UPI வழியாக ரூ.2000 அனுப்பினால் GST-ஆ? என்பது போய்.. ஜிஎஸ்டி செலுத்த யுபிஐ.. காலம் எவ்ளோ வேகமா சுத்துதுல!
கடந்த ஜூலை மாதம் யுபிஐ சேவை தொடர்பான ஒரு பகீர் தகவல் நாடு முழுவதும் பரவியது. அது - யுபிஐ சேவை வழியாக ரூ.2000 க்கு மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா? என்கிற சந்தகேமாகும். நேரடியாக நிதி அமைச்சகமே பதில் அளிக்கும் அளவிற்கு, இந்த சந்தேகம் இந்திய மக்களை பீதியடைய செய்திருந்தது
இதுபோன்ற முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் எடுக்கப்படுகின்றன என்றும், அத்தகைய பரிந்துரை எதுவும் இதுவரை வரவில்லை என்றும், அதாவது ரூ.2000 க்கு மேல் யுபிஐ பேமண்ட் செய்தால் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்கிற எந்த விதியும் அமலுக்கு வரப்போவதில்லை என்று கூறி நிதி அமைச்சகமானது மக்களின் வயிற்றில் பாலை ஊற்றியது.

இதற்கிடையில் "காலம் எவ்ளோ வேகமா சுத்துது பாத்தீங்களா!" என்று கேட்கும் படியாக, யுபிஐ வழியாக ரூ.2000 க்கு மேல் அனுப்பினால் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா என்கிற கேள்வி மறைந்துபோய், யுபிஐ வழியாக ஜிஎஸ்டி வரி செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank) ஆனது, ஜிஎஸ்டி போர்ட்டலில் யுபிஐ அடிப்படையிலான ஜிஎஸ்டி கட்டண வசதியை (UPI-based GST payment facility) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவை ஆனது, இந்தியா முழுவதும் வரி செலுத்துவோர்கள், க்யூஆர் குறியீடுகள் மற்றும் விபிஏ (VPA) ஐடிகள் மூலம், யுபிஐ சேவையை பயன்படுத்தி தடையின்றி ஜிஎஸ்டி பணம் செலுத்த உதவும் என்று சவுத் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
சவுத் இந்தியன் வங்கியின் எஸ்ஜிஎம் & கிளை வங்கித் தலைவர் ஆன பிஜி எஸ்எஸ், சவுத் இந்தியன் வங்கி செய்துள்ள இந்த ஒருங்கிணைப்பு, எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் உட்பட வரி செலுத்துவோர்கள் அனைவரும், சவுத் இந்தியன் வங்கி மூலம் யுபிஐ வழியாக ஜிஎஸ்டி செலுத்த அனுமதிக்கிறது. இந்த விருப்பத்தின் மூலம், வரி செலுத்துவோர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை எங்கிருந்து வேண்டுமானலும் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் சவுத் இந்தியன் வங்கிக்கு - ஒரு ஏஜென்சி வங்கி (Agency Bank) ஆக, அரசு வணிகத்தை மேற்கொள்ள ஆர்பிஐ அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளதையும் சவுத் இந்தியன் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. இது மறைமுக வரிகளை வசூலிப்பதற்காக, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (Central Board of Indirect Taxes & Customs - CBIC) வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும்.
பேங்கிங் (Banking) தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) உத்தரவுகளுக்கு இணங்க, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ஆனது அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை புதிய டாட்.பேங்க்.இன் (.bank.in) டொமைனுக்கு மாற்றியுள்ளது.
இதன்கீழ் பாங்க் ஆஃப் பரோடாவின் பழைய டொமைன் ஆன www.bankofbaroda.in ஆனது புதிய மற்றும் மிகவும் பாதுகாப்பான https://bankofbaroda.bank.in டொமைனுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டள்ளது. இதனை தொடர்ந்து இனிமேல் பாங்க் ஆஃப் பரோடாவின் அனைத்து சேவைகளையும், தகவல்களையும் அணுக வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட வலைத்தள முகவரியை பயன்படுத்தமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.
யுபிஐ சேவை தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, என்பிசிஐ (NPCI) ஆனது யுபிஐ (UPI) சேவையில் பி2எம் (P2M) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்சன்-டூ-மெர்சண்ட் பேமண்ட்களுக்கான பரிவர்த்தனை வரம்புகள் (Person-to-Merchant Transaction Limits) அதிகரிகப்பட்டுள்ளது. ஆனால் பி2பி என்கிற பெர்சன் டூ பெர்சன் லிமிட் ஆனது ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாகவே நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications