உளவு, 6ஜி நெட்வொர்க் என பல சேவைகளுக்கு செயற்கைக்கோள்- தென்கொரியாவின் மாஸ்டர் பிளான்!

|

உளவு செயற்கைக்கோள்கள் முதல் மொபைல் நெட்வொர்க்குகள் வரை கவனம் செலுத்தும் வகையிலான புதிய ராக்கெட் இலக்கை நிர்ணயித்து இருக்கிறது. தென்கொரியா புதிய ராக்கெட் மீது விண்வெளி நம்பிக்கையை செலுத்துகிறது. இதுவரை, தென் கொரியா தனது வடக்கு அண்டை நாடுகளின் செயற்கைக்கோள் நுண்ணறிவுக்காக அமெரிக்காவை முழுமையாக நம்பியுள்ளது.

விண்வெளி ஏவுகணையை பரிசோதிக்க திட்டம்

விண்வெளி ஏவுகணையை பரிசோதிக்க திட்டம்

தென்கொரியா அடுத்த வாரம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விண்வெளி ஏவுகணையை பரிசோதிக்க திட்டமிட்டிருக்கிறது. இது நாட்டின் விண்வெளி திட்டம், 6ஜி நெட்வொர்க்குகள், உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் சந்திர ஆய்வுகளின் லட்சிய இலக்குகளை அடைவதற்கு முக்கிய படியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை நிறைவேறும் பட்சத்தில், கொரியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்த மூன்று நிலை என்யூஆர்ஐ ராக்கெட் பூமியில் இருந்து 600 முதல் 800 கிலோமீட்டர் தூர சுற்றுப்பாதையில் 1.5 டன் பேலோடுகளை வைக்கும் விதமாக மாதிரி செயற்கைக்கோளை விண்வெளியில் நிலை நிறுத்த இருக்கிறது.

ரஷ்யாவுடன் இணைந்து பூஸ்டர்

ரஷ்யாவுடன் இணைந்து பூஸ்டர்

பல தாமதங்கள் மற்றும் பல தோல்வியுற்ற சோதனைகளுக்கு பிறகு 2013-ல் தென் கொரியாவின் கடைசி பூஸ்டர் ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. புதிய KSLV-II NURI மட்டுமே கொரிய ராக்கெட் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது. இது நாட்டின் முதல் உள்நாட்டு விண்வெளி ஏவுகணை என லாஞ்சர் நம்பகத்தன்மை பாதுகாப்பு தர உத்தரவாதப் பிரிவின் இயக்குனர் ஹான் சாங் யோப் குறிப்பிட்டார்.

சொந்தமாக வெளியீட்டு வாகனம்

சொந்தமாக வெளியீட்டு வாகனம்

சொந்தமாக வெளியீட்டு வாகனம் வைத்திருப்பது என்பது ஒரு நாட்டிற்கு பேலோட் வகைகள் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. என ராய்ட்டர்ஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சுற்றுப்பாதையில் அனுப்ப இருக்கும் "ரகசிய பேலோட்" நாட்டிற்கு அதிக கட்டுப்பாட்டை அளிக்கிறது. கண்காணிப்பு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தும் தென்கொரியாவின் திட்டங்களுக்கு இது மிக முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதை தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் வட கொரியாவை கண்காணிக்கும் " இமைக்காத கண்கள்" என அழைக்கின்றனர்.

தென்கொரியாவின் முதல் அர்ப்பணிப்பு

தென்கொரியாவின் முதல் அர்ப்பணிப்பு

தென் கொரியா தனது வடக்கு அண்டை நாடுகளின் செயற்கைக்கோள் நுண்ணறிவுக்காக அமெரிக்காவை நம்பியிருந்தது. 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க நிறுவனத்தின் ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் தென்கொரியாவின் முதல் அர்ப்பணிப்பு இராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளை கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.

6ஜி தகவல் தொடர்பு நெட்வொர்க்

6ஜி தகவல் தொடர்பு நெட்வொர்க்

6ஜி தகவல் தொடர்பு நெட்வொர்க்கை உருவாக்கும் தென்கொரிய திட்டங்களுக்கு என்யூஆர்ஐ திட்டம் முக்கியமானதாக இருக்கிறது. இது அரசாங்க திட்டங்களை ஆதரிப்பதற்கு மட்டுமின்றி வணிக நடவடிக்கைகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என லாஞ்சர் ப்ரபலஷன் சிஸ்டம் டெவலப்மென்ட் இயக்குனர் ஓ சியுங் ஹியூப் தெரிவித்தார். தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து 2030-க்குள் நிலவில் ஆய்வு நடத்தும் என கூறப்படுகிறது.

நீண்ட தூர இலக்கு ஏவுகணை

நீண்ட தூர இலக்கு ஏவுகணை

அதேபோல் கடந்த மாதம் இந்த தகவல் குறித்து அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்களை பார்க்கலாம், வடகொரியா வார இறுதியில் புதிய நீண்ட தூர இலக்கு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அணுசக்தி திறன் கொண்ட நாட்டின் முதல் ஆயுதமாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய ஆயுதமாக பார்க்கப்பட காரணம் இது 930 மைல்கள் அதாகவு 1500 கிலோ மீட்டர் உள்ள இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அவற்றின் இலக்குகளை தாக்கி நாட்டின் பிராந்திய பகுதியில் உள்ள நீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. நாட்டின் ஆயுத திட்டத்தில் நிலையான முன்னேற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனை நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மிகவும் நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம்

மிகவும் நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம்

வடகொரியாவில் மூலோபாய பாத்திரத்தை வெளிப்படையாகக் தெரிவிக்கும் முதல் ஏவுகணை இதுவாகும் என அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச அமைத்திக்கான காரன்கி எண்டோவ்மெண்ட் மூத்த உறுப்பினர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் கேசிஎன்ஏ-வில் குறிப்பிட்டுள்ள தகவலை பார்க்கையில், நமது நாட்டின் பாதுகாப்பை மிகவும் நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம் செய்வதாகும், எதிரி படைகளின் ராணுவ சூழ்ச்சிகளை வலுவாக எதிர்க்கும் தன்மை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
South Korea's Focused on New Rocket to Aim Mobile Networks, Lunar Probes and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X