையான சர்ச்சைகளில் சிக்கியது.

முதல் ஆப்பிரிக்க விண்வெளி :

முதல் ஆப்பிரிக்க விண்வெளி :

விண்வெளிக்குள் அனுப்பபட்ட ஆப்பிரிக்கவை சேர்ந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது சோவியத் ஒன்றியம் தான்..!

பெயர் :

பெயர் :

விண்வெளியில் நுழைந்த முதல் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் - அர்னால்டோ தமாயோ மென்டஸ் (Arnaldo Tamayo Mendez) ஆவார்..!

முதல் பழுது :

முதல் பழுது :

1985-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று, பல வகையான கோளாறுகளால் சோவியத் ஒன்றியத்தின் விண்வெளி நிலையமான சல்யுட் 7 (Salyut 7), சுத்தமாக செயல் இழந்து போனது.

மூத்த விண்வெளி வீரர்கள் :

மூத்த விண்வெளி வீரர்கள் :

சல்யுட் 7 விண்வெளி நிலைய கோளாறுகளை பழுது பார்க்கும் நோக்ககத்தில் 2 மூத்த விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்தது சோவியத் ஒன்றியம்.

நிரூபனம் :

நிரூபனம் :

அதிரஷ்டவசமாக தரையில் விழும் நிலைக்கு தள்ளப்படாத சல்யுட் 7 விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாய் பழுது பார்த்து, விண்வெளியில் பழுது பார்த்தல் சாத்தியமே என்பதை நிரூபனம் செய்தது சோவியத் ஒன்றியம்.

23 நாட்களுக்கு :

23 நாட்களுக்கு :

ஜூன் 30, 1971-ஆம் ஆண்டு, 23 நாட்களுக்கு பின் உலகின் முதல் விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்களுக்காக சோவியத் ஒன்றியமே ஆவலோடு காத்திருந்தது.

விண்வெளியில் முதல் மனித இறப்பு :

விண்வெளியில் முதல் மனித இறப்பு :

தரை இறங்கிய சோயூஸ் 11 காப்ஸ்யூலில் (Soyuz 11 capsule) இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. பின் திறந்து பார்த்த பின்னரே, 3 விண்வெளி வீரர்களும் இறந்து போன விடயம் தெரிய வந்தது.

ரத்தம் :

ரத்தம் :

இறந்துபோன மூன்று விண்வெளி வீரர்களின் முகத்திலும் நீல நிற கொப்புளங்கள் காணப்பட்டது மற்றும் காது, மூக்கு வழியாக ரத்தம் வெளியேறி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் மற்றும் கடைசி :

முதல் மற்றும் கடைசி :

விண்கலத்தை செலுத்தும் போதும், தரை இறங்கும் போது மோதலில் வெடிப்பு ஏற்பட்டும் நிறைய உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விண்ணில் ஏற்பட்ட முதல் மற்றும் கடைசி மனித உயிர் இழப்பு சம்பவம் இது தான்..!

சோவியத் ஒன்றியம் :

சோவியத் ஒன்றியம் :

இவைகள் தான், விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மிகவும் பெரும்பான்மையான இடங்களில் வைக்கப்படாத சோவியத் ஒன்றியத்தின் சாதனைகள் மற்றும் சோதனைகள் ஆகும்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
வரலாற்றில் இருந்து 'முழுமையாக' மறைக்கப்பட்ட சோவியத் சாதனைகள் - பாகம் 2. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X