ஜெயிலில் தரையில் படுத்துறங்கும் சாம்சங் நிறுவன பில்லியனர், ஏன் தெரியுமா.?

மூன்றாம் தலைமுறை சாம்சங் வாரிசான இவர் இப்போது 71 சதுர அடி தடுப்பு செல் சிறையில் மூலையில் ஒரு கழிப்பறை கொண்ட அறையில் தரையில் படுத்து உறங்கி கொண்டிருக்கிறார்.

By Prakash
|

சாம்சங் குழுமத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு லஞ்ச, மோசடி குற்றச்சாட்டின் கீழ் சியோல் நீதிமன்றம் 5ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது, மேலும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் சாம்சங் குழுமத் தலைவர்.

முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹையின் தோழியான சோய் சூன் சில்லுக்கு சாம்சங் குழும தலைவர் ரூ.240கோடி லஞ்சம் கொடுத்துள்ளார் இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஜே ஒய் லீ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், இந்த நிலையில் இப்போது 5ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 ஜே ஒய் லீ :

ஜே ஒய் லீ :

பிரபல சாம்சங் நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஜே ஒய் லீ-க்கு இதுவொரு மோசமான காலம் என்றே கூறலாம். தென் கொரிய நாட்டின் ஜனாதிபதி பதவி நீக்கத்தின் கீழ் கேள்விகளை எழுப்பிய பல நம்பிக்கைக்கு உரிய பில்லியனர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டன. அவர்களில் ஒருவர் தான் சாம்சங் நிறுவனத்தின், ஹை-ப்ரொபைல் தலைமையாளர் ஆன ஜே ஒய் லீ.

தரையில்:

தரையில்:

மூன்றாம் தலைமுறை சாம்சங் வாரிசான இவர் இப்போது 71 சதுர அடி தடுப்பு செல் சிறையில் மூலையில் ஒரு கழிப்பறை கொண்ட அறையில் தரையில் படுத்து உறங்கி கொண்டிருக்கிறார்.

தீர்ப்பு:

தீர்ப்பு:

ஜே ஒய் லீ-க்கு 5ஆண்டுகள் சிறை தண்டனை என வந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என லீயின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தனிச்சிறை:

தனிச்சிறை:

தவிர, ஜே லீ உடன் குற்றப்பிரேரணை சம்பந்தப்பட்ட மற்ற கைதிகளுடன் இவர் பொருத்தமற்ற தொடர்புகளை மேற்கொள்வதை தடுக்கும் நோக்கத்தில், ஒரு கண்டிப்பான வரிசையில் உள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

6.2 பில்லியன் டாலர்கள் சொத்து:

6.2 பில்லியன் டாலர்கள் சொத்து:

ஜே லீ - தென் கொரியாவில் உள்ள செல்வந்தர்களுள் ஒருவராவர், 6.2 பில்லியன் டாலர்கள் சொத்து கொண்ட இவர் சியோலில் உள்ள தனது சாதாரண 4 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மாளிகையில் வாழ்ந்து வந்வர் மற்றும் சாம்சங் நுகர்வோர் மின்னணு குழுவிற்குத் தலைமை தாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

 தென்கொரியா:

தென்கொரியா:

தென்கொரியா நாட்டின் சட்டத்தின்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால்,தண்டனையை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது.

Best Mobiles in India

English summary
South Korea court jails Samsung scion Jay Y Lee for five years ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X