100 மில்லியன் டிகிரி செல்ஸியஸ்.. 7 சூரியனை தூக்கிசாப்பிட்ட செயற்கை சூரியன்.. விஞானிகளின் ஆராய்ச்சி வெற்றி..
சூரியனை விட 7 மடங்கு அதிக வெப்ப சக்தியை உருவாக்கும் செயற்கை சூரியனை தென்கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை சூரியனை வைத்து 100 மில்லியன் டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தை ஒரு சிறிய ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
நமது பூமிக்கும் (Earth) நமது சூரிய குடும்பத்தில் உள்ள சூரியனுக்கும் (Sun) இடையில் உள்ள தூரம் 93,000,000 மைல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பூமியில் இருந்து சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் (150 million kilometers) தூரத்திற்கு அப்பால் சூரியன் அமைந்துள்ளது. சூரியனின் வயது சுமார் 4.603 பில்லியன் வருடங்களை தாண்டி செல்கிறது. இன்னும் நம்முடைய சூரிய குடும்பத்தில் உள்ள சூரியனானது 5,600 செல்ஸியஸ் (Celsius) வெப்பத்தை வழங்கி வருகிறது.

சூரியனின் மையப்பகுதி எவ்வளவு வெப்ப சக்தியை கொண்டுள்ளது? (How much thermal energy does the core of the Sun contain):
இது சூரியனுக்கு வெளியில் இருக்கும் வெப்ப அளவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சூரியனின் மையப்பகுதி சுமார் 15,000,000 செல்ஸியஸ் வெப்பத்தை கொண்டுள்ளது. 15,000,000 என்ற எண் 15 மில்லியன் செல்ஸியஸ் வெப்பத்தை குறிப்பிடுகிறது. இயற்கை சூரியனின் மைய பகுதி வெப்பமே 15 மில்லியன் செல்ஸியஸை தாண்டாத நிலையில், தென் கொரிய விஞ்ஞானிகள் பூமியில் செயற்கையாக உருவாகியுள்ள சூரியனில் (Artificial Sun) 100 மில்லியன் செல்ஸியஸ் வெப்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இது சூரியனின் மைய பகுதியில் காணப்படும் வெப்பத்தை விட 7 மடங்கு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. தென் கொரிய விஞ்ஞானிகள் (South Korea Scientists), கொரியா சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் மேம்பட்ட ஆராய்ச்சி (Korea Superconducting Tokamak Advanced Research - KSTAR) சாதனத்தைப் பயன்படுத்தி, குழு 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் (100 million degrees Celsius) பிளாஸ்மா வெப்பநிலையை செயற்கை சூரியனில் இருந்து உருவாக்கியது.
இது உலகிலேயே முதல் முறை சாதனையாகும். இதற்கு முன்பு எந்த நாடும் இத்தகைய சாதனை மைல்களை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை சூரிய அணுக்கரு இணைவு உலை (artificial sun nuclear fusion reactor) என அறியப்பட்ட இந்த செயற்கை சூரியனின் வெப்பம், டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான சோதனைகளின் போது, 48 வினாடிகளில் 100 மில்லியன் செல்ஸியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

செயற்கை சூரியன் மூலம் உருவாக்கப்பட்ட சுத்தமான 100 மில்லியன் டிகிரி செல்ஸியஸ் சக்தி:
இந்த 100 மில்லியன் செல்ஸியஸ் வெப்பமானது எப்படி செயற்கை சூரியனில் இருந்து உருவாக்கப்பட்டது என்று தெரியுமா? விஞ்ஞானிகள் இரண்டு அணுக்களை ஒன்றாக இணைத்து ஒரு பெரிய அளவிலான ஆற்றலை வெளியிடுவதன் மூலம் இது உருவாக்கப்பட்டது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த செயற்கை சூரிய அணு உலை எந்த விதமான கார்பனையோ (carbon) அல்லது புவி வெப்பமடைதலை ஏற்படுத்தக்கூடிய (global warming) வேறு எந்த மாசுபாட்டையோ வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு ஆபத்தை உருவாக்கக்கூடிய எந்தவித மாசுபாட்டையும் இந்த செயற்கை சூரியன் உருவாகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சக்தியானது, சுத்தமான சக்தியாக (pure sorce of energy) சில நொடிகளில் பூமியிலேயே தயாரிக்கப்பட்டிருப்பதாக தென்கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் 300 நொடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி செல்ஸியஸ் (300 seconds 100 million degrees Celsius) வெப்பத்தை உருவாக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் பின் இந்த சக்தியை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. என்ன தான் விஞ்ஞானிகள் செயற்கையான சூரியனை உருவாக்கி, அசல் சூரியனை விட 7 மடங்கு அதிக சக்தியை உருவாக்கினாலும், இயற்கையான சூரியனில் இருந்து வெளிவரும் சரியான அளவு வெப்பத்தினால் தான் பூமியில், உயிர் உருவாகியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பூமியில் இருந்து சூரியன் சரியான தொலைவில் அமைந்திருப்பதே பூமியில் உரியிர்கள் வாழ முக்கியமான காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications